Friday, June 06, 2008

வலைப்பதிவுகளின் வருமானம் 2000 கோடி ரூபாய்!

2006 வருடத்தில் மட்டுமே பிரபலமான வலைப்பதிவுகளின் விளம்பர வருமானம் 500 மில்லியன் டாலர்கள் (2000 கோடி ரூபாய்)! டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு அறிக்கை கூறும் விஷயம் இது.

பிரபலமான வலைப்பதிவுகளில் டாப் 15 சதவிகித வலைப்பதிவுகள் 500 மில்லியன் டாலரில் 90 சதவிகிதத்தை ($450 மில்லியன்) அள்ளியிருக்கின்றன.

வலைப்பதிவாளர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி. தமிழ் வலைப்பதிவுகளை படிப்பவர்கள் இன்னும் அதிகமானால், தமிழ் வலைப்பதிவாளர்களும் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்புகள் இருக்கின்றது. இந்தியாவில் வலைப்பதிவுகளை படிப்பவர்கள் இன்னும் குறைவாகவே உள்ளனர். இந்தியாவில் இன்டர்நெட்டை பயன்படுத்துபவர்களில் 40 சதவிகிதம் இன்டர்நெட் கஃபேயை நம்பியிருக்கிறார்கள். மேலை நாடுகளில் உள்ளது போல எல்லோரும் வீட்டிலிருந்தே இன்டர்நெட்டை உபயோகித்தால் தமிழ் வலைப்பதிவுகளை இன்னும் பல லட்சம் பேர் படிக்க வாய்ப்புள்ளது. அப்படி ஒரு நிலைமை வரும் போது உங்கள் வலைப்பதிவு பிரபலமாக இருந்தால், உங்கள் காட்டில் மழை தான்!

அப்படி ஒரு நிலைமை வரும் என்று எதிர்பார்த்து தான் ஆனந்த விகடன் வலைத்தளத்தில் வாசகர்கள் பின்னூட்டங்களை அதிகமாக எழுதுவதற்கு உற்சாகம் கொடுக்கிறார்கள். வெறுமனே படித்து விட்டு போவதை விட வாசகர்களின் interaction இருந்தால், வலைத்தளங்களுக்கு stickiness கிடைக்கும். அதன் கூடவே நிறைய பணமும் கிடைக்கும்.

தொடர்புள்ள இணைப்பு: டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு அறிக்கை (PDF)

2 comments:

மங்களூர் சிவா said...

நல்ல பதிவு. ரொம்ப நாளா பதிவுகளே எதும் இல்லை!?

Bharathi said...

வணக்கம் சிவா. முடிந்த வரை வாரம் ஒரு பதிவு எழுத முயற்சிக்கிறேன். முடியவில்லை! தமிழ்மணத்தில் மாதம் ஒரு முறை தான் என் பதிவுகளை சமர்ப்பிக்கிறேன். As a blog aggregator, they are suppposed to take my blog posts automatically, just like Thenkoodu does. But, it goes other way round!

Related Posts Plugin for WordPress, Blogger...