Thursday, November 06, 2008

ஓரின கலப்பு திருமணம் (Gay Marriage)

ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் அனைவரும் பைத்தியக்காரர்கள் என்பது என் கருத்து. ஆணும் ஆணும் கல்யாணம் செய்து கொள்வது சகிக்க முடியாத விஷயம். ஓரின சேர்க்கையை நாடுபவர்களின் மூளையில் நிச்சயமாக கோளாறு உண்டு என்று நம்புகிற ஆள் நான். என்னைப்போலவே கலிபோர்னியாவில் பலர் நினைத்ததால், Prop-8 என்ற சட்டத்திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து பலர் வாக்களித்திருக்கிறார்கள்.

ஆண் - ஆண் மற்றும் பெண் - பெண் திருமணங்களை தடை செய்ய வேண்டும் என்பது தான் Prop-8-ன் நோக்கம். நம் நாட்டில் இது போல சட்டங்களை அரசாங்கமே முடிவு செய்து அறிவிக்கும். அமெரிக்காவில் மக்களே இது போன்ற விஷயங்களில் முடிவெடுக்க முடியும். இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த தேர்தலில், கலிபோர்னியா மாநிலத்தில் Prop-8 மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று விட்டது.

ஒரு வேளை இந்த சட்ட திருத்தம் வெற்றி பெற்றால் நம்மால் கல்யாணம் செய்ய முடியாதோ என்று பீதியாகி இரு பெண்மணிகள் போன வாரமே கல்யாணம் செய்து கொண்டார்கள். இரு ஆண்களும் மோதிரம் மாட்டிக் கொண்டார்கள். இவர்கள் கல்யாணம் இப்போது செல்லுமா என்பது சந்தேகம்.

Lesbian Marriage in San Francisco

Gay Marriage in San Francisco

ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட இரு பெண்மணிகள் தங்களது 7 வயது பேரனின் கையில் Prop-8 சட்ட திருத்தத்திற்கு எதிராக விளம்பர பலகை கொடுத்து நிற்க வைத்திருக்கிறார்கள்.

7 year old boy opposing Prop-8 bad influence from gay grandmas

இன்னொரு பக்கம் Prop-8 சட்ட திருத்தத்திற்கு ஆதரவாளர்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டும் தான் கல்யாணம் என்ற பாரம்பரியம் இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறார்கள். இதற்கெல்லாம் கூட கடவுளை பிரார்த்தனை செய்ய வேண்டிய அளவுக்கு கலிகாலம் முற்றிப்போய்விட்டது.

Prop-8 supporters praying the god

Prop-8 சட்ட திருத்தம் வெற்றி பெற்றதால் ஓரின சேர்க்கையில் ஆர்வமுள்ள புள்ளிராஜா கண்ணீர் வடிக்கிறார்.Prop-8 சட்ட திருத்தத்திற்கு எதிராக நீதிமன்றங்கள் செல்ல சில லெஸ்பியன்கள் கூட்டம் கூடி ஆலோசிக்கிறார்கள். இவர்களை திருத்தவே முடியாது போலிருக்கிறது.

7 comments:

கார்த்திக் said...

// நம் நாட்டில் இது போல சட்டங்களை அரசாங்கமே முடிவு செய்து அறிவிக்கும். அமெரிக்காவில் மக்களே இது போன்ற விஷயங்களில் முடிவெடுக்க முடியும்.//

நல்ல தகவல்.

Thamizhan said...

அறுபது தமிழ் வருஷ்ங்கள் ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த பையன்கள் தானே!
அய்யப்பன் பக்தர்களை என்ன செய்யப் போகிறீர்கள்?

SK said...

பாரதி,

Even while the American Psychiatric Association (link) and the World Health Organization ( link ) do not consider homosexuality as a mental disorder, I am surprised that you do.

Do you personally know anyone in your close circle (family/friends) who is gay? அவ்வாறு இல்லை என்றால், அவர்களின் உணர்வுகளும் போராட்டங்களும் உங்களுக்குப் புரியாமல் இருக்கலாம் இல்லையா?

