Tuesday, December 23, 2008

இந்தியாவில் வேலை தேடி போகிறீர்களா?

அமெரிக்காவிலும் மற்ற நாடுகளிலும் பொருளாதார பிரச்னையில் வேலை இழந்து இந்தியா செல்லும் NRI-களுக்கு இன்னொரு அதிர்ச்சி இந்தியாவில் காத்திருக்கிறது. இந்திய ப்ராவிடன்ட் ஃபண்ட் செய்த சில விதிமுறை மாற்றங்களால் NRI-களை வேலையில் சேர்ப்பது பல நிறுவனங்களுக்கு கூடுதல் செலவை கொடுக்கிறது. இதனால் NRI-களை வேலைக்கு எடுப்பது கணிசமாக குறையும் என்று Economic Times கணித்திருக்கிறது. புது விதிமுறைகளால் வெளி நாடுகளில் On-site-ல் வேலை செய்யும் இந்திய ஊழியர்களும் பாதிக்கப்படலாம். இது பற்றிய முழு விபரங்கள் இங்கே.

Monday, December 22, 2008

அரசியல் அடிதடி

நம் ஊரில் மட்டும் தான் அரசியல்வாதிகள் கைகலப்பிலும், சேலை வேட்டிகளை உருவுவதிலும் தீவிர நாட்டம் காட்டுவார்கள் என்று நினைத்திருந்தேன். தெற்கு கொரியாவின் அரசியல்வாதிகள் இந்த விஷயத்தில் தாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை சமீபத்தில் நிரூபித்துக்காட்டியிருக்கிறார்கள்.

கத்தி, அரிவாள் என்று எதுவும் தூக்காமல் தீயணைப்பு குழாயை உபயோகித்து மல்யுத்தம் நடத்தியிருக்கிறார்கள். தீயணைப்பு நுரையில் சிக்கித்தவிக்கும் சில அரசியல்வாதிகளை கீழ் படத்தில் காணலாம்.

south korea politicians attacked by fire extinguisher

இது பற்றிய அதிக விபரங்கள் இங்கே.

Wednesday, December 17, 2008

பூஜ்யத்தில் ஒரு ராஜ்ஜியம்

அமெரிக்க மத்திய வங்கி தடாலடியாக வட்டி விகிதத்தை பூஜ்யத்துக்கு கொண்டு வந்து விட்டது.

ஜப்பானில் பல வருடங்களுக்கு முன்பே பூஜ்ய வட்டி விகிதம் கொண்டு வந்தும் அதன் பொருளாதாரம் இப்போது கூட பிரகாசமாக இல்லை. பூஜ்ய வட்டி விகிதம் மட்டும் அமெரிக்க பொருளாதாரத்தை காப்பாற்றப் போவதில்லை.

நீங்கள் அமெரிக்காவில் வாழ்பவராக இருந்தால், குறைந்த வட்டி விகிதத்தை பயன்படுத்தி உங்கள் வீட்டு கடன் வட்டியை குறைக்கலாம். கிரடிட் கார்டு மற்றும் பிற கடன்களையும் குறைந்த வட்டிக்கு மாற்றலாம்.

Zero interest rate good or bad, Fed key interest rate

வட்டி விகிதம் குறைந்ததால் அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும். இந்தியாவிற்கு இன்னும் சில வாரங்களில் பணம் அனுப்புவதாக திட்டமிருந்தால் அந்த டாலர்களை இப்போதே அனுப்புவது நல்லது. அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவதால் தங்கத்தின் விலை உயரலாம்.

பூஜ்யத்தை கொடுத்து Dow Jones குறியீட்டை 359 புள்ளி உயர்த்தியிருக்கிறார்கள். ஆனாலும் பங்கு சந்தையில் இன்னும் பயம் போக வில்லை. பல வங்கிகளின் ஆராய்ச்சியாளர்கள் வட்டி விகிதம் பூஜ்யத்துக்கு போகும் அளவுக்கு வேறு என்ன உட்பிரச்னையாக இருக்கும் என்று அலச ஆரம்பித்திருக்கிறார்கள். அமெரிக்க மத்திய வங்கி அதிகாரிகள் கொடுத்த பூஜ்யத்தை வைத்துக்கொண்டு இன்னும் இரண்டு வாரங்கள் பங்குச்சந்தை உயரலாம். கிறிஸ்துமஸ் தாத்தா (Santa Claus) வரும் நேரத்தில் பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு மனோதத்துவ ரீதியில் ஒரு boost கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பூஜ்ய மருந்து டிசம்பருக்கு பிறகும் வேலை செய்யுமா என்பது சந்தேகம் தான்.

தொடர்புள்ள இணைப்புகள்: Effects of Zero Interest Rate | Fed cuts interest rates to virtually zero

Tuesday, December 09, 2008

மும்பை தாக்குதல் - பாகிஸ்தான் ஜனாதிபதியின் கட்டுரை

நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் "opinion" பகுதியில் நேற்று பாகிஸ்தான் ஜனாதிபதி அசிப் அலி ஜர்தாரி மும்பை தாக்குதலைப் பற்றியும் தீவிரவாதிகளை அழிப்பது பற்றியும் தன் கருத்துகளை விரிவாக எழுதியிருக்கிறார். அவசியம் படித்து பாருங்கள்.

அசிப் அலி ஜர்தாரி தீவிரவாதிகள் திட்டமிட்ட படுகுழியில் விழுந்து இந்தியாவும் பாகிஸ்தானும் அணுகுண்டு யுத்தத்தில் பல உயிர்களை இழந்தால் தீவிரவாதிகளுக்கு தான் லாபம். ஆனாலும், அசிப் அலி ஜர்தாரி இதே மும்முரத்தில் இருந்து தீவிரவாதிகளை அழித்துவிட்டு காஷ்மீர் பிரச்னைக்கு ஒரு நிரந்தர முடிவு கண்டால தான் இரு நாடுகளும் நிம்மதியாக இருக்க முடியும்.

இது வரை இருந்த பாகிஸ்தான் அரசியல்வாதிகளில் ஜர்தாரி தீவிரவாதிகள் விஷயத்தில் நேர்மையான அக்கறை காட்டுவது போல தெரிகிறது. அமெரிக்காவின் நேரடி எச்சரிக்கையும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம். பாகிஸ்தானில் உள்ள குயுக்தி ராணுவ அதிகாரிகள் உஷாராகி தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்குள் ஜர்தாரி ஜரூராக தீவிரவாதிகளையும் தீவிரவாதத்தையும் தீயில் போட்டால நல்லது.

Monday, December 08, 2008

மும்பை தாக்குதலினால் சிதைந்த பொருளாதாரம்

மும்பை தாக்குதலினால் பலியான பல உயிர்களோடு இந்திய பொருளாதாரமும் சிதைக்கப்பட்டதோ என்ற பயம் ஏற்படுகிறது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதை தள்ளிப் போட்டிருக்கின்றன. நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் இந்தியாவுக்கு, முக்கியமாக மும்பைக்கு, செல்லக்கூடாது என்று பல வெளிநாட்டு நிறுவனங்கள் கருதுகின்றன.

இவை அனைத்துக்கும் மேலாக இப்போதுள்ள சூழ்நிலையில் இந்தியாவில் முதலீடு செய்வதை விட சீனாவில் முதலீடு செய்வது நல்லது என்று ஜாக் வெல்ச் போன்றவர்கள் கூட சொல்வது கவலைக்குரிய விஷயம்.

