Tuesday, September 01, 2009

V வடிவமா அல்லது W வடிவமா அல்லது L வடிவமா?

பொருளாதார சரிவிலிருந்து அமெரிக்கா மீண்டு வருவது போல தெரிகிறது. இந்த சரிவு V வடிவத்தில் மீண்டு வரும் என்று சிலர் கணித்திருந்தார்கள் (பொருளாதாரம் வேகமாக விழுந்து அதே வேகத்தில் திரும்பவும் மேலே வரும் - ஆங்கில எழுத்து "V" வடிவத்தில்). "அதற்கெல்லாம் சான்ஸே இல்லை, பொருளாதாரம் இரண்டு முறை பலத்த அடி பட்டு, W வடிவத்தில் இரண்டு முறை recession வந்த பிறகு தான், பொருளாதாரம் சரியாகும்" என்று பல நிபுணர்கள் கணித்தார்கள்.

ரூபினி போன்ற மிக சிறந்த வல்லுனர்கள் "V வடிவமும் கிடையாது, W வடிவமும் கிடையாது, பொருளாதாரம் L வடிவத்தில் நாசமா போகும்" என்று சொன்னார்கள். பொருளாதாரம் கீழே விழுந்து அப்படியே பல மாதங்கள் விழுந்து கிடக்கும் என்பதால் "L".

சமீபத்தில் ECRI-ல் இருக்கும் நம்மூர் லட்சுமணன் "பொருளாதாரம் மீண்டு வருகிறது. W வடிவ பொருளாதார சரிவுக்கெல்லாம் சான்ஸே இல்லை." என்று நல்ல செய்தி சொல்லியிருக்கிறார்.

V, W, L -- இவற்றில் எந்த வடிவத்தில் பொருளாதாரம் மீண்டு வரும் என்ற சர்ச்சைகளுக்கிடையே சில நாட்களுக்கும் முன்னால் First Pacific Advisors-ன் தலைமை அதிகாரி ராபர்ட் "V வடிவமாவது, W வடிவமாவது, அதையெல்லாம் நம்பாதீர்கள். பொருளாதாரம் caterpillar (கம்பளிப் பூச்சி) வடிவத்தில் மேலேயும் கீழேயுமாக பல வருடங்களாக இருக்கப் போகிறது" என்று பயமுறுத்திருகிறார்.

இவர்களெல்லாம் பல மாதிரியாக "V, W, L, Caterpillar" என்று பல வடிவங்களை கணித்து நம்மை கேள்விக்குறி வடிவத்தில் மாற்றிவிட்டார்கள்.

3 comments:

கார்த்திக் said...

// இவர்களெல்லாம் பல மாதிரியாக "V, W, L, Caterpillar" என்று பல வடிவங்களை கணித்து நம்மை கேள்விக்குறி வடிவத்தில் மாற்றிவிட்டார்கள்.//

இது எல்லாமே தப்பு.இனிமேல் சந்தை M சார்ட்தான் பாலோ பண்ணப்போகுது பாருங்க :-))
(உங்க பங்குக்கு நீங்களும் சொல்லிக்கலாம்)

Bharathi said...

கலக்கி விட்டீர்கள் கார்த்திக்!!

மங்களூர் சிவா said...

:))))

Related Posts Plugin for WordPress, Blogger...