Saturday, January 19, 2008

பங்கு சந்தைகள் – இன்னுமொரு update

நான் ஏற்கனவே எழுதியிருந்தபடி அமெரிக்க அரசியல்வாதிகள் recession வராமல் தடுக்கும் வேலையில் தீவிரமாக இறங்கி விட்டார்கள். நேற்று புஷ் பேசும் போது அவர் முகத்தில் கவலை தெரிந்தது. வார்த்தைகளில் நம்பிக்கை தெரிந்தாலும், முகத்தில் தெரியவில்லை. பொருளாதார சரிவை (recession) நம்மால் கூட தடுக்க முடியாதோ என்ற பயம் இருக்குமோ?

IBM போன்ற நிறுவனங்கள் நல்ல லாபகரமான செய்தியை சொன்னாலும், பொதுவான பயத்தினால் தொழில் நுட்ப பங்குகளின் விலை குறைந்து விட்டது. கூகிள், ஆப்பிள் போன்ற நிறுவனங்களை வாங்குவதற்கு இது சரியான நேரம் என்று நினைக்கிறேன். இன்னும் விலை குறைவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. இன்னும் சில வாரங்களில் கூகிள் தன் லாப விபரங்களை தெரிவிக்கும். அதில் நல்ல செய்திகள் இருந்தால், கூகிள் ரயில் மறுபடியும் 700க்கு பயணிக்கலாம்.

என் நண்பர் ஒருவர் அமெரிக்க பங்கு சந்தை இந்திய பங்கு சந்தையை பாதிக்காது என்று என்னிடம் பந்தயம் கட்டியிருந்தார். கடந்த சில நாட்களாக போன் செய்தால் எடுக்க மாட்டேன் என்கிறார். இந்திய பங்கு சந்தை மட்டுமல்லாது, ஆஸ்திரேலிய சந்தையும் கடந்த வாரம் சரிந்து விட்டது – அமெரிக்க சந்தை ரகளைகளால்.

இன்னும் சில வாரங்களுக்கு அல்லது மாதங்களுக்கு அமெரிக்க பங்கு சந்தைகளின் நிலைமை இப்படித்தான் இருக்கும். ஜூன் கடைசி வரை கூட இந்த கொடுமை நீடிக்கும் என்று சிலர் ஆருடம் கூறுகிறார்கள்.

எது எப்படி இருந்தாலும், நல்ல தரமான பங்குகள் நல்ல விலையில் கிடைத்தால் வாங்குங்கள். நான் கண்காணித்து வரும் சில பங்குகளை கீழே கொடுத்திருக்கிறேன். இவற்றை நீங்கள் வாங்குவதற்கு முன்பு, என்னுடைய disclaimer-ஐ இரண்டு முறை படித்து விட்டு வாங்குங்கள்! Speculation மற்றும் short-term trading செய்வதற்காக பங்குகளை வாங்குவதாக இருந்தால், அமெரிக்க சந்தையில் விளையாட வேண்டாம். இந்திய பங்கு தரகர்கள் பலர் Intra-trading என்ற பெயரில் day-trading விளையாட்டு நடத்தி வருகிறார்கள். அதில் பத்தாயிரம் ரூபாய் பணத்தை போட்டு விளையாடி பார்க்கலாம்.

ஆப்பிள் (AAPL)
கூகிள் (GOOG)
நெட்சுவிட் (N)
ICE (ICE)
STP
SLT

Dollar weaken

7 comments:

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

ஓ.நீங்க அமெரிக்க பங்குச் சந்தையச் சொல்றீங்க.
இன்னைக்குத்தன் தேன்கூடு பக்கம் வந்தேன்.அப்படி உங்க பதிவ எட்டிப்பார்க்கிரேன்.

Kannan said...

Bharathi,

I just opened a trading account with Zecco. Do you have any idea about Zecco ??.

I am just going to start investing in US Market...may ask for some inputs in the futhure.

I am reading your blog from 05..always liked it.I live in Dublin....

karthik said...

Sir FED ல fund rate 0.75 bps cut பண்ணிருக்காங்க.31 Jan fomc meeting இருக்கு அதுலயும் intrest rate cut பண்ணுவாங்கன்னு சொல்றாங்க Gold market எப்படி இருக்கும்னு சொல்ல முடியுமா.

karthik said...

போன வருஷம் ஜனவரியில் இப்போது வரை USD 45 % வரை இறங்கியுள்ளது.ஆனால் INR அந்தளவுக்கு ஏன் வலுவடயவில்லை.(39.00 உடையவில்லை)

Bharathi said...

Siva: Thanks for visiting.

Kannan: I don't have account with Zecco. But, I heard good things about it. If you just want to trade without any addl tech analysis, charts, realtime streaming quotes, etc., Zecco will be fine. Thanks for your feedback. It's nice to hear encouraging feedback, it keeps me going.

Karthik: I am just writing another blog post to answer your question about gold market. Reg. INR, it's tricky. Currency markets are not very transparent. It's not really based on logic! Many factors come into play in fixing the exchange rate. To put it in one line sentence, Indian government makes sure that Indian rupee doesn't get too strong (against US$).

தென்றல் said...

பாரதி,

Templateலாம் மாத்தீட்டீங்க.. (இல்ல நான் இப்பதான் பார்க்கிறேனா..) நல்லா இருக்கு!

/இவற்றை நீங்கள் வாங்குவதற்கு முன்பு, என்னுடைய disclaimer-ஐ இரண்டு முறை படித்து விட்டு வாங்குங்கள்! /

disclaimer கண்டே பிடிக்கமுடியலையே! ;)

Bharathi said...

தென்றல்: நன்றி.

Disclaimer பற்றி ஞாபகப்படுத்தியதற்கும் நன்றி. புதிய template-ல் வலது பக்கம் disclaimer மற்றும் மின்னஞ்சல் முகவரி வைத்திருந்தேன். ஏதோ பிரச்னை. இந்த சனி, ஞாயிறுக்குள் சரி செய்து விடலாம். தமிழ்மணம் code-ஐ புதிய template-ல் போடுவதிலும் ஒரு பிரச்னை. தேன்கூடு தானாகவே வந்து சமீப பதிவுகளை எடுத்து கொள்கிறது. தமிழ்மணமும் அதே போல செய்தால் நாம் பதிவுகளை எழுதுவதில் மட்டும் கவனம் செலுத்தலாம். We don't need to worry about scripts.

உங்களுக்காக, எனது standard disclaimer:

I may own some or all the securities mentioned in this post. I am not a financial adviser.

Related Posts Plugin for WordPress, Blogger...