Mumbai Attack

மும்பை தாக்குதலை இந்திய அரசாங்கமும் மகாராஷ்டிர அரசாங்கமும் கையாண்ட விதம், இந்தியாவின் தற்காப்பு திறமையைப் பற்றிய மோசமான இமேஜை உலகத்துக்கு கொடுத்திருக்கின்றது. ஆரம்ப தினங்களில் அரசியல்வாதிகள் முட்டாள்தனமாக நிலைமையை கையாண்டாலும், மக்களின் கொதிப்பை பார்த்து திரைமறைவில் பாகிஸ்தானை படிய வைக்க முயற்சி செய்கின்றது. அதன் விளைவால் Zaki-ur-Rehman Lakhvi போன்ற தீவிரவாதிகள் பிடிக்கப்பட்டிருக்கின்றார்கள். அந்த தீவிரவாதிகளை பாகிஸ்தான் இந்தியாவுக்கு ஒப்படைக்குமா அல்லது நாம்கே வாஸ் விசாரணை நடத்தி விடுதலை செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

எது எப்படி இருந்தாலும், மும்பை தாக்குதல் மக்களிடம் ஒரு புரட்சியை உருவாக்கியிருக்கிறது. இது வரை "adjust karo" என்ற எண்ணத்தால் வாழ்ந்தவர்கள் "பொறுத்தது போதும்" என்று பொங்கி எழுந்திருப்பது இந்தியாவின் திருப்புமுனையாக இருக்கும். அது பொறுப்பில்லாத அரசியல்வாதிகளுக்கு சாவு மணியாகவும் இருக்கும்.

Proud to be Indians - Protest in Mumbai

இந்த பதிவுக்கு தொடர்புள்ள புத்தகம்: The Tipping Point by Malcolm Gladwell. இந்தியாவில் இந்த புத்தகம் குறைந்த விலைக்கு கிடைக்கலாம். நேரம் கிடைத்தால் அவசியம் படியுங்கள். சில திருப்புமுனைகளால் சரித்திரங்கள் திருத்தி எழுதப்படுவதை அருமையாக விளக்கும் புத்தகம் இது.

Friday, November 28, 2008

பொம்மை கடைக்குள் ஒரு துப்பாக்கி

தலைப்பை கேட்பதற்கு தங்கர் பச்சான் படத்தலைப்பை போல இருந்தாலும் இன்று Palm Desert, கலிபோர்னியாவில் அது தான் நடந்திருக்கின்றது.

Toys-R-Us கடைக்குள் இரு பெண்மணிக்குள் நடந்த சண்டை, அவர்களின் கணவன்மார்கள் இருவரும் ஒருவரையொருவர் சுட்டுக்கொண்டு இறந்து போகும் நிலைமையில் முடிந்து விட்டது. இது பற்றிய முழு விபரங்கள் இங்கே.

அமெரிக்காவில் இன்று Black Friday. பொதுவாக Thanksgiving Day-க்கு அடுத்த நாள் அமெரிக்காவில் அனைத்து கடைகளிலும் தள்ளுபடி கொடுப்பார்கள். நம் ஊர் ஆடி தள்ளுபடி போல. பெரும்பாலான கடைகள் இன்று அதிக லாபம் சம்பாதிப்பதால் இன்றைய தினத்துக்கு "கறுப்பு வெள்ளிக்கிழமை" என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதுவரை சிவப்பாக இருந்த (நஷ்டத்துடன் இருந்த) கடைகளின் Balance Sheet இன்று கறுப்பாக மாறுவதால் (லாபமுடன் இருப்பதால்) வந்த பெயர் "கறுப்பு வெள்ளிக்கிழமை".

நியூயார்க் Long Island வால் மார்ட் கடையில் வேலை பார்த்த Jdimytai Damour குடும்பத்துக்கு இன்றைய தினம் உண்மையிலேயே ஒரு கறுப்பு வெள்ளிக்கிழமை. தள்ளுபடியை நாடி வால் மார்ட் கடையில் கூடிய ஜனத்திரள் அவரின் உயிரை எடுத்துவிட்டது. அது பற்றிய முழு விபரங்கள் இங்கே.

ஒரு உயிர் போன பிறகும், "கடையை மூடக்கூடாது. கால் கடுக்க பல மணி நேரம் காத்திருந்தோம், ஷாப்பிங் செய்தே தீருவோம்" என்று சிலர் விவாதம் செய்திருக்கிறார்கள். மனித நேயமே, நீ எங்கே போய்விட்டாய்?

தொடர்புள்ள இணைப்பு: கடைகளின் நெரிசலில் கஷ்டப்படாமல், வலைத்தளங்களில் மலிவாக பொருட்களை வாங்கலாம்

Thursday, November 27, 2008

கூகுளில் தமிழ் விளம்பரம்

தமிழை கொலை செய்து கூகுளில் ஒரு விளம்பரம் வந்தது.

Tamil Advertisement in Google Adsense

விளம்பரத்தை எழுதியவர்களுக்கு தமிழ் தெரியாதா அல்லது கூகுள் செய்த குழப்பமா என்று தெரியவில்லை.

Sponsored Link: இந்தியாவில் திரும்பவும் போலியோ தலை தூக்குகின்றதா?

பொருளாதார சரிவை சமாளிப்பது எப்படி?

1920-களில் ஏற்பட்ட பொருளாதார சரிவிலிருந்து கற்றுக்கொண்ட சில பாடங்களை வைத்து மின்ட் வலைத்தளத்தில் நல்ல பதிவை பிரசுரித்திருக்கிறார்கள். அவை தவிர இன்னும் சில நல்ல விஷயங்கள்:

1. பொருட்களை வாங்கும் போது முடிந்த வரை டெபிட் கார்டு அல்லது பணத்தை உபயோகியுங்கள். கிரடிட் கார்டுகளை கொஞ்சம் நாள் தள்ளி வைக்கலாம்.

2. உங்களிடம் மூன்றுக்கு மேலான கிரடிட் கார்டுகள் இருந்தால், உபரியாக உள்ள கார்டுகளை கேன்சல் செய்து விட்டால் நலம். கையில் நிறைய கார்டுகள் இருந்தால் செலவை கட்டுப்படுத்துவது கடினம்.3. பல மாதங்களாக உங்கள் கண்களை உறுத்திக்கொண்டிருந்த 60" எல்.சி.டி. டி.வி-யை இப்போது வாங்காமல் கொஞ்சம் தள்ளிப்போடலாம்.

4. உங்கள் வீட்டுக்கடன்களின் வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்பிருக்கிறதா (refinance) என்று உங்கள் வங்கி அதிகாரிகளிடம் கேளுங்கள். அமெரிக்காவில் பல வங்கிகள் தங்களிடன் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு உதவி செய்வதாக அரசாங்கத்திடம் சத்தியம் செய்திருக்கின்றன. இது பற்றிய தொடர்புள்ள பதிவு இங்கே.

5. நீங்கள் பார்க்கும் வேலை பிடிக்காமல் இருந்தாலும், ஒரு முட்டாள் மேனேஜரிடம் வேலை பார்க்கும் துரதிர்ஷ்டம் இருந்தாலும், வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள். இப்போதைக்கு வேறு வழி இல்லை. உலக முழுதும் வேலையை இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீனா போன்ற நாடுகளிலும் பொருளாதார சரிவு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அந்த நாட்டு அதிகாரிகள் கூறுகிறார்கள்.

Sunday, November 23, 2008

சிட்டி பேங்கின் சிக்கல்கள்

செப்டம்பர் 15, 2008 அன்று சிட்டி பேங்கும் கீழே விழலாம் என்று எழுதியிருந்தேன். அந்த நேரம் வந்து விட்டது போல தெரிகிறது. சமீப காலமாக சிட்டி பேங்கின் பங்கு விலை பலத்த அடி வாங்கி இப்போது மிக குறைந்த விலையில் விற்கிறது.

Citibank stock chart

பொருளாதாரம் இப்போது இருக்கும் நிலைமையில் சிட்டி பேங்க் திவாலானால் உலக பொருளாதாரம் இன்னும் சிக்கலில் மாட்டித்தவிக்கும் என்பதால் அமெரிக்க அரசாங்கம் சிட்டி பேங்க்கை காப்பாற்றுவதற்கான வழிகளை ஆலோசித்துக் கொண்டிருக்கிறது. முழு விபரங்கள் நாளை காலை வெளி வரலாம்.