"ஆணும் ஆணும் கல்யாணம் செய்து கொள்வது சகிக்க முடியாத விஷயம்" என்று எழுதி உள்ளீர்கள். பல பேருக்கு இன்றும் inter-racial சேர்க்கை என்பது கூட சகிக்க முடியாத ஒரு விஷயமாகத்தான் இருந்து வருகிறது. அதற்காக இரு inter-racial காதலர்களை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று ஒரு சட்டம் சொல்லலாமா? தனி மனித விருப்பு வெறுப்புக்களால் ஒரு மக்கள் குழுவின் வாழ்வுரிமையை நிர்ணயிப்பது/பறிப்பது சரியாகுமா?

உங்கள் எழுத்தில் இருந்து homosexuality-யை "சேர்க்கை" எனும் கோணத்தில் இருந்து மட்டுமே பார்ப்பதாய்த் தெரிகிறது. எத்தனையோ வருடங்கள் வாழ்ந்து, பேரன் பேத்தி எல்லாம் எடுத்த பின்னரும், இரு வயதான பெண்மணிகள், திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர் என்றால், அது வெறும் உடல் சம்பந்தப் பட்ட விஷயம் என்று கருதுகிறீர்களா? "காதல்", "அன்பு" எனும் கோணங்கள் உங்களுக்குத் தெரியவில்லையா?

யார் மீது காதல் வரும் என்பது நாம் நிர்ணயிப்பது அல்ல. பெரும்பாலானவர்களுக்கு அது தன் race-க்குள்ளோ தனது opposite gender மீதோ அமைகிறது. சிலருக்கு அது தனது gender மீதே அமைகிறது. It is not a matter of their choice. நாளை நமது குடும்பத்திலோ, நண்பர்களில் ஒருவரோ, gay-யாக இருப்பின், அவர் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுதல் அவசியம்.

-SK

நசரேயன் said...

நல்ல தகவல்

கோவி.கண்ணன் said...

ஓரின புணர்ச்சி என்பது இருவரின் விருப்பம் அதுபற்றி ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ஆனால் திருமணம் என்பது ஆண் / பெண் இருபாலருக்கும் சமுக அங்கீகாரத்திற்கு கிடைக்கும் சடங்கு. திருமணம் என்கிற சடங்கின் வழி ஆண் பெண் இணைந்து குழந்தை பெற்றுக் கொண்டு சமூகத்தின் வருங்கால பயன்பாட்டிற்கு சந்ததிகளை விட்டுச் செல்கிறார்கள். மேலும் திருமணத்தின் மூலம் இருவருக்கும் சட்ட உதவிகளும், பாதுகாப்பும் கிடைக்கிறது.

இது சரியாக புரிந்து கொள்ளப்படாமல் ஓரின புணர்சியாளர்கள் திருமணம் செய்து கொள்வது ஏற்க முடியவில்லை. ஒருவருக்கு ஒருவர் விருப்பம் இருந்தால் அப்படியே வாழலாமே இதற்கு ஏன் இவர்கள் திருமணம் என்னும் சடங்கையே இழிவு படுத்துகிறார்கள் என்றே தெரியவில்லை. இப்படி திருமணம் செய்து கொள்பவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு என்பது வெறும் சமூக அங்கீகாரம் மட்டும் தான். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இணையும் போது இந்த பார்மாலிட்டிஸ் தேவை இல்லை என்பதே என்கருத்து.

இவர்கள் திருமணம் செய்து கொள்வதன் மூலம் இவர்களிடையே மட்டும் தான் உறவு வைத்துக் கொள்வார்களா என்பதே சந்தேகம் தான். மற்றொரு ஒத்தபாலினரைப் பார்க்கும் போது இவர்கள் சபலம் அடையாமல் இருப்பார்களா என்பதும் ஆராய்ச்சிக்கு உரியது.

திருமணம் என்கிற சடங்கை ஓரின புணர்ச்சியாளர்கள் பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

Bharathi said...

கார்த்திக், தமிழன், SK, நசரேயன் & கோவி. கண்ணன்: உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

இந்த பதிவு ஆரோக்கியமான விவாதத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறது.

அறுபது தமிழ் வருடங்கள் எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்று எனக்குத் தெரியாது. புராண கால கதைகள் உண்மையா இல்லையா என்பதே விவாதத்துக்குரியது.

