சுலபமான வழி கூப்பன்களை உபயோகிப்பது தான். அமெரிக்க கடைகளில் பல விதமான தள்ளுபடிகளை கொடுக்கிறார்கள். ஆனால் எந்த கடையில் என்ன தள்ளுபடி என்பதை தெரிந்து கொள்ள பல விளம்பரங்களை படிப்பதை விட சிறந்த வழி கூப்பன்களுக்கான வலைத்தளங்களை பார்ப்பது தான்.
Coupons.com:
அதிக ட்ராபிக் உள்ள வலைத்தளம். உங்கள் zipcode-ஐ கொடுத்தால் உங்கள் ஏரியாவில் இன்று எந்த கடையில் என்ன தள்ளுபடி என்று தெரிந்து கொள்ளலாம்.
CouponMountain.com:
Safeway போன்ற கடைகள் மட்டுமல்லாது கம்ப்யூட்டர் கடைகளின் கூப்பன்களும் கிடைக்கின்றது.
Couponmom.com, Smartsource.com மற்றும் mygrocerydeals.com போன்ற தளங்களிலும் உபயோகமான தகவல்கள் உள்ளன.
இந்தியாவில் கூப்பன்களை மார்க்கெட்டிங் உத்தியாக பல கடைகள் பயன்படுத்துவதில்லை. அந்த நிலைமை கொஞ்சமாக மாறி வருகின்றது. அதை பணமாக்குவதற்காக கூப்பன்.காம் போன்ற வலைத்தளங்கள் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் கூப்பன்.காம் போல இலவச சேவை கொடுக்காமல் moneysaver.in போன்ற தளங்கள் 399 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றன. மணிசேவர் வலைத்தளம் தற்போது வட இந்திய நகரங்களுக்கு மட்டுமே.
மேலே குறிப்பிட்ட தளங்களை போல வேறு வலைத்தளங்கள் இருந்தால் தயவு செய்து பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளவும்.
Monday, June 30, 2008
சூப்பர் மார்க்கெட்டுகளில் பணத்தை சேமிப்பது எப்படி?
Monday, June 23, 2008
முதலீட்டாளர்களை கவர்வது எப்படி?
புதிதாக வியாபாரம் தொடங்குபவர்களுக்கு முதலீடு ஒரு பெரிய தடை. சூப்பரான ஐடியா மனதை உறுத்திக் கொண்டிருக்கும், ஆனால் அதை நடைமுறைப்படுத்த நல்ல முதலீட்டாளர்கள் (investors) கிடைக்காததால் பல ஐடியாக்கள் சூரிய வெளிச்சத்தை பார்க்காமலே மண்ணுக்குள் புதைந்திருக்கின்றன.
சிறந்த முதலீட்டாளர்களை எப்படி கவர்வது, நல்ல விதமாக முதலீடு கிடைக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி சில நல்ல வீடியோ படங்கள் vator.tv தளத்தில் உள்ளன. முதலீடு தேடுபவர்களுக்கு இது உபயோகமாக இருக்கும்.
Tuesday, June 10, 2008
துபாய் மெட்ரோ
துபாய் மெட்ரோ சமீபத்தில் ஒரு விளம்பரம் கொடுத்திருந்தது. பெரிய நிறுவனங்கள் தங்களின் பெயரை துபாய் மெட்ரோ ஸ்டேஷனுக்கு வைக்கலாம்… பல மில்லியன் டாலர்களை கொடுத்துவிட்டு.
இது ஒரு நல்ல ஐடியா. சென்னை மாநகரத்தில் மெட்ரோ ரயில்கள் விடப்படும் என்று பல வருடங்களாக பல அரசியல்வாதிகள் காதில் பூ சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு ஐடியாவை உபயோகித்து சென்னையில் உள்ள பெரிய நிறுவனங்களின் பெயரை ஸ்டேஷன்களுக்கு வைத்து மெட்ரோவை ஓட விடலாம். பட்ஜெட் பிரச்னை தீர்வதற்கு இது ஒரு நல்ல வழி.
Friday, June 06, 2008
வலைப்பதிவுகளின் வருமானம் 2000 கோடி ரூபாய்!
2006 வருடத்தில் மட்டுமே பிரபலமான வலைப்பதிவுகளின் விளம்பர வருமானம் 500 மில்லியன் டாலர்கள் (2000 கோடி ரூபாய்)! டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு அறிக்கை கூறும் விஷயம் இது.
பிரபலமான வலைப்பதிவுகளில் டாப் 15 சதவிகித வலைப்பதிவுகள் 500 மில்லியன் டாலரில் 90 சதவிகிதத்தை ($450 மில்லியன்) அள்ளியிருக்கின்றன.
வலைப்பதிவாளர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி. தமிழ் வலைப்பதிவுகளை படிப்பவர்கள் இன்னும் அதிகமானால், தமிழ் வலைப்பதிவாளர்களும் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்புகள் இருக்கின்றது. இந்தியாவில் வலைப்பதிவுகளை படிப்பவர்கள் இன்னும் குறைவாகவே உள்ளனர். இந்தியாவில் இன்டர்நெட்டை பயன்படுத்துபவர்களில் 40 சதவிகிதம் இன்டர்நெட் கஃபேயை நம்பியிருக்கிறார்கள். மேலை நாடுகளில் உள்ளது போல எல்லோரும் வீட்டிலிருந்தே இன்டர்நெட்டை உபயோகித்தால் தமிழ் வலைப்பதிவுகளை இன்னும் பல லட்சம் பேர் படிக்க வாய்ப்புள்ளது. அப்படி ஒரு நிலைமை வரும் போது உங்கள் வலைப்பதிவு பிரபலமாக இருந்தால், உங்கள் காட்டில் மழை தான்!
அப்படி ஒரு நிலைமை வரும் என்று எதிர்பார்த்து தான் ஆனந்த விகடன் வலைத்தளத்தில் வாசகர்கள் பின்னூட்டங்களை அதிகமாக எழுதுவதற்கு உற்சாகம் கொடுக்கிறார்கள். வெறுமனே படித்து விட்டு போவதை விட வாசகர்களின் interaction இருந்தால், வலைத்தளங்களுக்கு stickiness கிடைக்கும். அதன் கூடவே நிறைய பணமும் கிடைக்கும்.
தொடர்புள்ள இணைப்பு: டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு அறிக்கை (PDF)