தொடர்புள்ள பதிவுகள்: அரசாங்கத்தின் உதவி | விக்ரம் பண்டிட்

Update at 5:15am PST on Nov 24: சிட்டி பேங்க் காப்பாற்றப்பட்டது

Wednesday, November 19, 2008

கிரடிட் கார்டு கடன்கள்

சமீப காலம் வரை பல இந்திய வங்கிகள் யார் கேட்டாலும் கிரடிட் கார்டுகள் கொடுத்தார்கள். இளைஞர் சமுதாயம் நாளைய தினத்தைப் பற்றி கவலைப்படாமல் கிரடிட் கார்டுகளை உபயோகித்து புத்தம் புதிய செல் போன்களை வாங்கியது. வருடத்துக்கு ஒரு முறை செல் போனை மாற்றுவது ஃபேஷனாகி விட்டது. கால் சென்டர் கலாசாரம் கிரடிட் கார்டுகளின் உபயோகம் அசுர வேகத்தில் இந்தியாவில் வளர விதையிட்டது.

இன்று அதே கிரடிட் கார்டு கலாசாரம் கார்டுகளை வாங்கியவர்களையும் கொடுத்தவர்களையும் பயமுறுத்துகிறது. இந்தியாவில் மூன்று கோடி கிரடிட் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்தியாவில் ரூபாய்.56,000 கோடிக்கு கிரடிட் கார்டுகளின் மூலம் மக்கள் பொருள்களை வாங்கியிருக்கிறார்கள். இதன் மூலம் தங்களுக்கு அதிக கமிஷன் கிடைத்ததால் சந்தோஷப்பட்ட வங்கிகள், தாங்கள் கொடுத்த கிரடிட் திரும்ப வராததால் நொந்து போயிருக்கின்றன.

இவ்வளவு நாட்கள் வேடிக்கை பார்த்துவிட்டு "வங்கிகள் தாறுமாறாக கிரடிட் கார்டுகள் கொடுத்து விட்டன" என்று பங்குசந்தை/பொருளாதார நிபுணர்கள் இப்போது வங்கிகளை குற்றம் சாட்டுகிறார்கள். இந்தியாவில் திரும்ப வராத கிரடிட் கார்டு கடனின் விகிதம் தற்போது 9%. இது 15%க்கு போகும் என்று Crisil கணித்திருக்கிறது.

மும்பையில் கிரடிட் கார்டு கடனால் கஷ்டப்பட்ட ஒரு குடும்பம் தற்கொலை செய்து கொண்டது. அவர்களின் சவத்துடன் 73 கிரடிட் கார்டுகள் கிடந்தது. இது பற்றிய விபரங்கள் இங்கே.

கிரடிட் கார்டு கடன்களிலிருந்து மீள முடியாமல் தவிப்பவர்களுக்கு மும்பையில் உள்ள அபய் கிரடிட் கவுன்சிலிங் சென்டர் ஆலோசனை கொடுக்கிறது. அவர்களின் விளம்பரம் கீழே.

Sunday, November 09, 2008

குளியலறையில் கிடைத்த புதையல்

பாப் கிட்ஸ் கட்டிட கான்ட்ராக்டர். தன் தோழி அமந்தா சமீபத்தில் வாங்கிய வீட்டின் குளியலறை சுவர்களை மாற்றும் போது சுவர்களின் நடுவே 182,000 டாலர்கள் ஒளித்து வைத்திருப்பதை கண்டு பிடித்தார். 79 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் பொருளாதார சரிவு ஏற்பட்ட போது அந்த வீட்டு சொந்தக்காரர் வங்கியில் போட மனதில்லாமல், குளியலறையில் பாதுகாத்த பணம்.அவ்வளவு பணத்தையும் தானே எடுத்துக் கொள்ளாமல் பாப் கிட்ஸ் நேர்மையுடன் தன் தோழியிடம் உண்மையை சொல்லியிருக்கிறார். அந்த பணத்தை எப்படி பிரிப்பது என்பதில் தகராறு ஆரம்பித்து இன்று அமந்தா வாங்கிய வீட்டின் ஒரிஜினல் சொந்தக்காரர் குடும்ப வாரிசுகளும் புதையலுக்கு உரிமை கொண்டாடுகிறார்கள். இது பற்றிய முழு விபரங்கள் இங்கே.

சில சமயங்களில் நேர்மையாக நடந்து கொண்டாலும் பிரச்னை வரத்தான் செய்கிறது.

Thursday, November 06, 2008

ஓரின கலப்பு திருமணம் (Gay Marriage)

ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் அனைவரும் பைத்தியக்காரர்கள் என்பது என் கருத்து. ஆணும் ஆணும் கல்யாணம் செய்து கொள்வது சகிக்க முடியாத விஷயம். ஓரின சேர்க்கையை நாடுபவர்களின் மூளையில் நிச்சயமாக கோளாறு உண்டு என்று நம்புகிற ஆள் நான். என்னைப்போலவே கலிபோர்னியாவில் பலர் நினைத்ததால், Prop-8 என்ற சட்டத்திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து பலர் வாக்களித்திருக்கிறார்கள்.

ஆண் - ஆண் மற்றும் பெண் - பெண் திருமணங்களை தடை செய்ய வேண்டும் என்பது தான் Prop-8-ன் நோக்கம். நம் நாட்டில் இது போல சட்டங்களை அரசாங்கமே முடிவு செய்து அறிவிக்கும். அமெரிக்காவில் மக்களே இது போன்ற விஷயங்களில் முடிவெடுக்க முடியும். இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த தேர்தலில், கலிபோர்னியா மாநிலத்தில் Prop-8 மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று விட்டது.

ஒரு வேளை இந்த சட்ட திருத்தம் வெற்றி பெற்றால் நம்மால் கல்யாணம் செய்ய முடியாதோ என்று பீதியாகி இரு பெண்மணிகள் போன வாரமே கல்யாணம் செய்து கொண்டார்கள். இரு ஆண்களும் மோதிரம் மாட்டிக் கொண்டார்கள். இவர்கள் கல்யாணம் இப்போது செல்லுமா என்பது சந்தேகம்.

Lesbian Marriage in San Francisco

Gay Marriage in San Francisco

ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட இரு பெண்மணிகள் தங்களது 7 வயது பேரனின் கையில் Prop-8 சட்ட திருத்தத்திற்கு எதிராக விளம்பர பலகை கொடுத்து நிற்க வைத்திருக்கிறார்கள்.

7 year old boy opposing Prop-8 bad influence from gay grandmas

இன்னொரு பக்கம் Prop-8 சட்ட திருத்தத்திற்கு ஆதரவாளர்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டும் தான் கல்யாணம் என்ற பாரம்பரியம் இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறார்கள். இதற்கெல்லாம் கூட கடவுளை பிரார்த்தனை செய்ய வேண்டிய அளவுக்கு கலிகாலம் முற்றிப்போய்விட்டது.

Prop-8 supporters praying the god

Prop-8 சட்ட திருத்தம் வெற்றி பெற்றதால் ஓரின சேர்க்கையில் ஆர்வமுள்ள புள்ளிராஜா கண்ணீர் வடிக்கிறார்.Prop-8 சட்ட திருத்தத்திற்கு எதிராக நீதிமன்றங்கள் செல்ல சில லெஸ்பியன்கள் கூட்டம் கூடி ஆலோசிக்கிறார்கள். இவர்களை திருத்தவே முடியாது போலிருக்கிறது.

Monday, November 03, 2008

38,538 வேலை இழப்புகள்

கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனங்களில் 38,538 ஊழியர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். TechCrunch வலைப்பதிவில் இது பற்றிய முழு விபரங்கள் படிக்கலாம்.

இந்த வலைப்பதிவில் Layoffs-களை மானிட்டர் செய்வதற்கு தனி பக்கத்தையே பராமரிக்கிறார்கள். இந்த பக்கத்தை அடிக்கடி பார்த்தால், வேலை செய்வதற்கே மனது வராது.

