Tuesday, December 09, 2008

மும்பை தாக்குதல் - பாகிஸ்தான் ஜனாதிபதியின் கட்டுரை

நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் "opinion" பகுதியில் நேற்று பாகிஸ்தான் ஜனாதிபதி அசிப் அலி ஜர்தாரி மும்பை தாக்குதலைப் பற்றியும் தீவிரவாதிகளை அழிப்பது பற்றியும் தன் கருத்துகளை விரிவாக எழுதியிருக்கிறார். அவசியம் படித்து பாருங்கள்.

அசிப் அலி ஜர்தாரி தீவிரவாதிகள் திட்டமிட்ட படுகுழியில் விழுந்து இந்தியாவும் பாகிஸ்தானும் அணுகுண்டு யுத்தத்தில் பல உயிர்களை இழந்தால் தீவிரவாதிகளுக்கு தான் லாபம். ஆனாலும், அசிப் அலி ஜர்தாரி இதே மும்முரத்தில் இருந்து தீவிரவாதிகளை அழித்துவிட்டு காஷ்மீர் பிரச்னைக்கு ஒரு நிரந்தர முடிவு கண்டால தான் இரு நாடுகளும் நிம்மதியாக இருக்க முடியும்.

இது வரை இருந்த பாகிஸ்தான் அரசியல்வாதிகளில் ஜர்தாரி தீவிரவாதிகள் விஷயத்தில் நேர்மையான அக்கறை காட்டுவது போல தெரிகிறது. அமெரிக்காவின் நேரடி எச்சரிக்கையும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம். பாகிஸ்தானில் உள்ள குயுக்தி ராணுவ அதிகாரிகள் உஷாராகி தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்குள் ஜர்தாரி ஜரூராக தீவிரவாதிகளையும் தீவிரவாதத்தையும் தீயில் போட்டால நல்லது.

4 comments:

கார்த்திக் said...

// காஷ்மீர் பிரச்னைக்கு ஒரு நிரந்தர முடிவு கண்டால தான் இரு நாடுகளும் நிம்மதியாக இருக்க முடியும்.//

ஆசை படுங்க தப்பில்லை

பேராசை படாதிங்க :-))

நாம நிம்மதியா இருந்தா
இரு நாட்டு அரசியல்வாதிங்க கதி....

Bharathi said...

பேராசை தான்! அரசியல்வாதிகளுக்கு இந்த விளையாட்டில் லாபம் இல்லை என்ற காலம் வரும். ஜர்தாரி எழுதிய படி ஆப்கானிஸ்தானில் ரஷ்ய ஆதிக்கத்தை அழிக்க பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மற்றவர்களையும் அழிக்கிறது. பாகிஸ்தான் அரசியல்வாதிகளையும் அழிப்பதற்கு தீவிரவாதிகள் இன்னும் அதிவேகத்தில் இறங்கும் போது நிலைமை மாறலாம்.

பெனாசீர் பூட்டோவை தீவிரவாதிகள் கொன்ற ஆத்திரம் தான் ஜர்தாரியை இன்று அவர்களுக்கு எதிராக போராட வைக்கிறது. இதே போல இன்னும் பல துயர சம்பவங்கள் நடந்தால், மக்களே ஒன்று கூடி தீவிரவாதிகளை அழித்து விடுவார்கள்.

"India Fund" என்ற பெயரில் பணம் வசூலித்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வோம் என்று மும்பையில் குரல் கேட்கிறது. தீவிரவாதம் தொடர்ந்தால் மக்களே தற்பாதுகாப்பு படை அமைத்து தீவிரவாதிகளை எதிர் கொள்வார்கள்.

நான் எழுதுவது ஏதோ "pipe dream" போல தோன்றினாலும், இது நடக்கலாம். உலக சரித்திரத்தில் பல புரட்சிகள் இப்படி தான் உருவாக்கியிருக்கின்றன.

இந்தியாவில் மக்கள் புரட்சி வந்தால் தான் அரசியல்வாதிகள் திருந்துவார்கள். திருமாளவன், ராமதாஸ் போன்றவர்களால் திணிக்கப்படும் சுயநலமான புரட்சியாக இல்லாமல், உண்மையான நேர்மையான மக்கள் புரட்சி இந்தியாவில் வரும்.

இது கனவாக கூட இருக்கலாம். இருந்து விட்டு போகட்டும். நல்ல கனவு தானே!

கார்த்திக் said...

// பெனாசீர் பூட்டோவை தீவிரவாதிகள் கொன்ற ஆத்திரம் தான் ஜர்தாரியை இன்று அவர்களுக்கு எதிராக போராட வைக்கிறது.//

இதையும் பாருங்க.
எனக்கு அவர் சொல்லுரது சரின்னுதான்படுது.

//"India Fund" என்ற பெயரில் பணம் வசூலித்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வோம் என்று மும்பையில் குரல் கேட்கிறது. தீவிரவாதம் தொடர்ந்தால் மக்களே தற்பாதுகாப்பு படை அமைத்து தீவிரவாதிகளை எதிர் கொள்வார்கள்.//

உங்கள் கோவமும் நியாயமானதே.

//இது கனவாக கூட இருக்கலாம். இருந்து விட்டு போகட்டும். நல்ல கனவு தானே!//

நம் எல்லாரது கனவும் இதுதான்.
நிச்சயம் ஒருநாள் நனவாகும்.

Bharathi said...

நன்றி கார்த்திக்! பத்ரி எப்போதுமே சூப்பராக எழுதுவார். இந்த பிரச்னையை பற்றியும் நன்றாக அலசியிருக்கிறார்.

Related Posts Plugin for WordPress, Blogger...