Saturday, September 26, 2009

இந்தியர்களின் வெளிநாட்டுத் திருமணங்கள்

நம் ஊரில் பல கோடிகளை செலவு செய்து திருமணம் செய்து பார்த்து சலித்துப் போய்விட்டதால், சில பணக்கார கணவான்கள் தங்கள் வீட்டு திருமணங்களை வெளி நாட்டில் நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். சுனில் முத்தா தன் மகன் திருமணத்தை சீனாவில் உள்ள மெக்காவ் MGM ஹோட்டலில் பிரமாண்டமாக நடத்தியிருக்கிறார். விருந்தாளிகள் போவதற்கு தனி விமானங்கள். புரோகிதரிலிருந்து சமையல்காரர்கள் வரை இந்தியாவிலிருந்து கொண்டு போயிருக்கிறார்கள். மாப்பிள்ளை ஊர்வலத்துக்கு யானை கிடைக்காததால், $14,000 செலவு செய்து குதிரையை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். திருமணத்துக்கான மொத்த செலவு வெறும் 23 கோடி ரூபாய் தான்.

இந்த வருடத்தில் மட்டும் பதினான்கு பணக்கார இந்தியர்களின் திருமணங்கள் வெளிநாட்டில் நடத்தப்பட்டிருக்கின்றன. இவர்களில் பெரும்பாலோர் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்பவர்கள். No wonder.

Related Link: Macau Travel Talk

3 comments:

butterfly Surya said...

இங்கே கொள்ளையடிச்சு அங்கே போய் ஆடம்பர திருமணமா..??

கார்த்திக் said...

// திருமணத்துக்கான மொத்த செலவு வெறும் 23 கோடி ரூபாய் தான்.//

:-))

மங்களூர் சிவா said...

/
பெரும்பாலோர் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்பவர்கள். No wonder.
/
/
butterfly Surya said...

இங்கே கொள்ளையடிச்சு அங்கே போய் ஆடம்பர திருமணமா..??
/

ம்
:((((

Related Posts Plugin for WordPress, Blogger...