தனி மனித விருப்பு வெறுப்புகளை நான் குற்றம் சொல்லவில்லை. அவரவர் விருப்பப்படி வாழட்டும். ஆனால் ஓரின சேர்க்கை செய்பவர்களால் கலாசாரம் சீரழிவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இவர்கள் தங்கள் இஷ்டப்படி இருந்ததால் தான் பல லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் இறந்திருக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் மனிதன் குரங்கோடு உடலுறவு கொண்டான். எஸ்ட்ஸ் வினை ஆரம்பித்தது. ஆண் - ஆண் உடலுறவு எய்ட்ஸ் பரவ முக்கியமான காரணம்.

ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் அன்போடும் உண்மையான பாசத்தோடும் வாழ ஆசைப்பட்டால் நன்றாக வாழட்டும். கோவி. கண்ணண் எழுதியபடி அவர்கள் திருமணம் என்ற பந்தத்தை ஏன் கலங்கப்படுத்த வேண்டும்?

இவர்கள் இப்படி செய்கின்றதால், சிறு குழந்தைகள் மனதில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்? ஏழு வயது சிறுவனின் கையில் "என் பாட்டிகள் திருமணம் செய்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி" என்ற விளம்பர பலகையை கொடுத்து நிற்க வைப்பவர் ஒரு பொறுப்பான பாட்டியா?

சாதி விட்டு சாதி கல்யாணம் செய்வதையும் ஓரின கலப்பு திருமணத்தையும் ஒன்றாக பேசுவது நியாயமில்லை. அது மானசீக காதல். இது மறை கழண்ட காதல்.

மற்றவர்களின் உணர்வை புரிந்து கொள்வது முக்கியம். நான் மறுக்கவில்லை. அதே சமயம் சிலரது முரண்பாடான செயல்களால் கலாசாரம் சீரழியும்போது அதைப்பற்றி எழுதாமலிருக்க முடியவில்லை.

SK said...

கோவி. கண்ணன், பாரதி,

பல நியாயமான கேள்விகளை முன்னிறுத்தி உள்ளீர்கள். தங்கள் எண்ண ஓட்டத்திற்கு பின்வரும் கருத்துக்களும் உதவியாய் இருக்கும் என்று நம்புகிறேன்:

<"...இவர்கள் திருமணம் செய்து கொள்வதன் மூலம் இவர்களிடையே மட்டும் தான் உறவு வைத்துக் கொள்வார்களா என்பதே சந்தேகம் தான்.">
<"...இவர்கள் தங்கள் இஷ்டப்படி இருந்ததால் தான் பல லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் இறந்திருக்கிறார்கள். ...ஆண் - ஆண் உடலுறவு எய்ட்ஸ் பரவ முக்கியமான காரணம்...">

"ஒத்த பால் திருமண உரிமை" (homosexual marriage rights) என்பது promiscuity-க்கான உரிமை என்று நான் கருதவில்லை. ஒரு பால் காதலருள் (homosexuals) (அதிலும் ஆண்-ஆண் காதலருள்) multiple sex partners அதிகமாக இருப்பது உண்மை. "காதல்" என்பதே "காமம்" எனும் அடிநிலை உணர்வின் ஒரு channelized உயர்நிலை வெளிப்பாடு எனும் போது, இந்த promiscuity-யை அவர்களுக்குத் "திருமணம்" என்கிற ஒரு channelization இல்லாமல் இருக்கும் பின்னணியில் பார்க்க வேண்டும். "திருமணம்" என்கிற channelization இல்லாத ஆதி மனிதன் காலத்தில் ஆண்-பெண் காதலரிடம் (heterosexuals) கூட free sex தானே கலாச்சாரமாக இருந்து வந்தது? அத்தகு channelization இருக்கும் போது ஆண்-ஆண் காதருள்ளும் இந்த promiscuity என்பது மற்ற மக்களுக்குள் இருக்கும் அளவுக்கே இருக்கும் என்பது என் கருத்து.

அது மட்டுமல்ல. நாம் ஒத்த பால் காதலரைப் பற்றி பேசும்போது அவருள் உள்ள shades-ஐ மறந்து விடுகின்றோம். அவருள் "ஆண்", "பெண்" என்கிற gender roles மிகவும் முக்கியமான பங்கு வகிக்கின்றன. "ஆண்-ஆண்" couples-ஐப் பார்க்கும் போது, lesbian couples are generally very very committed, even much more than their straight couple counterparts! The evolutionary instincts of a male to "propagate" and a female to "nurture" play significant roles here.

