Thursday, January 24, 2008

சந்தையின் நிறம் சிவப்பு

உலக பங்கு சந்தைகள் பல நாட்டு முதலீட்டாளர்களை ஒரு கலக்கு கலக்கி விட்டது. பல நாடுகளின் பொருளாதாரம் அமெரிக்காவை சார்ந்துள்ளது என்பதின் அடையாளம் இது. அமெரிக்காவின் பொருளாதாரமும் வளரும் நாடுகளான இந்தியா, சீனாவை சார்ந்து உள்ளது. “Globalization” தியரியை பாடப்புத்தகத்தில் படித்தவர்கள் அதன் நடைமுறை தாக்கத்தை பார்த்து அசந்து போயிருக்கிறார்கள்.

இப்போது என்ன செய்யலாம்? எந்த பங்குகளை வாங்கலாம், விற்கலாம்? ஒன்றும் செய்யாமல் ஒதுங்கி இருப்பது நல்லது!

நேற்று உலக சந்தைகள் உயர்ந்தது. இன்று இந்திய சந்தையில் சிறிய சரிவு. தற்போதைய futures நிலவரப்படி அமெரிக்க சந்தை இன்று உயரலாம். நாளை மறுபடியும் அமெரிக்க சந்தை 500 புள்ளிகள் விழலாம். அடுத்த வாரம் மத்திய வங்கி சேர்மன் வட்டி விகிதத்தை இன்னும் குறைக்காமல் இருந்தால், அமெரிக்க சந்தை இன்னும் சரியலாம். ஏதாவது ஒரு அதிசயம் (miracle) நடந்தால் மட்டுமே அமெரிக்க சந்தையின் volatility சமப்படும்.

மத்திய வங்கி சேர்மன் பென் 0.75 சதவிகிதம் வட்டியை குறைத்தது உங்களுக்கு எப்படி இருந்ததோ எனக்கு தெரியாது. என்னைப் பொறுத்தவரை மத்திய வங்கி desperate-ஆக இருப்பது போல தெரிகிறது. அடுத்த வாரம் இன்னும் வட்டி விகிதம் குறையும் என்று மத்திய வங்கி hint கொடுத்திருக்கின்றது. நமக்கு தெரியாத பல விஷயங்கள்/புள்ளி விபரங்கள் மத்திய வங்கி சேர்மன் கையில் உள்ளது. ஒரு வேளை recession ஏற்கனவே ஆரம்பித்திருக்கலாம் என்று மத்திய வங்கி யூகிப்பது போல தெரிகின்றது.

2001-ன் பொருளாதார சரிவு mild-ஆக இருந்தது. இந்த வருடம் recession வந்தால் அதுவும் அவ்வளவாக பாதிப்பை ஏற்படுத்தாது என்று நினைக்கிறேன்.

இந்த வருட இறுதிக்குள் வட்டி விகிதம் 2.5 சதவிகிதமாக மாறலாம் என்று சந்தை நிபுணர்கள் பலர் நினைக்கிறார்கள். தற்போதைய வட்டி விகிதம் 3.5%.

வட்டி விகிதம் குறையும் போது தங்க விலை உயரும். தற்போது அது தான் நடக்கிறது. தங்கத்தில் விளையாட ஆசைப்பட்டால் உங்களுக்காகவே GLD என்ற ETF இருக்கிறது.

நான் போன பதிவில் குறிப்பிட்டிருந்த பல பங்குகள் இன்னும் கீழே வரட்டும் என்று காத்திருக்கிறேன். ஆப்பிள் பங்குகளை வாங்குவது பற்றி பல முறை யோசிக்க வேண்டும். நேற்று சொதப்பி விட்டார்கள்.

Summary: நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. அமெரிக்க பங்கு சந்தை இன்னும் சில வாரங்களுக்காவது இப்படி தடுமாறிக் கொண்டிருக்கும் (volatile) என்பது என் யூகம். தினமும் சந்தையின் ஏற்ற தாழ்வுகளை பார்த்து கவலைப்படாதீர்கள். நல்ல பங்குகள் நல்ல விலையில் கிடைத்தால் வாங்குங்கள். நீண்ட கால முதலீட்டாளர்கள் (Long-term investors) தோற்றதில்லை.

