அமெரிக்காவில் பல நகரங்களில் வீடு விலை குறைந்தாலும், கலிபோர்னியாவில் இது வரை சான் டியாகோ நகரம் மட்டும் தான் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. IBM நிறுவனம் சன் மைக்ரோ சிஸ்டம் நிறுவனத்தை வாங்க போவதால் Bay area-வில் விலை இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வருகிறது. IBM நிறுவனம் இன்று 5000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி விட்டு அவர்களின் வேலையை தனது இந்திய கிளைக்கு கொடுத்து விட்டது. சன் மைக்ரோவின் 34,000 ஊழியர்களில் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை போகுமோ தெரியவில்லை. இவர்களில் பலர் bay area-வில் வசிப்பதால் அந்த பகுதியில் வீடு விலைகள் குறையலாம்.
உலகத்தில் எங்கே வீடு விலைகள் குறைந்தாலும் சென்னையை மட்டும் யாரும் அசைக்க முடியாது போலிருக்கிறது. அது பற்றி இன்னும் சில நாட்களில் பேசலாம்.
Thursday, March 26, 2009
கலிபோர்னியாவில் வீடு விலைகள் இன்னும் குறையுமா?
Subscribe to:
Post Comments (Atom)

8 comments:
/
உலகத்தில் எங்கே வீடு விலைகள் குறைந்தாலும் சென்னையை மட்டும் யாரும் அசைக்க முடியாது போலிருக்கிறது. அது பற்றி இன்னும் சில நாட்களில் பேசலாம்.
/
அதுதான் எனக்கும் புரியமாட்டேங்குது. இங்கயும் ரெண்டு பேங்க் திவால் ஆனாதான் சரிபட்டு வரும்னு நினைக்கிறேன்.
மங்களூரிலும் வீடு, நிலம் விலை குறையவில்லை
:((
நன்றி சிவா. மங்களூரிலும் இதே நிலைமை தானா?! பெங்களூரில் விலை ஓரளவுக்கு குறைந்ததாக சொன்னார்கள்.
Gina: Not sure. Comparing Sun Micro systems with Saravana bhavan would make Annachi very happy. I heard that he got the jail term, may be this prediction will make his day in the prison. Not all desis in bay area own the house anyway, so your logic doesn't hold any water.
ஆமாம் பெங்களூரில் விலை குறைந்துள்ளது. குறிப்பாக எலெக்ட்ரானிக் சிடி பகுதியில் 10 லட்சத்துக்கும் குறைவான விலையில் அபார்ட்மெண்ட்கள் கிடைக்கிறது என தொடர்ச்சியாக விளம்பரங்கள் வருகின்றது.
// உலகத்தில் எங்கே வீடு விலைகள் குறைந்தாலும் சென்னையை மட்டும் யாரும் அசைக்க முடியாது போலிருக்கிறது. அது பற்றி இன்னும் சில நாட்களில் பேசலாம்.//
சென்னை மட்டும் இல்லைங்க மொத்த இந்தியாவுலையே வாங்க முடியாது.
50 டிரிலியன் குடுக்குராங்லாமா அப்புறம் என்னங்க மறுபடியும் விலை ஏரிடப்போகுது.
கார்த்திக்: 50 ட்ரிலியன் டாலர்களா? யார் கொடுக்கிறார்கள்? எனக்கு அந்த விபரங்கள் தெரியவில்லை. இணைப்பு இருந்தால் தாருங்கள்.
// 50 டிரிலியன் குடுக்குராங்லாமா //
மன்னிக்கவும் 50 லட்சம் கோடியைதான் டிரில்லியன்னு சொல்லிட்டேன்.
இந்த இனணப்பில் படைத்தது
நன்றி கார்த்திக். அமெரிக்காவில் ஒபாமா ஒரு ட்ரிலியன் டாலர்களை உதவிக்கு பல நிறுவனங்களுக்கு கொடுக்கிறார். அவற்றில் சிறு பங்கு தான் வீடு வாங்குபவர்களை போய் சேரும். பெரும்பாலான பணம் வங்கிகளின் செல்லா கடன்களை வாங்க செலவு செய்யப்படும். அந்த ஒரு ட்ரிலியன் டாலர்களால் வீடு விலைகள் பழைய மாதிரி போக சான்ஸ் இல்லை.
தற்போதைய நிலைமையில் நல்ல சம்பளம் வாங்குபவர்கள் மட்டும் தான் அமெரிக்க வங்கிகளில் வீட்டு கடன் வாங்க முடியும்.
இது அமெரிக்க நிலைமை. இந்தியாவில் வீட்டு விலைகள் ஏறுமா, இறங்குமா... அது ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் ;-)
Post a Comment