Thursday, January 24, 2008

சந்தையின் நிறம் சிவப்பு

உலக பங்கு சந்தைகள் பல நாட்டு முதலீட்டாளர்களை ஒரு கலக்கு கலக்கி விட்டது. பல நாடுகளின் பொருளாதாரம் அமெரிக்காவை சார்ந்துள்ளது என்பதின் அடையாளம் இது. அமெரிக்காவின் பொருளாதாரமும் வளரும் நாடுகளான இந்தியா, சீனாவை சார்ந்து உள்ளது. “Globalization” தியரியை பாடப்புத்தகத்தில் படித்தவர்கள் அதன் நடைமுறை தாக்கத்தை பார்த்து அசந்து போயிருக்கிறார்கள்.

இப்போது என்ன செய்யலாம்? எந்த பங்குகளை வாங்கலாம், விற்கலாம்? ஒன்றும் செய்யாமல் ஒதுங்கி இருப்பது நல்லது!

நேற்று உலக சந்தைகள் உயர்ந்தது. இன்று இந்திய சந்தையில் சிறிய சரிவு. தற்போதைய futures நிலவரப்படி அமெரிக்க சந்தை இன்று உயரலாம். நாளை மறுபடியும் அமெரிக்க சந்தை 500 புள்ளிகள் விழலாம். அடுத்த வாரம் மத்திய வங்கி சேர்மன் வட்டி விகிதத்தை இன்னும் குறைக்காமல் இருந்தால், அமெரிக்க சந்தை இன்னும் சரியலாம். ஏதாவது ஒரு அதிசயம் (miracle) நடந்தால் மட்டுமே அமெரிக்க சந்தையின் volatility சமப்படும்.

மத்திய வங்கி சேர்மன் பென் 0.75 சதவிகிதம் வட்டியை குறைத்தது உங்களுக்கு எப்படி இருந்ததோ எனக்கு தெரியாது. என்னைப் பொறுத்தவரை மத்திய வங்கி desperate-ஆக இருப்பது போல தெரிகிறது. அடுத்த வாரம் இன்னும் வட்டி விகிதம் குறையும் என்று மத்திய வங்கி hint கொடுத்திருக்கின்றது. நமக்கு தெரியாத பல விஷயங்கள்/புள்ளி விபரங்கள் மத்திய வங்கி சேர்மன் கையில் உள்ளது. ஒரு வேளை recession ஏற்கனவே ஆரம்பித்திருக்கலாம் என்று மத்திய வங்கி யூகிப்பது போல தெரிகின்றது.

2001-ன் பொருளாதார சரிவு mild-ஆக இருந்தது. இந்த வருடம் recession வந்தால் அதுவும் அவ்வளவாக பாதிப்பை ஏற்படுத்தாது என்று நினைக்கிறேன்.

இந்த வருட இறுதிக்குள் வட்டி விகிதம் 2.5 சதவிகிதமாக மாறலாம் என்று சந்தை நிபுணர்கள் பலர் நினைக்கிறார்கள். தற்போதைய வட்டி விகிதம் 3.5%.

வட்டி விகிதம் குறையும் போது தங்க விலை உயரும். தற்போது அது தான் நடக்கிறது. தங்கத்தில் விளையாட ஆசைப்பட்டால் உங்களுக்காகவே GLD என்ற ETF இருக்கிறது.

நான் போன பதிவில் குறிப்பிட்டிருந்த பல பங்குகள் இன்னும் கீழே வரட்டும் என்று காத்திருக்கிறேன். ஆப்பிள் பங்குகளை வாங்குவது பற்றி பல முறை யோசிக்க வேண்டும். நேற்று சொதப்பி விட்டார்கள்.

Summary: நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. அமெரிக்க பங்கு சந்தை இன்னும் சில வாரங்களுக்காவது இப்படி தடுமாறிக் கொண்டிருக்கும் (volatile) என்பது என் யூகம். தினமும் சந்தையின் ஏற்ற தாழ்வுகளை பார்த்து கவலைப்படாதீர்கள். நல்ல பங்குகள் நல்ல விலையில் கிடைத்தால் வாங்குங்கள். நீண்ட கால முதலீட்டாளர்கள் (Long-term investors) தோற்றதில்லை.

5 comments:

தென்றல் said...

