பாப் கிட்ஸ் கட்டிட கான்ட்ராக்டர். தன் தோழி அமந்தா சமீபத்தில் வாங்கிய வீட்டின் குளியலறை சுவர்களை மாற்றும் போது சுவர்களின் நடுவே 182,000 டாலர்கள் ஒளித்து வைத்திருப்பதை கண்டு பிடித்தார். 79 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் பொருளாதார சரிவு ஏற்பட்ட போது அந்த வீட்டு சொந்தக்காரர் வங்கியில் போட மனதில்லாமல், குளியலறையில் பாதுகாத்த பணம். 
அவ்வளவு பணத்தையும் தானே எடுத்துக் கொள்ளாமல் பாப் கிட்ஸ் நேர்மையுடன் தன் தோழியிடம் உண்மையை சொல்லியிருக்கிறார். அந்த பணத்தை எப்படி பிரிப்பது என்பதில் தகராறு ஆரம்பித்து இன்று அமந்தா வாங்கிய வீட்டின் ஒரிஜினல் சொந்தக்காரர் குடும்ப வாரிசுகளும் புதையலுக்கு உரிமை கொண்டாடுகிறார்கள். இது பற்றிய முழு விபரங்கள் இங்கே.
சில சமயங்களில் நேர்மையாக நடந்து கொண்டாலும் பிரச்னை வரத்தான் செய்கிறது.
Sunday, November 09, 2008
குளியலறையில் கிடைத்த புதையல்
Posted by
Bharathi
at
9:58 PM
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
// 79 வருடங்களுக்கு முன்பு //
பழைய நோட்டுக்கள் அங்கு இன்னும் செல்லுபடியாகுதா.
ஆச்சர்யம்தான்.
வணக்கம் கார்த்திக். 1920-ல் வந்த நோட்டுகளென்பதால் "புராதன பொருட்கள்" என்று விற்று பணம் வாங்கியிருக்கலாம். 1920-ல் வந்த எந்த நோட்டும் இப்போது செல்லுபடியாவது சந்தேகம் தான்.
Post a Comment