இந்த உலகில் உள்ள அனைத்து நல்ல இதயங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அமெரிக்க பங்கு சந்தை 2007-ல் கொடுத்த லாப விகிதத்தை 2008-லும் கொடுக்கும் என்ற பரவலான நம்பிக்கை இருக்கிறது. இந்த வருடம் புதிய அமெரிக்க ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கவிருக்கிறார்கள். அந்த ஒரு காரணம் போதும், அமெரிக்க பங்கு சந்தை சரியாமல் தடுப்பதற்கு.
2000-ல் நடந்தது போல தேர்தல் குழப்பத்தில் முடிந்தால், பங்கு சந்தை சரிய வாய்ப்பிருக்கிறது. தேர்தல் வர இன்னும் 10 மாதங்கள் இருக்கிறது, அதனால் அதைப்பற்றி இப்போது கவலைப்பட வேண்டியதில்லை.
சில வாரங்களுக்கு முன்னால் ஆப்பிள் (AAPL) பங்குகள் பற்றி எழுதியிருந்தேன். இந்த பங்குகளின் விலை உயர்ந்து கொண்டே போகின்றது. இந்த வருடத்தில் இன்னும் உயரலாம்.
கூகிள் பங்குகள் இன்னும் உயரும். Yahoo நிறுவனத்தார் முட்டாள்களாக இருக்கும் வரை கூகிள் காட்டில் மழை தான். Yahoo பங்குகளை வாங்காமல் இருப்பது நல்லது.
மைக்ரோசாப்ட், சிஸ்கோ, GE போன்ற பங்குகள் பாதுகாப்பானவை. இந்த பங்குகளை வாங்கி covered call எழுதி வந்தால் ஒவ்வொரு மாதமும் cash flow கிடைக்கும்.
பங்குகள் தவிர, நல்ல பரஸ்பர நிதிகளிலும் முதலீடு செய்யலாம்.
இந்திய பங்கு சந்தை இன்னும் உயரலாம் என்ற நம்பிக்கையும் பரவலாக உள்ளது. இந்தியா, ரஷ்யா, பிரேசில் மற்றும் சீன நாட்டு சந்தைகள் bubble stage-ல் உள்ளது என்று கடந்த சில “வருடங்களாக” எல்லா பத்திரிகைகளும் எழுதி வருகின்றன. ஆனாலும் இந்த சந்தைகள் தான் நல்ல லாபத்தை தருகின்றன. இந்தியாவில் MCX சந்தையின் IPO இந்த வருடம் சந்தைக்கு வருகிறது. MCX பங்குகள் நல்ல லாபம் தர வாய்ப்பிருக்கிறது.
இந்தியாவில் day-trading ஒரு புது அத்தியாயத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது. அபாயத்தையும் சேர்த்து! Day-trading செய்து பணக்காரர்களாக மாறியவர்கள் வெகு சிலர். ஆனால் அதன் மூலம் ஏழைகளாக மாறியவர்கள் கோடிக்கணக்கானவர்கள்.
எம்.டெக் முடித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் பொறியியல் வல்லுனராக வேலை பார்த்த முரளி என்பவர் திருடனாக மாறி விட்டார் -- ஷேர் மார்க்கெட்டில் தான் இழந்த பணத்தை திரும்பவும் பெறுவதற்காக. இந்த வார ஜூனியர் விகடனில் இது பற்றிய விபரங்கள் உள்ளன.
Day-trading செய்வதை தவிர்த்து, அதில் போடும் பணத்தை நல்ல பரஸ்பர நிதிகளில் போட்டால் லாபம் நிச்சயம். பெரும்பாலான இந்திய பரஸ்பர நிதிகள் சக்கை போடு போடுகின்றன.
நீங்கள் எந்த சந்தையில் பணத்தை முதலீடு செய்தாலும், உங்கள் பணம் பன்மடங்காக பெருகி நிம்மதியாக வாழ என் வாழ்த்துக்கள்!
Wednesday, January 02, 2008
2008-ல் பங்கு சந்தைகள்
Posted by
Bharathi
at
6:31 AM
Labels: பங்கு சந்தை
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment