Thursday, November 27, 2008

பொருளாதார சரிவை சமாளிப்பது எப்படி?

1920-களில் ஏற்பட்ட பொருளாதார சரிவிலிருந்து கற்றுக்கொண்ட சில பாடங்களை வைத்து மின்ட் வலைத்தளத்தில் நல்ல பதிவை பிரசுரித்திருக்கிறார்கள். அவை தவிர இன்னும் சில நல்ல விஷயங்கள்:

1. பொருட்களை வாங்கும் போது முடிந்த வரை டெபிட் கார்டு அல்லது பணத்தை உபயோகியுங்கள். கிரடிட் கார்டுகளை கொஞ்சம் நாள் தள்ளி வைக்கலாம்.

2. உங்களிடம் மூன்றுக்கு மேலான கிரடிட் கார்டுகள் இருந்தால், உபரியாக உள்ள கார்டுகளை கேன்சல் செய்து விட்டால் நலம். கையில் நிறைய கார்டுகள் இருந்தால் செலவை கட்டுப்படுத்துவது கடினம்.



3. பல மாதங்களாக உங்கள் கண்களை உறுத்திக்கொண்டிருந்த 60" எல்.சி.டி. டி.வி-யை இப்போது வாங்காமல் கொஞ்சம் தள்ளிப்போடலாம்.

4. உங்கள் வீட்டுக்கடன்களின் வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்பிருக்கிறதா (refinance) என்று உங்கள் வங்கி அதிகாரிகளிடம் கேளுங்கள். அமெரிக்காவில் பல வங்கிகள் தங்களிடன் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு உதவி செய்வதாக அரசாங்கத்திடம் சத்தியம் செய்திருக்கின்றன. இது பற்றிய தொடர்புள்ள பதிவு இங்கே.

5. நீங்கள் பார்க்கும் வேலை பிடிக்காமல் இருந்தாலும், ஒரு முட்டாள் மேனேஜரிடம் வேலை பார்க்கும் துரதிர்ஷ்டம் இருந்தாலும், வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள். இப்போதைக்கு வேறு வழி இல்லை. உலக முழுதும் வேலையை இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீனா போன்ற நாடுகளிலும் பொருளாதார சரிவு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அந்த நாட்டு அதிகாரிகள் கூறுகிறார்கள்.

1 comment:

செல்வேந்திரன் said...

நீங்கள் பார்க்கும் வேலை பிடிக்காமல் இருந்தாலும், ஒரு முட்டாள் மேனேஜரிடம் வேலை பார்க்கும் துரதிர்ஷ்டம் இருந்தாலும், வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள். இப்போதைக்கு வேறு வழி இல்லை. உலக முழுதும் வேலையை இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது // ஆமாங்க இந்தமாதிரி நேரத்துல ரோஷத்துல வேலையை விட்டுட்டு வந்துட்டா குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துடும். ரொம்ப சாக்கிரதையா இருக்கோனும்...

Related Posts Plugin for WordPress, Blogger...