Sunday, November 02, 2008

25 சதவிகித ஊழியர்களுக்கு வேலை இழப்பு?

அடுத்த ஒரு வாரத்தில் இந்தியாவில் சில நிறுவனங்களில் 25 சதவிகித ஊழியர்கள் வேலை இழக்கலாம் என்று ASSOCHAM (Associated Chambers of Commerce and Industry of India) கணித்திருக்கின்றது. முழு விபரங்கள் இங்கே.

தொடர்புள்ள இணைப்பு: இனி என்ன செய்யலாம்?

Friday, October 31, 2008

உலக வங்கிகளின் நிலவரம்

உலக பொருளாதாரத்தை பயமுறுத்திய புயல் கரை கடந்து விட்டது போல தான் தோன்றுகிறது. அமெரிக்க தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலைமையில் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை மேலும் 0.5 சதவிகிதம் குறைத்திருக்கிறது. டிசம்பரில் இன்னும் 0.5 சதவிகிதம் குறைய வேண்டும் என்று பலர் பிரார்த்தனை செய்கிறார்கள்.

உலகம் முழுவதும் வங்கிகளின் நிலைமை பல மடங்கு பரவாயில்லை. உலக வங்கிகள் மற்ற வங்கிகளுடன் கடன் பரிவர்த்தனை செய்யும் போது அவர்கள் பொதுவாக LIBOR என்று செல்லமாக அழைக்கப்படும் London Interbank Overnight Lending Rate-ல் கடன் கொடுத்து/வாங்குகிறார்கள். வங்கிகள் செப்டம்பரில் கண் பிதுங்கி அடி வாங்கும் போது LIBOR 2.8 சதவிகிதத்திலிருந்து 4.8 சதவிகிதம் உயர்ந்தது. அதனால் வங்கிகள் வாங்கிய கடன்களின் வட்டி உயர்ந்தது.

1 year LIBOR Chart

இப்போது LIBOR 3.03 சதவிகிதத்துக்கு குறைந்து விட்டதால் வங்கிகள் சுலபமாக கடன் கொடுத்து/வாங்க முடிகிறது. உலகம் முழுவதும் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை குறைத்ததாலும், தோல்வியடைந்த வங்கிகளுக்கு தோள் கொடுத்ததாலும், வங்கிகளின் நிலைமை ஓரளவுக்கு சரியாகி வருகிறது. அதனால் தான் இன்று அமெரிக்க பங்கு சந்தையில் வங்கிகளின் பங்குகள் உயர்ந்தது.

இது தவிர வங்கிகள் “மிக” குறைந்த வட்டிக்கு மத்திய வங்கியிடமிருந்து கடன் வாங்கி அதிக வட்டிக்கு தன் வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுப்பதால் வங்கிகள் கணிசமான லாபத்தை சம்பாதிக்க ஆரம்பித்திருக்கின்றன. இதை எதிர்பார்த்து தான் மத்திய வங்கியும் மிக தாராள மனதுடன் பல சலுகைகளை வங்கிகளுக்கு கொடுத்தது. அமெரிக்க மத்திய வங்கி எதிர்பார்த்தது போல சில நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பித்திருக்கின்றன. மக்களின் மனதில் முழு நம்பிக்கை வர இன்னும் பல வாரங்களாகும்.

அடுத்த வாரம் நடக்கவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுபவர் மெஜாரிட்டி வாக்குகள் பெற்று வெற்றி பெற்றால் நன்றாக இருக்கும். 2000-ல் நடந்தது போல குழப்பமாகி விட்டால் பங்கு சந்தை மறுபடியும் விழும். சமீபத்திய கருத்து கணிப்புகளை பார்க்கும் போது ஒபாமா பெரும்பாலான வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் போல தான் தோன்றுகிறது.

Related Link:

Libor Falls on Rate Cuts

Saturday, October 18, 2008

ஊழல் அரசியல்வாதிகள் ஒளித்து வைத்த பணம்

இந்தியாவின் ஊழல் முதலைகள் பலர் ஸ்விட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் பணத்தை ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்பது open secret. அமெரிக்க பொருளாதார சரிவாலும், அமெரிக்க சப்-பிரைம் பிரச்னையாலும் உலக வங்கிகள் பலவும் பாதிக்கப்பட்டன, ஸ்விட்சர்லாந்து நாட்டு வங்கிகள் உட்பட.

ஸ்விட்சர்லாந்து நாட்டு வங்கிகள் பல திவாலாகும் நிலைமை வந்தததால் நம் ஊர் அரசியல்வாதிகளின் பல நூறு கோடிகள் காணாமல் போய் விடும் என்று நினைத்திருந்தேன். அப்படி நடந்திருந்தால் “திருடனுக்கு தேள் கொட்டிய” நிலைமை வந்திருக்கும். ஸ்விட்சர்லாந்து அரசாங்கம் இந்த வங்கிகளை காப்பாற்றி விட்டது.

UBS Bank

ஹாங்காங்கில் பலர் தங்களது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் இழந்து விட்டார்கள். ஆனால் ஊழலில் கொழித்த நம் அரசியல்வாதிகளின் பணம் ஸ்விட்சர்லாந்தில் பத்திரமாக இருக்கிறது. நம் ஊர் அரசியல்வாதிகளுக்கு உடம்பெல்லாம் மச்சம் போல.

Related Links:
UBS bailed out in Swiss government rescue
Swiss government comes to rescue of proud industry

Tuesday, October 14, 2008

தினந்தோறும் தீபாவளி

வால் ஸ்ட்ரீட்டில் தீபாவளி இரண்டு வாரத்துக்கு முன்பே வந்து விட்டது! போன வாரம் தெரிந்த பயம் காணாமல் போய் ஜப்பானிலிருந்து சான் பிரான்சிஸ்கோ வரை உற்சாகம்! கொஞ்சம் கொஞ்சமாக பங்குகளை வாங்குவது நல்லது.

இதே உற்சாகம் பல நாட்கள் நீடிக்காது. ஆனாலும் புயல் கரையை கடந்து விட்டது போல தான தோன்றுகிறது.

Monday, October 13, 2008

அமெரிக்க வங்கிகளால் ஏற்பட்ட நெருக்கடி

நேற்று ஜெர்மனியிலிருந்து திரு. சந்திரன் கேட்ட கேள்விகளுக்காக இந்த பதிவு.

அவர் கேட்ட கேள்விகள்:

1. அமெரிக்க வங்கிகளின் நிதி நெருக்கடி எவ்வாறு ஐரோப்பிய வங்கிகளைப் பாதித்தன?

2. அமெரிக்க வங்கிகள் திவாலகிப் போனாலும் பணம் எப்படியோ அமெரிக்கப் பணச் சுற்றோட்டத்தில் தானே இருக்க வேண்டும். வங்கிகளில் இருந்து வெளியேறிய பணம் எங்கே சென்றுவிட்டன?

இந்த கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு முன்னால் ஒரு flashback.

2001-ல் டாட் காம் நீர்க்குமிழி வெடித்தவுடன் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை வெகுவாக குறைத்தது. செப்டம்பர் 11ல் நடந்த துயர சம்பவத்துக்குப்பிறகு வட்டி விகிதம் இன்னும் குறைந்தது.

U.S. Fed Fund Interest Rate Chart

2002-ல் அமெரிக்காவில் பல மாநிலங்களில் வீடு விலைகள் உயர ஆரம்பித்தன. பங்கு சந்தையிலிருந்து ஓடி வந்த அனைவரும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள். சில டாக்டர்கள் கூட ரியல் எஸ்டேட் தொழில் செய்ய ஆரம்பித்தார்கள்.

வங்கிகள் நல்ல லாபத்தில் கொழித்தன. மத்திய வங்கியினிடம் குறைந்த வட்டியில் கடன் பெற்று மக்களிடம் 8% வட்டி வாங்கியதில் வீட்டு கடன் கொடுக்கும் வங்கிகளின் காட்டில் மழை. (அது இன்று சுனாமியாக மாறி விட்டது). வானத்திலிருந்து கொட்டும் பணத்தை கண்டு ருசி கண்ட சில வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்காக வீட்டு கடன் கேட்கும் அனைவருக்கும் கடன்களை வாரி வழங்கியது.

