Wednesday, November 17, 2010

தங்கமே தங்கம் - Update

தங்கம் விலை சீறாக ஏறிக்கொண்டிருக்கிறது. இன்று தங்கம் 10 கிராமுக்கு 20,160 ரூபாய்க்கு இந்தியாவில் விற்கிறது. மேலை நாடுகளில் ஒரு அவுன்ஸ் $1,332 க்கு விற்கிறது. ஒரு அவுன்ஸ்க்கு 28.35 கிராம் என்ற கணக்கில் ஒரு கிராம் தங்கம் $47க்கு விற்கப்படுகிறது.

இன்னும் சில வருடங்களில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ்க்கு $10,000 விலையை தொடும் என்று உறுதியாக சொல்கிறார் டெக்ஸாஸில் பென்ஷன் நிதி நடத்தும் Shayne McGuire. முழு விபரங்களுக்கு இங்கு கிளிக்கவும். ஒரு அவுன்ஸ் $10,000க்கு விற்றால் ஒரு கிராம் $352க்கு, தோராயமாக 15,500 ரூபாய்க்கு விற்க கூடும். ஒரு கிராம் தங்கம் இந்த விலைக்கு விற்றால் இந்தியாவிலும் சீனாவிலும் தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விடும். அது விலையை திரும்பவும் சமப்படுத்தும். ஒரு அவுன்ஸ் தங்கம் $10,000 என்ற சிந்தனையே வேடிக்கையாக இருக்கிறது. உலகம் முழுதும் பொருளாதாரம் படு சீரழிவு, பல நாடுகள் யுத்தம் என்ற ஒரு நிலைமை வந்தால தான் தங்கம் அந்த அளவுக்கு அநியாய விலையை அடையும். ஒரு அவுன்ஸ் $2,000 என்ற நிலைமை வரலாம். $10,000?!

இதைப்பற்றிய உங்கள் சிந்தனைகளை எழுதுங்கள் ப்ளீஸ்.

6 comments:

LK said...

யூக வணிகத்தில் இருந்து தங்கம், விலக்கப்படப் போவதை சமீபத்தில் கேள்விப் பட்டேன். அது உண்மையா ? உண்மை என்றால், தங்கள் விலை உள்நாட்டில் குறையும்

kurinji said...

online trading ல் இருந்து வெளியேரினாலே, தங்கம் விலை குறையும்.

Kannan said...

I think 1ok is too much. 2k is very much possible.

I have two different thoughts -I feel Gold is already in a bubble zone and 1970's scenario may repeat. Probability - Most

Another thought, Gold will have a very good support unlike stocks. People sitting on the sides will jump in and provide support; since we are all Gold crazy (esp. India. It will remain at the current range for long time and may be a new normal.
Probability - Most :)(Now you know how much i am confused)

Again, Monetary policies of Fed and other countries, or new surprises (b swans) may change the equation.

What do you think?

Bharathi said...

LK, குறிஞ்சி: நானும் கேள்விப்பட்டேன். அதைப்பற்றிய முழுமையான விபரங்கள் எனக்கு தெரியவில்லை. ஆன்லைன் ட்ரேடிங் நிறுத்தப்படுவதனால் மட்டும் தங்கம் விலை கணிசமாக குறையுமா என்று தெரியவில்லை.

Bharathi said...

Kannan: :-) Many traders don't believe that gold is in bubble zone. There is uncertainty everywhere else. Markets go up for few days, then there is a news about some country going bankruptcy, then markets go down vigorously. With all these extreme swings, gold is holding up fairly well. Many hedge funds make good money using gold ETFs. As long as the gold is the darling of all these hedge funds and pension funds and emerging economies, the gold will remain strong. Whatever the demand is, $10,000 per ounce seems to be a far-fetched theory.

As you said monetary policy of fed will play a vital role in gold's price. Gold price weakens if US dollar strengthens.

கார்த்திக் said...

அப்படி எல்லாம் எடுக்க வாய்ப்பில்லை
வேனும்னா மார்ஜின் அதிகப்படுத்துவாங்க
2007 ல் crude ஆயிலில் அதிகப்படுத்தியது போல

ஆனால் 4 வருசம் முன்னாடி புளூம்பர்க் சேனல்ல சொன்னான் 2000$ தொடும்னு
வாய்பிருக்கலாம் போல :-))

Related Posts Plugin for WordPress, Blogger...