Saturday, January 19, 2008

பங்கு சந்தைகள் – இன்னுமொரு update

நான் ஏற்கனவே எழுதியிருந்தபடி அமெரிக்க அரசியல்வாதிகள் recession வராமல் தடுக்கும் வேலையில் தீவிரமாக இறங்கி விட்டார்கள். நேற்று புஷ் பேசும் போது அவர் முகத்தில் கவலை தெரிந்தது. வார்த்தைகளில் நம்பிக்கை தெரிந்தாலும், முகத்தில் தெரியவில்லை. பொருளாதார சரிவை (recession) நம்மால் கூட தடுக்க முடியாதோ என்ற பயம் இருக்குமோ?

IBM போன்ற நிறுவனங்கள் நல்ல லாபகரமான செய்தியை சொன்னாலும், பொதுவான பயத்தினால் தொழில் நுட்ப பங்குகளின் விலை குறைந்து விட்டது. கூகிள், ஆப்பிள் போன்ற நிறுவனங்களை வாங்குவதற்கு இது சரியான நேரம் என்று நினைக்கிறேன். இன்னும் விலை குறைவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. இன்னும் சில வாரங்களில் கூகிள் தன் லாப விபரங்களை தெரிவிக்கும். அதில் நல்ல செய்திகள் இருந்தால், கூகிள் ரயில் மறுபடியும் 700க்கு பயணிக்கலாம்.

என் நண்பர் ஒருவர் அமெரிக்க பங்கு சந்தை இந்திய பங்கு சந்தையை பாதிக்காது என்று என்னிடம் பந்தயம் கட்டியிருந்தார். கடந்த சில நாட்களாக போன் செய்தால் எடுக்க மாட்டேன் என்கிறார். இந்திய பங்கு சந்தை மட்டுமல்லாது, ஆஸ்திரேலிய சந்தையும் கடந்த வாரம் சரிந்து விட்டது – அமெரிக்க சந்தை ரகளைகளால்.

இன்னும் சில வாரங்களுக்கு அல்லது மாதங்களுக்கு அமெரிக்க பங்கு சந்தைகளின் நிலைமை இப்படித்தான் இருக்கும். ஜூன் கடைசி வரை கூட இந்த கொடுமை நீடிக்கும் என்று சிலர் ஆருடம் கூறுகிறார்கள்.

எது எப்படி இருந்தாலும், நல்ல தரமான பங்குகள் நல்ல விலையில் கிடைத்தால் வாங்குங்கள். நான் கண்காணித்து வரும் சில பங்குகளை கீழே கொடுத்திருக்கிறேன். இவற்றை நீங்கள் வாங்குவதற்கு முன்பு, என்னுடைய disclaimer-ஐ இரண்டு முறை படித்து விட்டு வாங்குங்கள்! Speculation மற்றும் short-term trading செய்வதற்காக பங்குகளை வாங்குவதாக இருந்தால், அமெரிக்க சந்தையில் விளையாட வேண்டாம். இந்திய பங்கு தரகர்கள் பலர் Intra-trading என்ற பெயரில் day-trading விளையாட்டு நடத்தி வருகிறார்கள். அதில் பத்தாயிரம் ரூபாய் பணத்தை போட்டு விளையாடி பார்க்கலாம்.

ஆப்பிள் (AAPL)
கூகிள் (GOOG)
நெட்சுவிட் (N)
ICE (ICE)
STP
SLT

Dollar weaken

Monday, January 07, 2008

பங்கு சந்தைகள் - Update

வருட ஆரம்பமே சரியில்லை! அமெரிக்காவில் recession வருமா, வராதா என்ற விவாதம் போய், எப்போது வரும் என்று ஆருடம் சொல்ல துவங்கியிருக்கிறார்கள். அமெரிக்காவில் இந்த வருடம் recession வராது என்பது என் கருத்து. ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருக்கும் இந்த வருடத்தில் recession வர அமெரிக்க அரசியல்வாதிகள் விட மாட்டார்கள்.

நான் பல முறை எழுதிய படி Long-term strategy தான் நிம்மதியை கொடுக்கும். ஒவ்வொரு நாளும் பங்கு விலையை பார்த்து ரத்த அழுத்தம் கூட வேண்டியதில்லை.

