77 டாலர் அபராதத்தை தவிர்க்க ஒரு பொய் சொல்லி இன்று இரண்டு வருடம் சிறை தண்டணை அனுபவிக்கிறார் மார்கஸ். இவர் ஆஸ்திரேலியாவில் மத்திய நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்தவர். ஆஸ்திரேலிய மனித உரிமை கழகத்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார். நேஷனல் ட்ரஸ்ட் ஆப் ஆஸ்திரேலியா இவரை "தேசத்தின் பொக்கிஷம்" என்று புகழ்ந்திருக்கிறது.
ஒரு சிறு தவறால் வாழ்க்கையே தலைகீழாக போவதற்கு திரு. மார்கஸ் ஒரு உதாரணம். இவர் தனது காரில் 10 கி.மீ. அதிக வேகத்தில் போனதை ட்ராபிக் கேமரா புகைப்படம் எடுத்து விட்டது. தனது தவறை ஒத்துக் கொண்டு 77 டாலர் அபராதம் கட்டியிருக்கலாம். அதில்லாமல், தனது காரை தோழி ஒருவர் அன்று எடுத்துக் கொண்டு போனதாக பொய் சொல்லி விட்டார். இதைப்பற்றி ஒரு பத்திரிகை நிருபர் விசாரிக்கும் போது அந்த தோழி மூன்று வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டதாக தெரிய வந்தது. அங்கே ஆரம்பித்த சர்ச்சை முன்னாள் நீதிபதியை இன்னாள் சிறைக்கைதியாக மாற்றி விட்டது.
தமிழ்நாட்டில் பல கொலைகள் செய்தவர்களுக்கு கூட மாலையும் மரியாதையும் உயர்ந்த பதவிகளும் தேடி வருகின்றன. ஒரு பொய் சொன்னதால் முன்னாள் நீதிபதியாக இருந்தாலும் பரவாயில்லை என்று சிறைத் தண்டனை கொடுத்திருக்கிறார்கள் ஆஸ்திரேலியாவில். நீதி தேவதை உலகத்தின் சில பகுதிகளுக்கு மட்டும் செல்கிறார் போலிருக்கிறது.
தொடர்புள்ள இணைப்பு: Jail completes Marcus Einfeld's fall
Tuesday, April 07, 2009
நீதிபதியை துரத்திப் பிடித்த நீதி
Subscribe to:
Post Comments (Atom)

4 comments:
// தனது தவறை ஒத்துக் கொண்டு 77 டாலர் அபராதம் கட்டியிருக்கலாம்.//
எதோ சொல்லுவாங்களே யான போரது தெரியாது,எறும்பு போரது தான் தெரியும்னு.அதுக்கு யாரும் விதிவிளக்கில்லை.உலகம் பூரா மனசப்பயலுக ஒரே மாதிரி தான்.பணம்னு வரும் போது நீதிபதி கைதிங்க்ர வித்தியாசம் இல்லைங்க :-))
நன்றி கார்த்திக். அது மட்டுமல்லாமல் அதீத தன்னம்பிக்கையும் (over confidence)ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
/
நீதி தேவதை உலகத்தின் சில பகுதிகளுக்கு மட்டும் செல்கிறார் போலிருக்கிறது.
/
haa haa
:))))
/
கார்த்திக் said...
// தனது தவறை ஒத்துக் கொண்டு 77 டாலர் அபராதம் கட்டியிருக்கலாம்.//
உலகம் பூரா மனசப்பயலுக ஒரே மாதிரி தான்.பணம்னு வரும் போது நீதிபதி கைதிங்க்ர வித்தியாசம் இல்லைங்க :-))
///
ROTFL
:)))
Post a Comment