வால் ஸ்ட்ரீட்டின் பயம் உலகம் முழுதும் எதிரொலிக்கின்றது. சில மணி நேரங்களுக்கு முன்னால் ஆஸ்திரேலிய மத்திய வங்கி 1% வட்டி விகிதத்தை குறைத்திருக்கின்றது. ஆஸ்திரேலிய வங்கி அதிகாரிகள் நிச்சயமாக மற்ற நாடுகளின் மத்திய வங்கி உயர் அதிகாரிகளிடம் கலந்து பேசி தான் இந்த முடிவை எடுத்திருப்பார்கள். இன்னும் சில நாடுகளில் வட்டி விகிதக் குறைப்பை எதிர்பார்க்கலாம். 


அமெரிக்காவில் இன்னும் 0.75% வட்டி விகிதம் குறைக்க வேண்டும் என்று பில் கிராஸ் உட்பட பலர் வேண்டுகோள் விடுக்கிறார்கள். ஜப்பான் போல 0% வட்டி வந்தால் தான் இவர்கள் சும்மா இருப்பார்கள் போல தோன்றுகிறது. அமெரிக்காவில் தற்போது இருக்கும் பணவீக்க நிலைக்கு வட்டி விகிதத்தை குறைப்பது நல்லதல்ல. இருந்தாலும், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், புஷ் வட்டி விகிதத்தை குறைத்து நல்ல பெயர் வாங்க முயற்சிப்பார்.
சரியாக செயல்படாமல் மக்களின் பணத்தை ஏப்பம் விட்ட வங்கிகளுக்கு மட்டும் உதவாமல், அமெரிக்காவில் வியாபாரிகளுக்கு குறைந்த கால கடன்களை (short term business loans) வழங்குவதற்கு அமெரிக்க மத்திய வங்கி முயற்சி எடுத்து வருகின்றது.
700 பில்லியன் டாலர் பில் நிறைவேற்றப்பட்டாலும், முதலீட்டாளர்களுக்கு இன்னும் திருப்தி வரவில்லை. சப்-பிரைம் பிரச்னையாக ஆரம்பித்த தலைவலி இன்று “யாரை நம்புவது (fundamental question of trust)” என்ற நிலைமைக்கு வந்து நிற்கின்றது. வியாபாரம் செய்பவர்களால் கடன் வாங்க முடியவில்லை. கடன் கொடுக்கும் வங்கிகள் தான் யாரிடம் கடன் வாங்குவது என்று யோசிக்கின்றன. தற்போது உள்ள நிலைமையில் அமெரிக்காவில் வட்டிக்கடைகளின் (pawn shops) காட்டில் மழை. Cash advance, payday advance என்ற பெயரில் அதிக வட்டிக்கு பணம் விட்டு சம்பாதிக்கிறார்கள்.
ஐரோப்பிய நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு வங்கி வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகளுக்கு உத்திரவாதம் கொடுக்கின்றது. மக்களிடம் பரவும் பயத்தை கட்டுப்படுத்துவது மிக முக்கியமாகி விட்டது. பல நாட்டு மத்திய வங்கிகள் இன்று வட்டி விகிதத்தை குறைத்தால் பங்கு சந்தைகள் மீண்டும் உயரும். ஆனாலும் அது ஒரு தற்காலிக band-aid தான்.
வங்கிகளின் மீதும் அரசாங்கத்தின் மீதும் மக்களுக்கு முழு நம்பிக்கை வரும் வரை இந்த ரோலர் கோஸ்டர் பயணம் தொடரும்.
Related Links:
பொருளாதார சரிவு – 2008
செப்டம்பர் 15, 2008
Tuesday, October 07, 2008
உலகம் முழுவதும் பரவும் பயம்
Subscribe to:
Post Comments (Atom)

5 comments:
ஒரு இந்தியர் தன் குடும்பத்தைக் கொன்று தானும் சுட்டுக் கொண்டு இறந்தார் என்று இன்று செய்திகளில் படித்தேன். நிலைமையைப் பார்த்தால் பயமாகவும் பரிதாபமாகவும் இருக்கிறது.
இப்போதைக்கு 401Kவில் ஒன்றும் செய்யாமல் 25% இழப்பு ஏற்பட்டதைப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.
I didn't know this. I just searched for it and got this link: http://www.latimes.com/news/printedition/california/la-me-porterranch7-2008oct07,0,7721919.story
Very very sad.
You can also read the story in Tamil
http://www.dinamalar.com/fpnnews.asp?news_id=1970
http://thatstamil.oneindia.in/news/2008/10/07/world-indian-kills-4-of-family-and-himself.html
Thanks John.
உலகம் முழுவதும் அப்படித்தான் இருக்கு :((
டிசம்பர் 2008ல் 21000 இருந்த சென்செக்ஸ் இப்போது 11200 இன்னும் குறையும் என கணிப்புகள் :((
Post a Comment