ரியல் எஸ்டேட் தரகர்களின் பங்கு இதில் மிக அதிகம். “வீட்டு விலையில் வெறும் 1% பணம் கொடுத்தால் போதும், நீங்கள் $500,000 வீடு வாங்கலாம்” என்று ரேடியோவில் விளம்பரம் கொடுத்தார்கள். சில மாதங்கள் கழித்து அந்த 1% down payment கூட தேவைப்படவில்லை. 100% கடனையும் சில வங்கிகள் அதிக வட்டியில் கொடுக்க ஆரம்பித்தன. அப்படித்தான் சப்-பிரைம் பிரச்னை உருவாகியது. 1% மற்றும் 0% downpayment கடன்கள் மிக ரிஸ்க்கானது என்று வங்கிகளுக்கும் தெரியும். அதனால் அது போன்ற கடன்களை மற்ற வங்கிகளுக்கு விற்று விடுவதில் ஆர்வம் காட்டினார்கள். ஏதாவது பிரச்னையானால் நாம் தப்பித்துக் கொள்வோம் என்ற புத்திசாலித்தனம்.

அப்படிப்பட்ட புத்திசாலிகளில் சிலர்: Indymac Bank, Countrywide Finacial and Washington Mutual. இவர்கள் அனைவரும் இன்று காணாமல் போய் விட்டார்கள்.

சப்-பிரைம் கடன்களை விற்பதற்கு Countrywide போன்ற வங்கிகள் முயற்சித்த போது அதைக் கேள்விப்பட்ட சில வால் ஸ்ட்ரீட் வங்கிகள் குயுக்தியாக சிந்தித்தன. “அப்படிப்பட்ட கடன்களை ஏன் பாண்டுகளாக (Bonds) மாற்றி உள்நாட்டு/வெளிநாட்டு சந்தைகளில் விற்கக் கூடாது” என்று ஐடியா செய்து அதில் பல மில்லியன்கள் சம்பாதித்தன. அந்த பாண்டுகளுக்கு இன்னொரு பெயர் Collateralized Debt Obligation (CDO).

வீட்டு கடன்களை பங்குகளாகவும் பாண்டுகளாகவும் மாற்றி விற்பது அமெரிக்காவில் 1970லிருந்து இருக்கிறது. இது புதிதல்ல. ஆனால், சப்-பிரைம் கடன்களை பங்குகளாகவும் பாண்டுகளாகவும் வால் ஸ்ட்ரீட் வங்கிகள் மாற்றியது இது தான் முதல் முறை.

கேள்வி 1: அமெரிக்க வங்கிகளின் நிதி நெருக்கடி எவ்வாறு ஐரோப்பிய வங்கிகளைப் பாதித்தன?

வால் ஸ்ட்ரீட் வெளியிட்ட CDOக்களை உலக வங்கிகள் அனைத்தும் வாங்கின. ஐரோப்பிய வங்கிகள் உட்பட. அமெரிக்க வங்கிகள் மட்டும் அமெரிக்க வீட்டுகடன்களை வைத்து சூதாட்டம் நடத்தவில்லை. அதில் கூட்டாளிகளாக ஐரோப்பிய வங்கிகளிலும் பங்கு பெற்றன. அதனால் தான் இப்போது ஐரோப்பிய வங்கிகளும் விழுகின்றன.

வீட்டு கடன்களை வாங்கியவர்கள் அதை முறைப்படி திரும்பக் கொடுத்திருந்தால் வால் ஸ்ட்ரீட்டின் வங்கிகளின் கணக்கு சரியாக இருந்திருக்கும். ஆனால் சொற்ப வருமானம் உள்ளவர்களுக்கு அதிக வட்டியில் கடன் கொடுத்து அது முழுதாக திரும்ப வரும் என்று பகல் கனவு கண்டார்கள். அதனால் இன்று பல மக்களின் ரிடையர்மென்ட் கனவு பொய்த்துப் போனது.

ஐரோப்பிய வங்கிகள் விழுவதை தடுக்க முடியாமல் ஐரோப்பிய நாடுகள் தடுமாறுவதின் காரணத்தை ஜிம் ஜுபாக் வீடியோவில் விளக்குவதை இந்த பதிவில் காணலாம்.

Euro

கேள்வி 2: அமெரிக்க வங்கிகள் திவாலகிப் போனாலும் பணம் எப்படியோ அமெரிக்கப் பணச் சுற்றோட்டத்தில் தானே இருக்க வேண்டும். வங்கிகளில் இருந்து வெளியேறிய பணம் எங்கே சென்றுவிட்டன?

சுருக்கமாக சொல்வதென்றால் பெரும்பாலான பணம் காற்றில் கரைந்து விட்டன அல்லது வங்கி அதிகாரிகள் சுருட்டி கொண்டார்கள்.

கடனை திரும்ப கொடுக்க தகுதியில்லாதவர்களுக்கு பல லட்சம் டாலர்களை வங்கிகள் கடனாக கொடுத்தார்கள். அவர்களில் யாரும் வேண்டுமென்று ஏமாற்றவில்லையென்ற போதிலும் அவர்களுக்கு வேலை போன போது அல்லது வருமானம் குறைந்த போது, அவர்களால் வட்டி கட்டி முடியவில்லை. இது போல நாடு முழுதும் பரவலாக நடக்கும்போது அது வங்கிகளுக்கு பெரிய தலைவலியாக மாறி விட்டது.

காணாமல் போன பல பில்லியன் டாலர்களில் சில பில்லியன்கள் ரியல் எஸ்டேட் தரகர்களிடம் கமிஷனாக போய் விட்டன.

Lehman Brothers, Bear Stearns போன்ற வங்கிகளுக்கு எதிராக Goldman Sachs காயை நகர்த்தியதால், அந்த வங்கிகளின் நஷ்டம் Goldman Sachs-க்கு லாபம். அந்த வகையில் Goldmanக்கு பல பில்லியன் டாலர்கள் போய் விட்டது.

சில பில்லியன் டாலர்கள், காணாமல் போன வங்கிகளின் உயர் அதிகாரிகளுக்கு சம்பளவாகவும் போனஸாகவும் கொடுக்கப்பட்டது. இது பற்றிய விபரங்களை இங்கே படிக்கலாம்.

மண்ணில் விழுந்த வங்கிகளில் இனி என்ன பணம் மிச்சமிருந்தாலும், அந்த வங்கிகளின் bankruptcy வக்கீல்கள் அவற்றை ஃபீஸாக எடுத்துக் கொள்வார்கள்.

வங்கிகள் நடத்திய விளையாட்டில் வெற்றி பெற்றது Goldman Sachs மட்டும் தான். ஒரு வருடத்துக்கு முன்பே அவர்கள் உஷாராக சப்-பிரைமுக்கு எதிராக ட்ரேட் செய்தார்கள். இருந்தாலும், வங்கி செக்டர் மொத்தமாக அடி வாங்கியதால் அவர்களின் பங்கும் கீழே விழுந்து விட்டது. பங்குகளை short செய்பவர்கள் விளையாடியதும் இன்னொரு காரணம்.

இனி என்ன நடக்கும், இன்னும் எத்தனை வங்கிகள் விழும் என்று தெரியாது. ஆனாலும், என்னைப் பொறுத்த வரை, இந்த களேபரமெல்லாம் முடிந்த பிறகு Goldman Sachs முன்னை விட வலுமையாக வரும் என்று நினைக்கிறேன்.


தொடர்புள்ள வீடியோ:

CDO போன்ற நிதி சாதனங்கள் (Financial Instruments) எப்படி பொருளாதாரத்துக்கு சேதம் விளைவித்தன என்பதை ஒயின் பாட்டிலை வைத்து ஒருவர் அழகாக விளக்குகிறார் இங்கே.

