Tuesday, September 14, 2010

சங்கீத ஜாதி முல்லை... காணவில்லை...

பல வருடங்களாக மனதை தென்றலாக வருடிய பாடல்களின் சொந்தக்காரி மண்ணை விட்டு மறைந்து விட்டாள். ஸ்வர்ணலதா மறைந்தாலும் அவரின் பாடல்கள் என்னைப் போன்ற ரசிகர்களின் மனதில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும்.



எனது பள்ளிப்பருவத்தில் ஜென்சி தனது பாடல்களினால் (ஆயிரம் மலர்களே மலருங்கள்) பல்லாயிரக் கணக்கானோரை காதல் பித்து பிடித்து அலைய வைத்தார். பல வருடங்களுக்கு பிறகு "மாலையில் யாரோ மனதோடு பேச.." பாடலினால் ஜென்சியின் வெற்றிடத்தை தனது வெற்றியிடமாக மாற்றினார் ஸ்வர்ணலதா. அவர் குரலை போல இது வரை எந்தக் குரலையும் நான் கேட்டது கிடையாது. வாணி ஜெயராம் போல ஒரு unique voice ஸ்வர்ணலதாவுக்கு.

ஸ்வர்ணலதாவின் மறைவு இசைக்கு பெரிய இழப்பு.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...