Sunday, April 13, 2008

சமூக பிணைப்பு (Social Networking)

முதலில் உங்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! அரசியல்வாதிகளுக்கு தமிழ் புத்தாண்டு தை ஒன்றில் தொடங்கினாலும் பரவாயில்லை, நமக்கு இன்று தான் தமிழ் புத்தாண்டு.

சோஷியல் நெட்வொர்க்கிங் என்ற ஒரு hype இந்தியாவிலும் பரவலாகி விட்டது. Myspace, Facebook மற்றும் Friendster போன்ற தளங்களின் பல பில்லியன் டாலர்கள் மதிப்பை பார்த்து பல வலைத்தளங்கள் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Fropper தளம் எந்த வருமானமும் இல்லாமல் பல கோடி ரூபாய்களை HBO, STAR MOVIES சேனல்களில் அள்ளி வீசி விளம்பரம் செய்கின்றது. விட்ட பத்து கோடியை சில வருடங்களில் ஆயிரம் கோடியாக அள்ளி விடலாம் என்ற நம்பிக்கை தான். Bharatstudent போன்ற தளங்கள் மாணவர்களை வளைத்து போடுவதற்காக அனைத்து தந்திரங்களும் செய்கிறார்கள். ஆனால் மாணவர்கள் யாரும் orkut தளத்தை விட்டு வெளியே வருவது போல தெரியவில்லை. ibibo தளம் வெறித்தனமாக பணத்தை தண்ணீராக செலவு செய்து வருகிறது. Bigadda, Indyarocks போன்ற தளங்களும் ரேஸில் சேர்ந்து விட்டன.

இந்த தளங்கள் அனைத்துக்கும் ஒரு common thread உள்ளது -- "சினிமா, காதல், கவர்ச்சி, செக்ஸ், சினிமா இசை, சினிமா நடிகர்கள்/நடிகைகள் பற்றிய விபரங்கள்". இந்த தளங்கள் அனைத்தும் இப்படி தான் இளைஞர்களை கவர்ந்து இழுக்கின்றன. சமூக பிணைப்புக்கும் ஷாருக்கானுக்கும் என்ன சம்பந்தம்? ஷாருக்கான் படத்தை பார்க்க வாருங்கள் என்று தான் big adda விளம்பரம் கொடுக்கிறது. இந்தியாவை பொறுத்த வரை சினிமாவை வைத்து தான் மக்களை கவர்ந்திழுக்க முடியும் என்று முடிவு செய்து விட்டார்கள் போலிருக்கிறது. அமெரிக்கா ஆன்லைன் தளத்தின் இந்திய பிரிவு கூட "தமிழில் சினிமா பற்றிய சூடான செய்திகள்" என்று தான் விளம்பரம் செய்கிறார்கள்.

என்னை பொறுத்த வரைக்கும் சோஷியல் நெட்வொர்க்கிங் என்பது just hype. 14 - 24 வயதினருக்கு டைம் பாஸ். என் தெருவில் இருக்கும் ஒரு சிடுமூஞ்சி myspace மற்றும் facebook தளங்களில் நண்பர்களை தேடிப் பார்க்கிறார். ஆனால் தெருவில் இருக்கும் எல்லோருடனும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். நம்மை சுற்றியுள்ளவர்களுடன் சந்தோஷமாக வாழ்வது தான் உண்மையான சோஷியல் நெட்வொர்க்கிங்.

7 comments:

மு.மயூரன் said...

//என்னை பொறுத்த வரைக்கும் சோஷியல் நெட்வொர்க்கிங் என்பது just hype. 14 - 24 வயதினருக்கு டைம் பாஸ். என் தெருவில் இருக்கும் ஒரு சிடுமூஞ்சி myspace மற்றும் facebook தளங்களில் நண்பர்களை தேடிப் பார்க்கிறார். ஆனால் தெருவில் இருக்கும் எல்லோருடனும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். நம்மை சுற்றியுள்ளவர்களுடன் சந்தோஷமாக வாழ்வது தான் உண்மையான சோஷியல் நெட்வொர்க்கிங்.//

ம்..

தங்கள் கருத்தோடு உடன்பாடு காண்கிறேன்.

மனிதரை கதிரையோடும் கணித்திரையோடும் கட்டிவைத்துவிட்டு, அப்படி கட்டிவைப்பதற்கான கருவிகளுக்கு social networking என்று பெயரிடுவது...

பேரரசன் said...

தங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

நம்மை சுற்றியுள்ளவர்களுடன் சந்தோஷமாக வாழ்வது தான் உண்மையான சோஷியல் நெட்வொர்க்கிங்.

மிக மிக உண்மை

Bharathi said...

மயூரன், பேரரசன்: தஙகளின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. அடிக்கடி விசிட் செய்யுங்கள்!

குமரன் (Kumaran) said...

தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் பாரதி.

கடைசி வரிகள் அருமை. மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

Bharathi said...

வணக்கம் குமரன்! நன்றி...

கார்த்திக் said...

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

//நம்மை சுற்றியுள்ளவர்களுடன் சந்தோஷமாக வாழ்வது தான் உண்மையான சோஷியல் நெட்வொர்க்கிங்.//

உண்மைதான்.

Bharathi said...

கார்த்திக்: நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...