Sunday, November 22, 2009

உதடில்லை, உதடில்லை, மந்திரிச்ச தகடு...!

தமிழில் "நான் கடவுள்" படத்திற்கு பிறகு திரும்ப திரும்ப கேட்குமளவுக்கு பாட்டுகள் வரவில்லை. இன்று வேட்டைக்காரன் (பழைய படத்தின் பெயரில் புதிய படம்) படத்திலிருந்து "கரிகாலன் காலைப் போல" பாடலை பத்து முறையாவது கேட்டு விட்டேன். பாடலை பாடியவர்கள் அனுபவித்து பாடியிருக்கிறார்கள். விஜய் ஆன்டனியின் குத்துப்பாட்டுகள் பொதுவாக இரைச்சலாக இருக்கும். கரிகாலன் பாடலில் மொத்த குழுவும் கலக்கியிருக்கிறார்கள்.

தமிழ் சினிமா கவிஞர்களின் கற்பனைக்கு அளவேயில்லை. காதலன் காதலின் உதடை வர்ணிக்கும் போது காதலி அவள் உதடை "மந்திரிச்ச தகடு" என்கிறாள். (Very true!) ஒரு சில இடங்களில் இரட்டை அர்த்தமிருந்தாலும் ("இது தேகமில்லை, தீப்பிடிச்ச மேகம்") பாடலில் காந்தம் இருக்கிறது. பாடகர்களுக்கு (சங்கீதா ராஜேஸ்வரன், சுர்ஜித்?) ஒளிமயமான எதிர்காலமிருக்கிறது.

Well, தமிழ்நிதிக்கும் மந்திரிச்ச தகடுக்கும் என்ன சம்பந்தம்? As usual, ஒன்றுமில்லை. எப்போதும் பங்கு சந்தை பற்றியெழுதி போரடித்து விட்டது!

5 comments:

மங்களூர் சிவா said...

/
Well, தமிழ்நிதிக்கும் மந்திரிச்ச தகடுக்கும் என்ன சம்பந்தம்? As usual, ஒன்றுமில்லை. எப்போதும் பங்கு சந்தை பற்றியெழுதி போரடித்து விட்டது!
/

nice!

we also need some relaxation.
:)))))))))))))))

மணிப்பக்கம் said...

வாவ், இந்த பாடலை பற்றி தாங்கள் கூறியது அனைத்தையும் வழிமொழிகிறேன்! பாடகி, யாருன்னே இதுவரை தெரியாது, அருமை! ;)

Bharathi said...

சிவா, மணி: நன்றி!

இந்த பாடல் இன்னும் அலுக்கவேயில்லை! இந்த பாடலை கேட்டுக் கொண்டே நியூயார்க் மாரத்தானில் ஓடினால் களைப்பே தெரியாது :-)

Selvakumar said...

இந்தப பாடலை பாடியவர் சங்கீதா ராஜேஸ்வரன்.

SAM said...

Matamana Song. Ungal rasanai ivalavu low aaiduchu... ellam intha kala M.Directors sa sollanum

Related Posts Plugin for WordPress, Blogger...