ஆக, திருமணம் என்பதற்கு நீண்ட கால சத்தியப் பிரமாணம் (ஒரு committment) வேண்டும் என்பதில் நானும் உடன்படுகிறேன். In fact, அந்த committment *மட்டும்* இருந்தால் போதும் என்று தான் சொல்கிறேன். அந்த committment இருக்கும் பொழுது, இரு வயது வந்தவர்கள் (adults), -- அவர் எந்த பாலராக இருப்பினும், அவர் காதலர் எந்த பாலராக இருப்பினும் -- திருமணம் செய்து கொள்ள முடிய வேண்டும் என்பதே என் வாதம். ஒரு சிலரின் (அல்லது பலரின்) promiscuity-யினைக் காரணம் கொண்டு , உண்மை நேசம் கொண்ட வேறு பலரின் வாழ்வுரிமையைப் பறிப்பது நியாயமில்லை.

<"...ஒருவருக்கு ஒருவர் விருப்பம் இருந்தால் அப்படியே வாழலாமே இதற்கு ஏன் இவர்கள் திருமணம் என்னும் சடங்கையே இழிவு படுத்துகிறார்கள் என்றே தெரியவில்லை.இப்படி திருமணம் செய்து கொள்பவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு என்பது வெறும் சமூக அங்கீகாரம் மட்டும் தான். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இணையும் போது இந்த பார்மாலிட்டிஸ் தேவை இல்லை என்பதே என்கருத்து.">

மேற்கூறினாற்போல், சங்கல்பத்துடனான ஒரு பந்தம் அமையும் பட்சத்தில், திருமணத்திற்கான அனைத்து உரிமைகளும் கோருவதில் என்ன தவறு இருக்க முடியும்? திருமண உரிமையில் formalities தவிர serious-ஆன உரிமைகள் பல உள்ளன. Just the fact that two are married offers a large set of default rights. எடுத்துக்காட்டிற்கு, இறப்பு என்பதை எடுத்துக்கொள்ளுங்கள். திருமணம் எனும் உரிமை உள்ள போது, ஒரு spouse இறந்து விட்டால், அவரைப் பார்ப்பதற்கோ, உடலைப் பெறுவதற்கோ அவரது மற்ற spouse-க்கு இருக்கும் முதல் உரிமை is a right we all take for granted. ஆனால், ஒரு பால் காதலர் இருவர், committed-ஆக, சாவு வரைத் தங்கள் வாழ்வைப் பகிர்ந்து கொள்ள எண்ணி, சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் போதும், அவருள் ஒருவர் இறந்து விட்டால், அவருக்கு, திருமணம் என்கிற உரிமை இல்லாததால், உடலைப் பெறும் உரிமை இல்லை.

Here is another less-serious example. Dependent விசா எனும் விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். H1B-யில் இருக்கும் ஒரு பால் காதலர் இருவர், பல வருடங்களாக committed-ஆக சேர்ந்து வாழ்ந்து இருந்தாலும், ஒருவருக்கு layoff-இனால் வேலை போய்விட்டால், இன்னொருவரின் dependent-ஆக ஆக இயலாது.

இந்த விஷயத்தில், usually, it boils down to the following subjective aspect : homosexual community-யில் உண்மையான நேசத்துடன், committed-ஆக, நிஜமாகவே யாராவது இருக்கிறார்களா என்பது தான் அது. எத்தனையோ பேர் இருப்பதற்கான quantitative ஆதாரங்களோ, facts-ஒ figures-ஒ, go only so far in telling the truth. homosexuality ஒரு "கெட்ட பழக்கம்" எனும் எண்ணத்தின் முன், அது ஒரு பழக்கமே (habit) இல்லை, ஒரு இயல்பு (nature) எனும் குரல் ஒலிப்பதற்கு பல மைல்த் தூரங்கள் செல்ல வேண்டும். ஆனால், நமது வாழ்வில், நமக்கு otherwise நம்பகமான, அன்பான ஒருவர், ஒரு பால் காதலராக இருப்பின், அவரிடம் பேசும் போது, இந்தப் புரிதல் எளிதில் அமைந்து விடுகின்றது. பல மைல்த் தொலைவும் மிக விரைவாய்க் கடக்கப்பட்டு விடுகிறது.

-SK

Related Posts Plugin for WordPress, Blogger...