Monday, January 07, 2008

பங்கு சந்தைகள் - Update

வருட ஆரம்பமே சரியில்லை! அமெரிக்காவில் recession வருமா, வராதா என்ற விவாதம் போய், எப்போது வரும் என்று ஆருடம் சொல்ல துவங்கியிருக்கிறார்கள். அமெரிக்காவில் இந்த வருடம் recession வராது என்பது என் கருத்து. ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருக்கும் இந்த வருடத்தில் recession வர அமெரிக்க அரசியல்வாதிகள் விட மாட்டார்கள்.

நான் பல முறை எழுதிய படி Long-term strategy தான் நிம்மதியை கொடுக்கும். ஒவ்வொரு நாளும் பங்கு விலையை பார்த்து ரத்த அழுத்தம் கூட வேண்டியதில்லை.

பங்கு சந்தைகள் விழும் போது தான் எனக்கு வேலை அதிகம். அப்போது தான் எனக்கு பிடித்த பங்குகளை பிடித்த விலையில் வாங்க முடிகிறது. இன்னும் சில வாரங்களில் நிறுவனங்கள் தங்கள் லாப நஷ்டக் கணக்கை வெளிவிட ஆரம்பிக்கும். பல நிறுவனங்கள் லாபகரமாக இருந்தால், பங்கு சந்தையின் போன வார நிலைமை தலை கீழாக மாறிவிடும்.

3 comments:

karisakattu said...

your thoughts ( Long term strategy) provide peace of mind.
Happy New Year..

Ganesh
NJ

karthik said...

பங்குசந்தையில் இந்த பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ் பிரச்சனையை கையில் எடுக்கும் வாய்ப்பு உள்ளதா. அப்படி எடுக்கும் பட்சத்தில் மார்கெட் நிலவரம் எப்படி இருக்கும்.
இது பற்றி பத்ரி அவர்கள் வலைப்பூவில் நான்படித்த லிங்க் ஐ இணைத்துள்ளேன்.
http://thoughtsintamil.blogspot.com/2007/10/blog-post_24.html

Bharathi said...

கார்த்திக், PN பற்றி பத்ரி நன்றாக எழுதியிருக்கிறார். PN பிரச்னை திரும்பவும் வந்தால் பல FIIக்கள் பங்குகளை விற்று விட தயாராக இருக்கிறார்கள். அதனால் சந்தை மறுபடியும் சரியலாம். இந்த வருடம் பார்லிமென்டை கலைத்து விட்டு மறு தேர்தல் நடத்தலாம் என்ற எண்ணம் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது.

அதனால், சந்தை திரும்பவும் சரிவதை சிதம்பரம் & கோ விரும்ப மாட்டார்கள். தேர்தல் முடியும் வரை PN பிரச்னை பற்றி யாரும் பேச மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

BTW, சில FIIக்களை மட்டும் நம்பி இந்திய சந்தை இல்லை. அதனால் PN பிரச்னையால் மட்டும் பங்கு சந்தை அதிகமாக சரிய போவதில்லை. பல வெளிநாட்டு நிதி நிறுவனங்களுக்கு இந்தியா போன்ற அதிக லாபம் வரும் சந்தைகளை விட்டு போக மனம் வராது. அதனால் நிதி அமைச்சர் துணிச்சலாக சில மாற்றங்களை ஏற்படுத்தினால்,சில FIIக்கள் ஓடினாலும் பல FIIக்கள் இங்கு தான் இருப்பார்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...