தங்கத்தைப் பற்றி எழுதி கிட்டத்தட்ட ஒரு வருடமாகி விட்டது. போன வருடம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை $1,054. இன்று $1,318! இந்த வருட கடைசிக்குள் $1,350க்கு போகலாம். 
கடந்த பத்து வருடங்களாக தங்கம் ஒவ்வொரு வருடத்திலும் லாபம் கொடுத்திருக்கிறது! அமெரிக்க பொருளாதாரத்தை சரிசெய்ய அமெரிக்க அரசாங்கம் அதிக டாலர் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதால், அமெரிக்க டாலரின் மதிப்பு குறையலாம் என்று பரவலான எதிர்பார்ப்பு இருக்கிறது. டாலரின் மதிப்பு குறைந்தால், இது வரை டாலரில் முதலீடு செய்து விளையாடுபவர்களுக்கு தங்கம் புகலிடம் அளிக்கிறது.
தங்கம் விலை உயர்வதால் வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் விலையும் உயர்கிறது. உலக நாடுகள் பல தங்கள் நாட்டு கரன்சியின் மதிப்பை குறைக்க முயற்சி செய்வதாலும் (ஏற்றுமதியை ஊக்குவிக்க) தங்கத்தின் கவர்ச்சி அதிகமாகி விட்டது. தங்கத்தை ட்ரேட் செய்யும் பெரிய நிதி நிறுவனங்களின் காட்டில் மழை. அதே சமயம் இந்தியாவின் நடுத்தர வர்க்கத்திற்கு தங்கம் எட்டாத உயரத்துக்கு போய் கொண்டிருக்கிறது.
தொடர்புள்ள இணைப்பு: தங்கமே தங்கம் Update
Saturday, October 02, 2010
தங்கமே தங்கம்! (இன்னுமொரு update)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment