அமெரிக்க மத்திய வங்கி தடாலடியாக வட்டி விகிதத்தை பூஜ்யத்துக்கு கொண்டு வந்து விட்டது.
ஜப்பானில் பல வருடங்களுக்கு முன்பே பூஜ்ய வட்டி விகிதம் கொண்டு வந்தும் அதன் பொருளாதாரம் இப்போது கூட பிரகாசமாக இல்லை. பூஜ்ய வட்டி விகிதம் மட்டும் அமெரிக்க பொருளாதாரத்தை காப்பாற்றப் போவதில்லை.
நீங்கள் அமெரிக்காவில் வாழ்பவராக இருந்தால், குறைந்த வட்டி விகிதத்தை பயன்படுத்தி உங்கள் வீட்டு கடன் வட்டியை குறைக்கலாம். கிரடிட் கார்டு மற்றும் பிற கடன்களையும் குறைந்த வட்டிக்கு மாற்றலாம்.
வட்டி விகிதம் குறைந்ததால் அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும். இந்தியாவிற்கு இன்னும் சில வாரங்களில் பணம் அனுப்புவதாக திட்டமிருந்தால் அந்த டாலர்களை இப்போதே அனுப்புவது நல்லது. அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவதால் தங்கத்தின் விலை உயரலாம்.
பூஜ்யத்தை கொடுத்து Dow Jones குறியீட்டை 359 புள்ளி உயர்த்தியிருக்கிறார்கள். ஆனாலும் பங்கு சந்தையில் இன்னும் பயம் போக வில்லை. பல வங்கிகளின் ஆராய்ச்சியாளர்கள் வட்டி விகிதம் பூஜ்யத்துக்கு போகும் அளவுக்கு வேறு என்ன உட்பிரச்னையாக இருக்கும் என்று அலச ஆரம்பித்திருக்கிறார்கள். அமெரிக்க மத்திய வங்கி அதிகாரிகள் கொடுத்த பூஜ்யத்தை வைத்துக்கொண்டு இன்னும் இரண்டு வாரங்கள் பங்குச்சந்தை உயரலாம். கிறிஸ்துமஸ் தாத்தா (Santa Claus) வரும் நேரத்தில் பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு மனோதத்துவ ரீதியில் ஒரு boost கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பூஜ்ய மருந்து டிசம்பருக்கு பிறகும் வேலை செய்யுமா என்பது சந்தேகம் தான்.
தொடர்புள்ள இணைப்புகள்: Effects of Zero Interest Rate | Fed cuts interest rates to virtually zero
Wednesday, December 17, 2008
பூஜ்யத்தில் ஒரு ராஜ்ஜியம்
Subscribe to:
Post Comments (Atom)

6 comments:
பொருளாதாரத்தை காக்கும் கடைசி பிரம்மாஷ்த்திரத்தை பயன் படுத்தி விட்டனர். நிலமை இதற்கு மேல் மோசமாக போனால் என்ன செய்வார்கள்?
இந்த கேள்விக்கு பதில் அமெரிக்க மத்திய வங்கி அதிகாரிகளுக்கே தெளிவாக தெரியுமா என்பது சந்தேகம் தான். வேறு வழியில்லாமல் வட்டி விகிதத்தை பூஜ்யத்துக்கு கொண்டு வந்து விட்டார்கள். இதற்கு மேல் பிரச்னையானால், வாடிக்கையாளர்களுக்கு தாராளமாக கடன் கொடுக்கும்படி வங்கிகளை வற்புறுத்தலாம். மக்களின் வரிப்பணத்திலிருந்து மக்களுக்கே பணத்தை அள்ளி வழங்கலாம் (stimulus என்ற பெயரில்).
எதுவுமே சரி வராமல் போனால், அத்தனை இறக்குமதியை மொத்தமாக தடை செய்யலாம். அப்படி நடக்காது, நடந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
அவுட்சோர்ஸிங்கினால் வேலை இழந்த பல லட்சம் அமெரிக்கர்களுக்கு மறுபடியும் வேலை கொடுப்பதற்காக அவுட்சோர்ஸிங்கின் ரத்த நாளத்தை துண்டித்து விடலாம்.
அமெரிக்க டாலரின் மதிப்பை செயற்கையாக குறைக்கலாம் (devaluation). அப்படி செய்யும்போது அமெரிக்க ஏற்றுமதி செழிக்கும். பொருளாதாரமும் வலுப்படலாம்.
எது எப்படியோ இனிமே FOMC Meeting பற்றிய பீதி நம்ம மக்களுக்கு இருக்காது.
:-) இன்னும் சில மாதங்களுக்கு FOMC பயம் இல்லை. 2009 ஜூன் மாதத்துக்கு பிறகு வட்டி விகிதங்கள் ஏறலாம்.
/
Bharathi said...
இந்த கேள்விக்கு பதில் அமெரிக்க மத்திய வங்கி அதிகாரிகளுக்கே தெளிவாக தெரியுமா என்பது சந்தேகம் தான். வேறு வழியில்லாமல் வட்டி விகிதத்தை பூஜ்யத்துக்கு கொண்டு வந்து விட்டார்கள். இதற்கு மேல் பிரச்னையானால், வாடிக்கையாளர்களுக்கு தாராளமாக கடன் கொடுக்கும்படி வங்கிகளை வற்புறுத்தலாம். மக்களின் வரிப்பணத்திலிருந்து மக்களுக்கே பணத்தை அள்ளி வழங்கலாம் (stimulus என்ற பெயரில்).
எதுவுமே சரி வராமல் போனால், அத்தனை இறக்குமதியை மொத்தமாக தடை செய்யலாம். அப்படி நடக்காது, நடந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
அவுட்சோர்ஸிங்கினால் வேலை இழந்த பல லட்சம் அமெரிக்கர்களுக்கு மறுபடியும் வேலை கொடுப்பதற்காக அவுட்சோர்ஸிங்கின் ரத்த நாளத்தை துண்டித்து விடலாம்.
அமெரிக்க டாலரின் மதிப்பை செயற்கையாக குறைக்கலாம் (devaluation). அப்படி செய்யும்போது அமெரிக்க ஏற்றுமதி செழிக்கும். பொருளாதாரமும் வலுப்படலாம்.
/
எதோ நல்லது நடந்தா சரிதான்!
புத்தாண்டு வாழ்த்துக்கள் தமிழ்நிதி.
புத்தாண்டு வாழ்த்துக்கள் சிவா!
Post a Comment