Sunday, March 02, 2008

சுஜாதா

தமிழ் இருக்கும் வரை சுஜாதாவின் புகழ் இருக்கும். தமிழ் வலைப்பதிவர்கள் பலரைப் போல பள்ளிப் பருவத்திலிருந்து அவர் கதைகளால் ஈர்க்கப்பட்டவன் நான். அவர் எழுத்தில் எப்போதுமே இளமை இருந்தது. ஆனந்த விகடன் வலைத்தளத்தில் கடந்த ஆகஸ்ட் வரை நான் முதலில் தேடியது அவரின் “கற்றதும் பெற்றதும்”.

பல வருடங்களுக்கு முன்னால், கல்லூரியில் படிக்கும் போது ஒரு விழாவில் சுஜாதாவை நேரில் சந்தித்திருக்கிறேன். அவரும் கவிஞர் மேத்தாவும் மேடைக்கு வரும் போது திடீரென்று ஒரு ரசிகர் சுஜாதாவின் காலில் விழப் போய் விட்டார். சுஜாதா டென்ஷனாகி அவரை தடுத்தது ஞாபகமிருக்கிறது.

தமிழ் வலைப்பதிவர்கள் பலர் தங்களது வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு நல்ல எழுத்தாளரை இழந்த சோகம் தமிழ் வலைப்பதிவெங்கும் தெரிகிறது. அதே சமயம் எழுத்து எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வியப்பாகவும் இருக்கிறது.

அறிவியலை தமிழில் அழகாகவும் தெளிவாகவும் எழுத இனிமேல் சுஜாதா தான் பிறந்து வர வேண்டும்.

தொடர்புள்ள இணைப்பு: http://truetamilans.blogspot.com/2008/03/blog-post.html

2 comments:

கார்த்திக் said...

//அறிவியலை தமிழில் அழகாகவும் தெளிவாகவும் எழுத இனிமேல் சுஜாதா தான் பிறந்து வர வேண்டும்.//

உண்மைதான்.
அறிவியல் புனைவு கதைகளுக்கும் அவருக்கு நிகர் அவர்தான்
(என் இனிய இயந்திர)

நெல்லை சிவா said...

உங்க மூலமாய், தமிழனின் சுஜாதா பார்வை படிக்க முடிந்தது..

Related Posts Plugin for WordPress, Blogger...