பங்கு சந்தைகள் விழும் போது தான் எனக்கு வேலை அதிகம். அப்போது தான் எனக்கு பிடித்த பங்குகளை பிடித்த விலையில் வாங்க முடிகிறது. இன்னும் சில வாரங்களில் நிறுவனங்கள் தங்கள் லாப நஷ்டக் கணக்கை வெளிவிட ஆரம்பிக்கும். பல நிறுவனங்கள் லாபகரமாக இருந்தால், பங்கு சந்தையின் போன வார நிலைமை தலை கீழாக மாறிவிடும்.

Wednesday, January 02, 2008

2008-ல் பங்கு சந்தைகள்

இந்த உலகில் உள்ள அனைத்து நல்ல இதயங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அமெரிக்க பங்கு சந்தை 2007-ல் கொடுத்த லாப விகிதத்தை 2008-லும் கொடுக்கும் என்ற பரவலான நம்பிக்கை இருக்கிறது. இந்த வருடம் புதிய அமெரிக்க ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கவிருக்கிறார்கள். அந்த ஒரு காரணம் போதும், அமெரிக்க பங்கு சந்தை சரியாமல் தடுப்பதற்கு.

2000-ல் நடந்தது போல தேர்தல் குழப்பத்தில் முடிந்தால், பங்கு சந்தை சரிய வாய்ப்பிருக்கிறது. தேர்தல் வர இன்னும் 10 மாதங்கள் இருக்கிறது, அதனால் அதைப்பற்றி இப்போது கவலைப்பட வேண்டியதில்லை.

சில வாரங்களுக்கு முன்னால் ஆப்பிள் (AAPL) பங்குகள் பற்றி எழுதியிருந்தேன். இந்த பங்குகளின் விலை உயர்ந்து கொண்டே போகின்றது. இந்த வருடத்தில் இன்னும் உயரலாம்.

கூகிள் பங்குகள் இன்னும் உயரும். Yahoo நிறுவனத்தார் முட்டாள்களாக இருக்கும் வரை கூகிள் காட்டில் மழை தான். Yahoo பங்குகளை வாங்காமல் இருப்பது நல்லது.

மைக்ரோசாப்ட், சிஸ்கோ, GE போன்ற பங்குகள் பாதுகாப்பானவை. இந்த பங்குகளை வாங்கி covered call எழுதி வந்தால் ஒவ்வொரு மாதமும் cash flow கிடைக்கும்.

பங்குகள் தவிர, நல்ல பரஸ்பர நிதிகளிலும் முதலீடு செய்யலாம்.

இந்திய பங்கு சந்தை இன்னும் உயரலாம் என்ற நம்பிக்கையும் பரவலாக உள்ளது. இந்தியா, ரஷ்யா, பிரேசில் மற்றும் சீன நாட்டு சந்தைகள் bubble stage-ல் உள்ளது என்று கடந்த சில “வருடங்களாக” எல்லா பத்திரிகைகளும் எழுதி வருகின்றன. ஆனாலும் இந்த சந்தைகள் தான் நல்ல லாபத்தை தருகின்றன. இந்தியாவில் MCX சந்தையின் IPO இந்த வருடம் சந்தைக்கு வருகிறது. MCX பங்குகள் நல்ல லாபம் தர வாய்ப்பிருக்கிறது.

இந்தியாவில் day-trading ஒரு புது அத்தியாயத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது. அபாயத்தையும் சேர்த்து! Day-trading செய்து பணக்காரர்களாக மாறியவர்கள் வெகு சிலர். ஆனால் அதன் மூலம் ஏழைகளாக மாறியவர்கள் கோடிக்கணக்கானவர்கள்.

எம்.டெக் முடித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் பொறியியல் வல்லுனராக வேலை பார்த்த முரளி என்பவர் திருடனாக மாறி விட்டார் -- ஷேர் மார்க்கெட்டில் தான் இழந்த பணத்தை திரும்பவும் பெறுவதற்காக. இந்த வார ஜூனியர் விகடனில் இது பற்றிய விபரங்கள் உள்ளன.

Day-trading செய்வதை தவிர்த்து, அதில் போடும் பணத்தை நல்ல பரஸ்பர நிதிகளில் போட்டால் லாபம் நிச்சயம். பெரும்பாலான இந்திய பரஸ்பர நிதிகள் சக்கை போடு போடுகின்றன.

நீங்கள் எந்த சந்தையில் பணத்தை முதலீடு செய்தாலும், உங்கள் பணம் பன்மடங்காக பெருகி நிம்மதியாக வாழ என் வாழ்த்துக்கள்!

Related Posts Plugin for WordPress, Blogger...