மேலே உள்ள கட்டத்தில் வீடியோ தெரியாவிடில், அதை இங்கே பார்க்கலாம்.

Sunday, October 12, 2008

ICICI வங்கியின் விளம்பரம்

யாஹூ இந்தியாவில் நேற்று நான் பார்த்த விளம்பரம்.Investing's never been so easy?! அட ஆண்டவா!

ஜிம் ஜுபாக் (Jim Jubak)

ஜிம் ஜுபாக் மைக்ரோசாப்டின் MSN தளத்திற்காக அருமையான விஷயங்களை எழுதுபவர். நல்ல அறிவாளி. அவருடைய மாடல் போர்ட்போலியோவும் விழுந்திருக்கிறது. அவரின் போர்ட்போலியோவை இங்கு பார்க்கலாம். அவர் தேர்ந்தெடுத்த பங்குகள் பெரும்பாலும் நஷ்டத்தில் இருப்பது எனக்கு தெரிந்து இது தான் முதல் முறை. உலகம் முழுதும் பரவும் பயம் ஜிம்மையும் விட்டு வைக்கவில்லை.

Jim Jubak

தேவையில்லாமல் பயப்படாதீர்கள் என்று ஜிம் ஒரு வீடியோவில் கூறுகிறார். அதை இங்கு பார்க்கலாம். ஐரோப்பிய சந்தைகள் ஏன் இப்படி விழுகின்றன என்பதற்கும் காரணங்களை இன்னொரு வீடியோவில் விளக்குகிறார். நேரமிருந்தால் அவசியம் இந்த வீடியோக்களை பார்க்கவும். நீங்கள் எந்த நாட்டில் முதலீடு செய்திருந்தாலும் இவை உதவியாக இருக்கும்.

Saturday, October 11, 2008

கலையாத கவலை மேகங்கள்

Dow Jones குறீயீடு கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 1018 புள்ளிகள் மேலும் கீழும் போய் வந்தன. என்ன செய்வதென்று G7 மற்றும் G20 தலைவர்கள் கூடி விவாதிக்கிறார்கள். ஏதாவது செய்வோம் என்று கூறுகிறார்கள். என்ன செய்யப்போகிறோம் என்று திட்டம் எதுவும் அறிவிக்கவில்லை. இந்த நிலைமையில் திங்களன்றும் பங்கு சந்தைகள் விழலாம். உருப்படியான திட்டங்கள் அறிவிக்கப்பட்டால் பங்கு சந்தைகள் அதிகமாக இனி விழாது.

G7 meeting to stop financial meltdown

வங்கிகளின் பிரச்னையையும் டெபாசிட் செய்தவர்களின் பிரச்னையயும் உலக அரசாங்கங்கள் மும்முரமாக இருந்து தீர்த்து வைக்கின்றன. அப்படி இருந்தும் பெரும்பாலான முதலீட்டாளர்கள் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடுகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரைக்கும் எனக்கு பிடித்த பங்குகளை வாங்குவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம். நேற்று நான் வாங்கிய பங்குகள் அடுத்த வாரமே 10% லாபத்தை தரப்போவதில்லை. பங்குகள் போன மாத விலைக்கு வருவதற்கே இன்னும் பல மாதங்களாகலாம். இன்னும் மூன்று வருடத்துக்குள் உங்களுக்கு தேவைப்படும் எந்த பணத்தையும் பங்கு சந்தையில் போடாமலிருந்தால் நலம்.

பங்கு சந்தைகள் சரிவதற்கு பயம் மிக முக்கிய காரணம். அமெரிக்காவில் வீட்டு விலைகள் சரிந்ததாலும், வங்கிகளில் வேலை வாய்ப்பு போனதாலும் பலர் பணத்தை இழந்து விட்டார்கள். ஹாங்காங், ரஷ்யா போன்ற நாடுகளில் அப்படி நடக்க வில்லை. ஆனாலும் ஹாங்காங்கில் lehman brothers பாண்டுகளில் மறைமுகமாக முதலீடு செய்திருந்த பல ஹாங்காங் வங்கிகள் அங்குள்ள முதலீட்டாளர்களின் பணத்தை மொத்தமாக இழந்து விட்டது. பலர் தங்கள் மொத்த சேமிப்பையும் இழந்து தவிக்கிறார்கள்.

ரஷ்யாவில் நிலைமை வேறு. எண்ணெய் விலை சரிந்ததால் அங்கு பொருளாதாரம் சீர் குலைந்து விட்டது. ரஷ்ய பெண்மணி ஒருவர் “என் பணமெல்லாம் போய் விட்டது. வேலை போய் விட்டது. I don’t know what to do” என்று விரக்தியுடன் சிரித்துக் கொண்டு டெலிவிஷனில் பேட்டி கொடுக்கிறார்.

அடுத்ததாக தான் முதலீடு செய்திருக்கும் அல்லது டெபாசிட் செய்திருக்கும் வங்கிகள் திவாலாகி விடுமோ என்ற மக்களின் பயம் தான் பங்கு சந்தைகளை பாடாக படுத்துகிறது. புத்திசாலிகளால் நிர்வகிக்கப்படும் Morgan Stanley நிறுவனத்தின் பங்குகள் கடந்த வெள்ளியன்று பந்தாடப்பட்டதற்கு இது தான் காரணம்.

போகிற போக்கில், அமெரிக்க வங்கிகள் அனைத்தும் அரசுடமையாக்கப்படலாம். அந்த நிலைமை ஏற்பட்டால் சியாட்டில் நகரத்து வெல்ஸ் ஃபார்கோ வங்கி அதிகாரிகள் நம் ஊர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் போல வாடிக்கையாளர்களுக்கு தங்களின் திமிர் கலந்த சேவையை கொடுப்பார்கள். அதை நினைத்தால் கவலையாகத்தான் இருக்கிறது.

தற்போதுள்ள நிலைமையில் வங்கிகளின் பங்குகளை நான் தொடப்போவதில்லை. Goldman Sachs பங்குகளின் விலை மலிவாக இருக்கிறது. ஆனாலும் இன்னும் மலிவாகவோ அல்லது மரித்தோ போய்விடும் என்ற கவலையும் இருக்கிறது.

Related Link: உலகம் முழுவதும் பரவும் பயம்

Friday, October 10, 2008

சிங்கப்பூரின் பொருளாதார சரிவு

சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளின் பொருளாதாரமும் சரிந்து வருகின்றன. விபரங்களை இங்கே படிக்கலாம்.ஆசிய நாடுகள் பலவற்றிலும் பங்கு சந்தைகள் மீண்டும் உயர வேண்டுமென்று மக்கள் கடவுளை பிரார்த்தனை செய்கிறார்கள். உலக அரசியல் தலைவர்களும் பொருளாதார நிபுணர்களும் எதிர்பார்த்ததை விட மிக அதிக பயம் உலகம் முழுதும் பரவி இருக்கிறது. டாட் காம் நீர்க்குமிழி உடைந்த போது இருந்த ஆபத்தை விட இப்போது அதிக ஆபத்து என்று பல நிபுணர்க்ள எச்சரிக்கிறார்கள்.

அமெரிக்காவில் நிலைமை சரியாவதற்கு 2009-ஏப்ரல் மாதமாவது ஆகும் என்று பரவலான கருத்து இருக்கிறது. நவம்பரில் நடக்கவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யாருமே அதிக மெஜாரிட்டி பெறாவிடில், இன்னும் ரொம்ப கஷ்டம்.

அதிக கடனில் இருந்தால்…

கடன் சுமை அதிகமாக இருந்தால் அதை எப்படி சமாளிப்பது என்று யாஹூவில் எழுதியிருக்கிறார்கள். விபரங்கள் இங்கே. இது அமெரிக்காவில் வாழ்பவர்களுக்கு மட்டுமல்லாது, அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

கிரடிட் ரிப்போர்ட், balance transfer போன்ற சமாசாரங்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவில் வசிப்பவர்களுக்கு மட்டும் பொருந்தும்.

Related Link: பங்கு சந்தைகளால் பாதிக்கப்படும் மனது

Thursday, October 09, 2008

பங்கு சந்தைகளால் பாதிக்கப்படும் மனது

சில நாட்களுக்கு முன்னால், நண்பர் குமரனின் பின்னூட்டத்தின் உதவியால் லாஸ் ஏஞ்சலஸ் இந்தியர் கார்த்திக் ராஜாராம் பற்றிய செய்தியை தெரிந்து கொள்ள முடிந்தது.

கார்த்திக் ராஜாராம் தன்னுடன் தன் குடும்பத்தையும் கொன்ற செய்தி மிக சோகமானது. பங்கு சந்தையில் பெரிய இழப்பு ஏற்பட்டதால் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீஸ் கருதுகிறார்கள்.

Karthik Rajaram

Krishna Rajaram

பெற்றோரே குழந்தைகளை கொல்வதை போல கொடுமை வேறு எதுவுமில்லை. சில வருடங்களுக்கு முன்னால் அரசியல்வாதிகளின் (ஜெயலலிதா?) தொல்லை தாங்காமல் தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் நண்பர் தன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட போதும் மிகவும் வருத்தப்பட்டேன். இவர்களெல்லாம் எனக்கு சிறிதும் அறிமுகம் இல்லாதபோது கூட மனம் வேதனை அடைகிறது. சிறு குழந்தைகள் என்ன தவறு செய்தன? அவர்களை கொல்ல எப்படி பெற்றோருக்கு மனது வந்தது?

நமக்கே இவ்வளவு வேதனை இருக்கும் போது தன் ஏழு வயது செல்ல மகனின் நெற்றியில் துப்பாக்கியை வைக்கும் போது கார்த்திக் ராஜாராமின் மனது என்ன பாடுபட்டிருக்கும்? சில வருடங்களுக்கு முன்னால் லண்டன் பத்திரிகைகளில் “வின்னர்” என்று குறிப்பிடப்பட்ட கார்த்திக்கின் நிலைமை ஏழே வருடத்தில் தலைகீழாக மாறியது வேதனைக்குரியது.

தானே போய் விட்டபிறகு குடும்பத்தை யார் பார்த்துக் கொள்வது என்று நினைத்து இவரே கொன்று விட்டார். செப்டம்பர் 16 அன்று துப்பாக்கி வாங்கிய போதே அவருக்கு இந்த எண்ணம் தீவிரமாக இருந்திருக்க வேண்டும். ஆனாலும் அவரது மனைவியும் குடும்பத்தினரும் அவருடைய பாதிக்கப்பட்ட மனநிலைமையை புரிந்து கொள்ள முடியாமல் இருந்திருக்கலாம்.

“that man is never relaxed” என்று பக்கத்து வீட்டு பெண்மணி கூறியிருக்கிறார். அது தான் பெரிய பிரச்னையே. மனது அமைதியாக இல்லாதபோது இது போல லாஜிக் இல்லாத முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது.

குறிப்பிட்ட அளவுக்கு மேலே பணம் இழந்தால் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனாலும், தன்னுடைய $500,000 முதலீடு $300,000-ஆக மாறும் போது அதை விற்று விட்டு பணத்தை எடுக்க மனது வருவதில்லை. “நான் எடுத்த முடிவு எப்படி தவறாகும்? நிச்சயமாக என் கணக்கு இன்னும் மூன்றே மாதத்தில் $500,000க்கு திரும்ப போகும்” என்று மனதுக்குள் சாத்தான் அறிவுரை சொல்லும். “stop loss என்பதெல்லாம் மூடர்களின் வாதம்” என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்வோம்.

இதெல்லாம் எனக்கும் நடந்திருக்கிறது. 2001-ல் Stop loss போடாமல் Juniper Networks (JNPR) பங்கில் covered calls எழுதியிருந்தேன். சில நாட்களில் செப்டம்பர் 11 வந்தது. அடுத்த பத்து நாட்களில் என்னுடைய நஷ்டம் $5,000க்கு மேல். அப்போதும் விற்காமல் காத்திருந்தேன். வைதேகி காத்திருந்தாள் கதையாகி விட்டது. கடைசியில் மனது வந்து Juniper networksக்கு டாடா சொல்லும் போது $12,000 நஷ்டம்.

பங்கு சந்தைகளில் தான் போட்ட முதலீடு மூன்று மடங்கானதை பெருமையாக சொல்பவர்கள், தன் நஷ்டத்தைப் பற்றி பேசவே மாட்டார்கள். ஈகோ தான் காரணம். இதில் ஈகோவுக்கு வேலையே இல்லை. பங்கு சந்தையில் பல விஷயங்கள் நம் கையில் இல்லை. அதுதான் நிதர்சனமான உண்மை. பத்து பைசாவை பங்கு சந்தையில் போடும் முன்பே, அதில் நம் எதிர்பார்ப்பு என்ன, எவ்வளவு நஷ்டத்தை தாங்க முடியும், போட்ட முதலீட்டில் ஒன்றும் திரும்ப வராவிடில் அதன் consequences என்ன, எவ்வளவு லாபம் வந்தால் விற்கலாம் என்று யோசித்துத்தான் முதலீடு செய்ய வேண்டும். அப்படி செய்யாமல் விட்டதால் எனக்கு கிடைத்த பாடம் JNPR.

இந்தியாவில் intra-day என்ற பெயரில் சூதாட்டம் நடப்பது போல அமெரிக்காவில் day trading என்ற பெயரில் சூதாட்டம் நடக்கின்றது. அதை சொல்லிக் கொடுப்பதற்கு பலர் training institutes நடத்தி நல்ல லாபம் சம்பாதிக்கிறார்கள். என் குடும்ப நண்பர் ஒருவர் IBM நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தார். அவரின் மனைவி EDS நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தார். அவர்களுக்கு San Jose நகரத்தில் மலைப்பகுதியில் நல்ல பங்களா இருக்கிறது. தான் ரிடையரானவுடன் சும்மா இருக்க முடியாமல், day trading institutes-களில் சேர்ந்து பல்லாயிரம் டாலர்களை இழந்து விட்டார். Day trading கற்றுக் கொள்வதற்காக கலிபோர்னியாவிலிருந்து ஃபுளோரிடா வரை போயிருக்கிறார். சமீபத்தில் பார்த்த போது அவரின் முகத்தில் துளி சந்தோஷமில்லை. Day trading, short-term trading செய்பவர்கள்/செய்ய நினைப்பவர்கள் அடிக்கடி தங்கள் மனநிலைமையை பரிசோதித்துக் கொள்வது நல்லது.

1999ம் வருடத்தில் அட்லாண்டாவில் மார்க் பார்ட்டன் என்பவர் day trading நிலையத்தில் ஒன்பது பேரை சுட்டுக் கொன்று விட்டு தன்னையும் கொன்றார். அதன் பிறகு சில மாதங்களுக்கு day trading institutes அடக்கி வாசித்தார்கள். கடந்த சில வருடங்களாக வேதாளம் திரும்பவும் முருங்கை மரத்தில்.

பங்கு சந்தை முதலீட்டாளர்கள் எப்படி, எதில், எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பது அவரவரின் risk tolerance என்பதை பொறுத்திருக்கின்றது. என்ன செய்தாலும், உங்களின் மன அமைதியை இழந்து விடாதீர்கள். It’s not worth it, even if you make millions.

பங்கு சந்தையினால் ஏற்படும் மனச்சோர்வு தற்கொலையில் தான் முடியும் என்பதில்லை. தன்னைத் தானே மெதுவாக கொல்லும் slow poison-ஆகவும் மாறலாம். சமீப கால பங்கு சந்தை ஏற்றத்தாழ்வுகளால் (volatility) பலர் நாள் முழுதும், முக்கியமாக இரவில் தூங்கும்போது, பல்லை நற நறவென கடித்துக் கொண்டேயிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த பழக்கம் Temporomandibular Joint (TMJ) என்ற வியாதியில் முடியும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றார்கள். மனச்சோர்வினால் சிலருக்கு அல்சர் வரும், சிலருக்கு வயிற்றுப்போக்கு வரும், சிலருக்கு மாரடைப்பு வரும். வால் ஸ்ட்ரீட்டில் பலருக்கு TMJ வரும் என்று எச்சரிக்கிறார்கள்.

