Thursday, October 08, 2009

தங்கமே தங்கம் - Update

தமிழ் நிதியை எழுத ஆரம்பித்து பல வருடங்களாகி விட்டன. Time flies! டிசம்பர் 2005-ல் "தங்கமே தங்கம்" என்று தங்கத்தைப் பற்றி பதிவு எழுதியிருந்தேன். கடந்த நான்கு வருடங்களில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட இரு மடங்காகியிருக்கிறது!

டிசம்பர் 2005-ல் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை $550. இன்று $1054. டாலர் மதிப்பு குறைவதால் இன்று வரலாறு காணாத விலைக்கு தங்கம் போய் விட்டது. டிசம்பர் 2005-ல் தங்கத்தைப் பற்றி எழுதும் போது அதன் விலை இரு மடங்காகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நல்ல லாபம் வரும் என்று எதிர்பார்த்தேன். தங்க மழையே பெய்திருக்கிறது!



$1050 per ounce விலையளவில் டெக்னிக்கல் சார்ட்டுகளில் தங்கத்துக்கு கண்டம் இருந்தது. $1050 விலையை தங்கம் தாண்டாது என்று பல டெக்னிக்கல் நிபுணர்கள் நினைத்தார்கள். $1050 விலையை தாண்டி விட்டதால் தங்கத்தின் வேகம் தணியாது போல தெரிகிறது.

Related Link: Gold going to $2,000 an ounce?!

3 comments:

மங்களூர் சிவா said...

அடுத்த கண்டம் எப்பன்னு எதாச்சும் தெரியுதா சார்ட்டில்?
:))

Bharathi said...

:-) Please see http://www.moolamania.com/2009/10/gold-going-to-2000-an-ounce/

கார்த்திக் said...

4 வருசம் முன்னாடியே புளூம்பர்க்ல சொன்னாங்க 1500$ தொடும்னு
நானும் நம்பல
ஆனா இப்போ தொடும்போல தான் தெரியுது :-))

Related Posts Plugin for WordPress, Blogger...