Wednesday, January 07, 2009

பொய் சத்யம்

ராமலிங்க ராஜூ கடைசியில் உண்மையை சொல்லியிருக்கிறார். கடந்த பல வருடங்களாக நிறுவன கணக்கு வழக்குகளில் கோல்மால் செய்து தான் பல மில்லியன் டாலர்களை லாபமாக காட்டியதாக கூறியிருக்கிறார்.



இந்தியாவில் பப்ளிக் லிமிடெட் நிறுவனத்தை நடத்துவதற்கு இந்திய அரசாங்கம் ஏகப்பட்ட கெடுபிடிகள் கொடுத்து தொழில் முனைவோர்களின் நேரத்தை வீணாக்குகிறது. இந்த கெடுபிடிகளால் இந்தியாவின் ஆடிட்டர்கள் கல்லா நிரம்பி வழிந்தது. இவ்வளவு விதிமுறைகள் இருந்தும் பல வருடங்கள் சத்யம் நிறுவனத்தால் எப்படி ஏமாற்ற முடிந்தது என்று தெரியவில்லை. அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் அனைவரும் சமோசா சாப்பிட்டுவிட்டு கையெழுத்து போட்டு விட்டு போய்விட்டார்கள் போலிருக்கிறது. கோடிக்கணக்கான ரூபாய்களை விழுங்கிய ஆடிட்டர்கள் என்ன செய்தார்கள் என்று புரியவில்லை. ஆன்டர்சன் நிறுவனம் இந்தியாவில் வேறு பெயரில் கடையை திறந்து விட்டது போல.

இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு சீரியஸான பாதிப்பை சத்யம் கொடுத்திருக்கிறது. உலக பொருளாதார வீழ்ச்சியால் இந்திய அவுட்சோர்ஸிங் நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்று நினைத்திருந்தேன். இதுவரை அப்படி ஒன்றும் நடக்கவில்லை. சத்யம் நிறுவனத்தின் சித்து விளையாட்டுகளால் பின்விளைவுகள் மோசமாக நிறையவே வாய்ப்பிருக்கிறது.

சத்யம் நிறுவனத்தின் பங்குகள் இந்திய சந்தையிலே 40 ரூபாய் லெவலுக்கு போய் விட்டது. நியூயார்க் சந்தையில் (pre-market) 86% வீழ்ந்து $1.26 என்ற விலைக்கு ட்ரேடாகிறது.

நீங்கள் என் கருத்தில் வேறுபடலாம். என்னைப் பொறுத்தவரை இந்தியாவில் பங்கு சந்தையில் ட்ரேடாகும் பல நிறுவனங்களில் transparency கிடையாது. வேறு வழியில்லாமல் ராமலிங்க ராஜூ இப்போது உண்மையை சொல்லியிருக்கிறார். இன்னும் பல ராமலிங்க ராஜூக்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். அவர்களும் உண்மை சொல்லும் நேரம் வரலாம்.

தொடர்புள்ள இணைப்புகள்: Satyam Computer head quits, admits doctoring books | Ramalinga Raju's letter to the board

3 comments:

bash said...

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. சத்தியம் ராஜு மட்டிக்கொண்டார். அதனால் உண்மையை சொல்ல வேண்டிய நிர்பந்தம். இன்னும் பல நிறுவனங்களுக்கு அப்படி நிர்பந்தம் வரவில்லை. ஒரு வேலை "பிஸ்னஸில் இதல்லாம் சகஜமப்பா.." என்று சொல்லும் அளவிற்க்கு கூட இருக்கலாம்

கார்த்திக் said...

// சத்யம் நிறுவனத்தின் பங்குகள் இந்திய சந்தையிலே 40 ரூபாய் லெவலுக்கு போய் விட்டது.//

இன்னைக்கு 13ரூபாய் வரை போனதாம்.

Bharathi said...

உங்கள் கருத்துகளுக்கு நன்றி!

ராமலிங்க ராஜூவைப் பற்றி போற்றி புகழ்பாடி ramalingaraju.com என்ற வலைத்தளம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. இன்று அதைக்காணவில்லை, 404 பிழை கொடுக்கிறது.

இது பற்றிய அதிக செய்திகள்: http://www.financialexpress.com/news/raju-followers-log-into-www.ramalingaraju.com/406334/

ராஜுவின் ஆதரவாளர்கள் சொல்லும் அளவுக்கு அவர் உண்மையிலேயே அறிவாளி தான். அதனால் தான் சத்யம் நிறுவனம் இந்தளவுக்கு வளர்ந்திருக்கிறது. எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தாலும், இன்று நிறுவனத்தின் தலையெழுத்தையே மாற்றுமளவுக்கு தவறுகள் செய்திருக்கிறாரே?

"மனிதனென்றால் தவறு செய்யாமல் இருக்க முடியுமா?" என்ற விவாதம் நன்றாகத்தான் இருக்கிறது. ராஜுகாரு செய்த "சிறிய" தவறால் பல கோடிகளை பல முதலீட்டாளர்கள் இழந்திருக்கிறார்கள். 50,000 ஊழியர்களின் வேலை பறி போய் விடும் அபாயம் இருக்கிறது.

ராஜுவின் 108 ஆம்புலன்ஸ் சர்வீஸ் சென்னையிலும் சில மாதங்களுக்கு முன்னால் தொடங்கப்பட்டது. அவரின் பொதுச்சேவைக்காக அவரிடம் மரியாதை உண்டு. பல நல்ல காரியங்களை தன் தொண்டு நிறுவனத்தின் மூலம் செய்திருக்கிறார்.

அவ்வளவு நல்லது செய்தவர், தன் கணக்கில் தில்லுமுல்லு செய்யாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...