/ஒரு வேளை recession ஏற்கனவே ஆரம்பித்திருக்கலாம் என்று மத்திய வங்கி யூகிப்பது போல தெரிகின்றது. /

;(

/2001-ன் பொருளாதார சரிவு mild-ஆக இருந்தது./

போனமுறை எத்தனை மாதங்கள்/ஆண்டுகள் நீடித்தது, பாரதி?

/இந்த வருடம் recession வந்தால் அதுவும் அவ்வளவாக பாதிப்பை ஏற்படுத்தாது என்று நினைக்கிறேன். /

அப்படியா? எதனால் இப்படி நினைக்கிறீங்கள்?

இப்பவே வீட்டின் மதிப்பு 15% சரிவு என்ற செய்தி பயமுறுத்துகிறதே..!

Bharathi said...

தென்றல்: போன முறை பொருளாதார சரிவு இரண்டு வருடம் (2001-2002) இருந்தது. இது பற்றிய மேலும் விபரங்களுக்கு http://www.sjsu.edu/faculty/watkins/rec2001.htm போன்ற தொடர்புகள் உபயோகமாக இருக்கும்.

இந்த வருடம் தேர்தல் வருடம். பொருளாதார சரிவின் தாக்கத்தை கட்டுப்படுத்தினால் தான் ஆள்பவர்கள் திரும்பவும் வர முடியும். நான் இதை எழுதுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னால் புஷ்ஷின் புதிய பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை பற்றிய செய்திகள் வெளியாகின்றன.

இந்த திட்டம் அமுலுக்கு வரும் போது consumer spending உயரும். இது போன்ற பல திட்டங்களை அமெரிக்க அரசியல்வாதிகள் சட்டைப்பையில் உள்ளது. பொருளாதார சரிவு இன்னும் மோசமானால் அதற்கேற்ப புதிய திட்டங்களை அமுல்படுத்துவார்கள்.

வீட்டு விலைக்கும் பொருளாதார சரிவுக்கும் சம்பந்தமில்லை. வீடு விலை உயர்ந்ததற்கு காரணம் மக்களின் பேராசை. அதை பயன்படுத்தி நிறைய பணத்தை அள்ளலாம் என்று கனவு கண்டு பல பில்லியன்களை இழந்த வங்கிகளின் முட்டாள்தனத்தால் இப்போது அமெரிக்க பொருளாதாரமே ஆட்டம் காண்கின்றது. சில வருடங்களுக்கு முன்னால் வீடு விலைகள் 200% உயர்ந்தன. தற்சமயம் சிறிது சரிந்திருக்கிறது, அவ்வளவு தான். 2005க்கு பிறகு நீங்கள் வீடு வாங்கியிருந்தால் உங்கள் வீட்டு மதிப்பு குறைந்திருக்கலாம். 2005க்கு முன்னால் வீடு வாங்கியவர்களுக்கு நஷ்டம் அதிகமில்லை.

karthik said...

//இந்த வருட இறுதிக்குள் வட்டி விகிதம் 2.5 சதவிகிதமாக மாறலாம் என்று சந்தை நிபுணர்கள் பலர் நினைக்கிறார்கள். தற்போதைய வட்டி விகிதம் 3.5%. //

அப்படி குறைத்தால் gold & crude oil விலை எங்கே இருக்கும் பெர்நேனக்கு வெளிச்சம்.

மங்களூர் சிவா said...

//
நல்ல பங்குகள் நல்ல விலையில் கிடைத்தால் வாங்குங்கள். நீண்ட கால முதலீட்டாளர்கள் (Long-term investors) தோற்றதில்லை.
//

இப்பிடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ம்ம்
நிறைய வாங்கி வெச்சிருக்கேன்!!

Bharathi said...

சிவா: கடந்த எட்டு மாதங்களில் உங்களின் கண்ணோட்டதில் மாற்றம் இருக்கிறது. நீங்கள் http://tamilnithi.blogspot.com/2007/05/blog-post.html பதிவில் எழுதிய கருத்தை படித்து பாருங்கள்.

"நட்டம் வர வாய்ப்பேயில்லை" என்று எழுதியிருந்தீர்கள். பங்கு சந்தையில் அப்படி ஒரு concept கிடையாது. நல்ல பங்குகளை நல்ல விலையில் வாங்கி வைத்தால் ரிஸ்க் குறைவு, அவ்வளவு தான்.

Related Posts Plugin for WordPress, Blogger...