ஜெயலலிதா 1,000 கோடி ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் மறைத்து வைத்திருக்கிறார். அவற்றில் சில கோடிகள் லண்டனில் ஹோட்டல்கள் வாங்க பயன்படுத்தப்பட்டது என்று சில வருடங்களுக்கு முன்னால் குற்றச்சாட்டு எழுந்தது. ஜெயலலிதா மட்டுமல்லாது இன்னும் பல இந்திய அரசியல்வாதிகள் ஸ்விஸ் வங்கிகளில் பணம் ஒளித்து வைத்திருப்பதாக கருத்துகள் உண்டு.
ஸ்விட்சர்லாந்து நாட்டு சட்டப்படி (1934) வங்கி கணக்குகளின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. "கிரிமினல்கள் இந்த நாட்டில் பணத்தை ஒளித்து வைக்க அனுமதிக்க மாட்டோம்" என்று சும்மா பாவ்லா காட்டிக்கொண்டு கிரிமினல்களின் பல பில்லியன் டாலர்களால் தான் ஸ்விஸ் வங்கிகள் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறது. அவற்றுக்கெல்லாம் ஆப்பு வைக்கும் காலம் வந்து விட்டது.
அமெரிக்க அதிகாரிகள் ஸ்விஸ் வங்கியான UBS AGக்கு 780 மில்லியன் டாலர்கள் அபராதம் கொடுத்து வங்கியின் ரகசிய திரையை கிழித்தெறிந்திருக்கிறார்கள். இதைப்பற்றிய அதிக விபரங்கள் இங்கே.
இதே போல இந்திய அரசாங்கம் மனது வைத்தால் ஸ்விஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கணக்கு விபரங்கள் வெளிப்படலாம். ஆனால் இந்திய அரசு மனது வைக்குமா?
Saturday, February 21, 2009
ஊழல் முதலைகளின் ஸ்விட்சர்லாந்து வங்கி ரகசியம் வெளிப்படுமா?
Subscribe to:
Post Comments (Atom)

1 comments:
// இதே போல இந்திய அரசாங்கம் மனது வைத்தால் ஸ்விஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கணக்கு விபரங்கள் வெளிப்படலாம். ஆனால் இந்திய அரசு மனது வைக்குமா? //
இது பத்தி குமுதம்ல கூட ஒரு கட்டுரை வெளியாச்சு ஆனா.அதுக்கப்புறம் என்னாச்சுன்னே தெரியல.
பத்திரிக்கைகளும் பெருசா அத கண்டுக்களை
Post a Comment