ஜனவரி 2009ல் S&P 500 8.57 சதவிகிதம் விழுந்திருக்கிறது. ஜனவரியில் பங்கு சந்தை நஷ்டப்பட்டால் வருடம் முழுதும் பங்கு சந்தை நஷ்டப்படலாம் என்ற பரவலான நம்பிக்கை இருக்கிறது. அதற்கு January Barometer என்று ஒரு பெயரும் வைத்திருக்கிறார்கள். பல வருடங்களில் இப்படித்தான் நடந்திருக்கிறது.
அமெரிக்காவிலும் இப்படி ஒரு மூடநம்பிக்கையா என்று நினைக்க வேண்டாம்! பங்கு சந்தைகளில் எவ்வளவு ஏற்ற தாழ்வு ஏற்பட்டாலும், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பொதுவாக பங்கு சந்தை மேலே ஏறும். முக்கியமாக ஜனவரியில் மேலே ஏறும். புது வருடம் வரும் போது புது நம்பிக்கை வரும். பல முதலீட்டாளர்கள் பரஸ்பர நிதிகளில் பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்வார்கள். பரஸ்பர நிதிகள் தங்களிடம் வரும் பல பில்லியன் டாலர்களை பங்கு சந்தையில் முதலீடு செய்யும்போது பங்கு சந்தை உயரும். ஜனவரியில் கூட முதலீட்டாளர்களின் மனதில் உற்சாகம் இல்லாத போது அந்த வருடத்தில் பங்கு சந்தைகளுக்கு கஷ்டகாலம் தான்.
தொடர்புள்ள இணைப்புகள்: January Barometer | January drop is not a welcome sign
Friday, January 30, 2009
ஜனவரியின் தாக்கம்
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
நேத்து சன் செய்தில சொன்னாங்க போன ஜனவரில மட்டும் ஏழு வங்கிகள் மூடிட்டாங்கன்னு.
இந்தவருசமும் கொஞ்சம் சிக்கலாத்தான் இருக்கும் போல
இருக்கலாம். அமெரிக்காவில் மட்டுமல்லாது ஐரோப்பியாவிலும் இது பெரிய பிரச்னையாகி விட்டது.
Post a Comment