Friday, October 10, 2008

சிங்கப்பூரின் பொருளாதார சரிவு

சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளின் பொருளாதாரமும் சரிந்து வருகின்றன. விபரங்களை இங்கே படிக்கலாம்.



ஆசிய நாடுகள் பலவற்றிலும் பங்கு சந்தைகள் மீண்டும் உயர வேண்டுமென்று மக்கள் கடவுளை பிரார்த்தனை செய்கிறார்கள். உலக அரசியல் தலைவர்களும் பொருளாதார நிபுணர்களும் எதிர்பார்த்ததை விட மிக அதிக பயம் உலகம் முழுதும் பரவி இருக்கிறது. டாட் காம் நீர்க்குமிழி உடைந்த போது இருந்த ஆபத்தை விட இப்போது அதிக ஆபத்து என்று பல நிபுணர்க்ள எச்சரிக்கிறார்கள்.

அமெரிக்காவில் நிலைமை சரியாவதற்கு 2009-ஏப்ரல் மாதமாவது ஆகும் என்று பரவலான கருத்து இருக்கிறது. நவம்பரில் நடக்கவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யாருமே அதிக மெஜாரிட்டி பெறாவிடில், இன்னும் ரொம்ப கஷ்டம்.

2 comments:

Chandran said...

இரு கேள்விகள் எழுகின்றன.

1. அமெரிக்க வங்கிகளின் நிதி நெருக்கடி எவ்வாறு ஐரோப்பிய வங்கிகளைப் பாதித்தன?

2. அமெரிக்க வங்கிகள் திவாலகிப் போனாலும் பணம் எப்படியோ அமெரிக்கப் பணச் சுற்றோட்டத்தில் தானே இருக்க வேண்டும். வங்கிகளில் இருந்து வெளியேறிய பணம் எங்கே சென்றுவிட்டன?



சந்திரன்

Bharathi said...

சூப்பர் கேள்விகள். இதற்காக ஒரு தனி பதிவை எழுதிக் கொண்டிருக்கிறேன். நாளை காலை முடித்து விடுவேன் என்று நினைக்கிறேன்! தமிழில் வேகமாக டைப் செய்வதற்கு நல்ல மென்பொருள்கள் இருந்தால் சொல்லுங்கள். நன்றி!