அரசியல் குடுமிபிடி சண்டைகள் முடிந்து 787 பில்லியன் டாலர் stimulus bill நிறைவேற்றப்பட்டு ஒபாமா அதை சட்டமாக்கி விட்டார். அமெரிக்க முதலீட்டாளர்கள் இன்னமும் திருப்தியடையவில்லை. இன்னும் ஏதாவது பூதம் கிளம்புமோ என்று பயந்து போய்தான் இருக்கிறார்கள்.
புதிதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் படி, நீங்கள் அமெரிக்காவில் முதல் முறையாக வீடு வாங்கினாலோ அல்லது கடந்த மூன்று வருடத்தில் வீடு வாங்காமல் இப்போது வாங்கினாலோ $8,000 வருமான வரி கிரடிட் கிடைக்கும். நவம்பர் 31, 2009க்குள் வீடு வாங்குபவர்களுக்கு இந்த சலுகை. வாங்கிய வீட்டில் குறைந்தது மூன்று வருடங்களுக்காவது வசிக்க வேண்டும்.
787 பில்லியன் டாலர்களும் அமெரிக்க பொருளாதாரத்தில் கலப்பதற்கே இன்னும் பல மாதங்களாகும். 2009 ஜூன் மாதத்தில் பொருளாதாரம் முன்னேற்றம் காணலாம் என்று நினைத்த பல நிபுணர்கள் இப்போது 2009 வருடம் முழுதும் பிரச்னை தான் என்று கருதுகிறார்கள். அமெரிக்க வங்கிகள் பல இன்னும் மீள முடியாத பிரச்னைகளில் மாட்டியிருப்பதாக பரவலான எண்ணம் இருக்கிறது. பேங்க் ஆப் அமெரிக்கா, சிட்டி பேங்க் போன்ற வங்கிகள் அரசுடமையாக்கப்பட வேண்டும் என்று பலர் விவாதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
கடந்த சில வாரங்களாக பங்குகளின் volatility படுத்தும் பாடு பெரும்பாடாக இருக்கிறது. ஒபாமா மற்றும் கெய்த்னர் இருவரும் வரும் நாட்களில் தங்களின் திட்டங்களைப் பற்றி முழு விபரங்களை அறிவித்தால் பங்கு சந்தை சீராகலாம். அமெரிக்காவின் கட்டுமான நிறுவனங்களின் (Infrastructure Companies) பங்குகள் மீது ஒரு கண் வைத்திருங்கள். அவை சீராக உயர ஆரம்பித்தால், பங்கு சந்தைக்கு அது ஒரு நல்ல அறிகுறியாக இருக்கும்.
தொடர்புள்ள இணைப்புகள்: Be Ready for More Pain | Give Some time to Fed
Wednesday, February 18, 2009
787 பில்லியன் டாலர் டானிக்
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment