Saturday, September 19, 2009

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை மீண்டும் உயிர் பெற்று வருகின்றது. வழக்கம் போல ஆசிய சந்தைகள் அதிவேகத்தில் மேலே ஏறி இப்போது ஓரளவுக்கு சமநிலையை கண்டிருக்கிறது. அமெரிக்க சந்தை இன்னும் சில மாதங்களுக்காவது லாபத்தைக் கொடுக்கும். நல்ல பங்குகளை வாங்கி covered call எழுதினாலே கணிசமான தொகையை சம்பாதிக்கலாம்.

கடந்த பல வாரங்களில் AAPL, GS, GE, MSFT, ISRG பங்குகளை/ஆப்ஷன்களை வாங்கினேன். பல மாதங்களுக்கு பிறகு என் கணக்கில் லாபம் தெரிகிறது. Emerging markets பரஸ்பர நிதிகள் கூட உற்சாகத்துடன் காற்றை சுவாசிக்க ஆரம்பித்திருக்கின்றது. டிசம்பர் வரைக்குமாவது இந்த நிலைமை நீடித்தால் பரவாயில்லை.

அமெரிக்க மத்திய வங்கி சேர்மன் "பொருளாதார சரிவு பெரும்பாலும் முடிந்து விட்டது" என்று சொல்லியிருக்கிறார். (தொடர்புள்ள பதிவு: Recession ended in July) அவர் அப்படி சொன்னதே பொருளாதார சரிவு முடிந்து விட்டதற்கான அறிகுறி தான். வேலையில்லா திண்டாட்டமும் குறைந்து விட்டால் பங்கு சந்தைகள் அதிக பலம் பெறும்.

2 comments:

aanmiga kadal said...

your post is very useful to me
thank u
by
www.aanmigakkadal.blogspot.com

மங்களூர் சிவா said...

/
பல மாதங்களுக்கு பிறகு என் கணக்கில் லாபம் தெரிகிறது
/

இங்கும் அதே நிலைதான். பல பங்குகளை விற்று வருகிறேன். விழும் என எதிர்பார்த்து.

Related Posts Plugin for WordPress, Blogger...