Sunday, October 18, 2009

என்ன கொடுமை சார் இது?



Search Engine Marketing மனிதர்களுக்கு பித்து பிடித்து விட்டது போல. எந்த கீ-வேர்டுகளுக்கு எந்த விளம்பரம் கொடுப்பது என்று விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது.

Thursday, October 08, 2009

தங்கமே தங்கம் - Update

தமிழ் நிதியை எழுத ஆரம்பித்து பல வருடங்களாகி விட்டன. Time flies! டிசம்பர் 2005-ல் "தங்கமே தங்கம்" என்று தங்கத்தைப் பற்றி பதிவு எழுதியிருந்தேன். கடந்த நான்கு வருடங்களில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட இரு மடங்காகியிருக்கிறது!

டிசம்பர் 2005-ல் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை $550. இன்று $1054. டாலர் மதிப்பு குறைவதால் இன்று வரலாறு காணாத விலைக்கு தங்கம் போய் விட்டது. டிசம்பர் 2005-ல் தங்கத்தைப் பற்றி எழுதும் போது அதன் விலை இரு மடங்காகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நல்ல லாபம் வரும் என்று எதிர்பார்த்தேன். தங்க மழையே பெய்திருக்கிறது!



$1050 per ounce விலையளவில் டெக்னிக்கல் சார்ட்டுகளில் தங்கத்துக்கு கண்டம் இருந்தது. $1050 விலையை தங்கம் தாண்டாது என்று பல டெக்னிக்கல் நிபுணர்கள் நினைத்தார்கள். $1050 விலையை தாண்டி விட்டதால் தங்கத்தின் வேகம் தணியாது போல தெரிகிறது.

Related Link: Gold going to $2,000 an ounce?!

Related Posts Plugin for WordPress, Blogger...