TMJ வியாதியால் மிக பாதிக்கப்பட்டால், வாயை திறந்தாலே உயிர் போகும் அளவுக்கு வலி இருக்கும் என்று சொல்கிறார்கள். நம்மையும் அறியாமல், பல்லை வேகமாக கடிக்கும் போது அது 300 பவுண்டு அழுத்தத்தை பல்களுக்கு கொடுக்கும் என்றும் சொல்கிறார்கள். தியானம், யோகா மட்டும் இதை குணப்படுத்தாது. பல் மருத்துவரிடம் சென்று, பல்களை அளவெடுத்து, Night guard செய்து அதை தூங்கும்போது மாட்டிக் கொண்டால் தான் குணமடையும்.

தற்போது உள்ள நிலைமையில் உலகில் பல முதலீட்டாளர்களுக்கு தீவிர மனச்சோர்வு உள்ளது. கார்த்திக் ராஜாராம் போன்றவர்கள் மனதுக்குள்ளே வேதனை சுமந்து கொண்டு அது ஒரு நாள் வெடித்து அவர் குடும்பமே அழிந்து போனது. தன் பண இழப்புக்கு Bankruptcy file செய்து விட்டு சிறிய அபார்ட்மென்டுக்கு மாறியிருந்தாலே அவரின் பணப்பிரச்னை அதிகமாக பாதித்திருக்காது. என்ன வேதனையாக இருந்தாலும், அதை நெருங்கிய நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டால் பாதி வேதனை குறையும். நெருங்கிய நண்பர்கள்/உறவினர்கள் யாருமே இல்லையென்றால், நாம் வாழும் வாழ்க்கைக்கே அர்த்தமில்லை. இதைச் சொன்னவர் சாம் பிட்ரோடா. அதைப்பற்றி தனி பதிவே எழுதலாம்.

இந்தியாவிலும் பல முதலீட்டாளர்கள் நிறைய பணத்தை இழந்திருக்கிறார்கள். என் குடும்ப நண்பர் பங்கு சந்தை ட்ரேடிங்கை மிக தீவிரமாக செய்து கொண்டிருந்தார். இரண்டு வாரங்களுக்கு முன்னால் பேசும் போது “ஸ்டாக்கையெல்லாம் ஓரம் கட்டி விட்டு, இன்சூரன்ஸ் ஏஜன்டாக இருக்கிறேன்” என்கிறார்.

பங்கு சந்தை என்பது சூதாட்டம் கிடையாது. ஆனால் அதை சூதாட்டமாக விளையாடுபவர்கள் கோடிக்கணக்கானோர். முறைப்படி, ஒரு ஒழுக்கத்துடன் பங்கு சந்தையில் நல்ல பங்குகளையும்/பரஸ்பர நிதிகளையும் தேர்ந்தெடுத்து நீண்ட கால முதலீடு செய்பவர்கள் மிகப் பெரிய பணக்காரர்களாக மாறியிருக்கிறார்கள். Warren Buffet ஒரு உதாரணம். வால் மார்ட் (WMT) பங்குகளை இருபது வருடங்களாக வைத்திருப்பவரை பார்த்திருக்கிறேன். இந்தியாவில் வடக்கே ஒரு குக்கிராமத்தில் விப்ரோ பங்குகளை பல வருடங்களாக விற்காமல் ஒரு முதியவர் வைத்திருக்கிறார். அவற்றின் மதிப்பு பல கோடி. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

நீண்ட கால முதலீடு செய்தால் தான் நாம் நிம்மதியாக இருக்கலாம். குடும்பமும் நிம்மதியாக இருக்கும்.

Wednesday, October 08, 2008

வட்டி விகிதம் குறைக்கப்பட்டது

உலக மத்திய வங்கிகள் ஒன்று சேர்ந்து வட்டி விகிதத்தை குறைத்திருக்கின்றன. அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து, கனடா நாடுகளுடன் சீனாவும் வட்டி விகிதத்தை குறைத்திருக்கின்றது. இருந்தாலும், பங்கு சந்தைகளின் futures கீழே விழுந்து கொண்டிருக்கிறது.

உலக நாடுகள் பல சேர்ந்து வட்டி விகிதத்தை குறைத்திருப்பது நல்ல செய்தி. நீண்ட கால முதலீடு செய்பவர்கள் நல்ல பங்குகளை வாங்குவதற்கு இது சரியான நேரம். Short-term trading செய்பவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். You may lose all… just like that.

Lehman brothers-ன் தாக்கம் ஹாங்காங் நாட்டிலும் தெரிகின்றது. தங்கள் பணத்தை lehman bonds-களில் இழந்த மக்கள் போராட்டம் நடத்துகின்றார்கள்.

Investor protests showing worthless bonds

Hongkong investors protest

Citibank investors


Related Link:

உலகம் முழுவதும் பரவும் பயம்

Tuesday, October 07, 2008

உலகம் முழுவதும் பரவும் பயம்

வால் ஸ்ட்ரீட்டின் பயம் உலகம் முழுதும் எதிரொலிக்கின்றது. சில மணி நேரங்களுக்கு முன்னால் ஆஸ்திரேலிய மத்திய வங்கி 1% வட்டி விகிதத்தை குறைத்திருக்கின்றது. ஆஸ்திரேலிய வங்கி அதிகாரிகள் நிச்சயமாக மற்ற நாடுகளின் மத்திய வங்கி உயர் அதிகாரிகளிடம் கலந்து பேசி தான் இந்த முடிவை எடுத்திருப்பார்கள். இன்னும் சில நாடுகளில் வட்டி விகிதக் குறைப்பை எதிர்பார்க்கலாம்.

Oct 6th 2008

Oct 6th 2008

Oct 6th 2008

அமெரிக்காவில் இன்னும் 0.75% வட்டி விகிதம் குறைக்க வேண்டும் என்று பில் கிராஸ் உட்பட பலர் வேண்டுகோள் விடுக்கிறார்கள். ஜப்பான் போல 0% வட்டி வந்தால் தான் இவர்கள் சும்மா இருப்பார்கள் போல தோன்றுகிறது. அமெரிக்காவில் தற்போது இருக்கும் பணவீக்க நிலைக்கு வட்டி விகிதத்தை குறைப்பது நல்லதல்ல. இருந்தாலும், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், புஷ் வட்டி விகிதத்தை குறைத்து நல்ல பெயர் வாங்க முயற்சிப்பார்.

சரியாக செயல்படாமல் மக்களின் பணத்தை ஏப்பம் விட்ட வங்கிகளுக்கு மட்டும் உதவாமல், அமெரிக்காவில் வியாபாரிகளுக்கு குறைந்த கால கடன்களை (short term business loans) வழங்குவதற்கு அமெரிக்க மத்திய வங்கி முயற்சி எடுத்து வருகின்றது.

700 பில்லியன் டாலர் பில் நிறைவேற்றப்பட்டாலும், முதலீட்டாளர்களுக்கு இன்னும் திருப்தி வரவில்லை. சப்-பிரைம் பிரச்னையாக ஆரம்பித்த தலைவலி இன்று “யாரை நம்புவது (fundamental question of trust)” என்ற நிலைமைக்கு வந்து நிற்கின்றது. வியாபாரம் செய்பவர்களால் கடன் வாங்க முடியவில்லை. கடன் கொடுக்கும் வங்கிகள் தான் யாரிடம் கடன் வாங்குவது என்று யோசிக்கின்றன. தற்போது உள்ள நிலைமையில் அமெரிக்காவில் வட்டிக்கடைகளின் (pawn shops) காட்டில் மழை. Cash advance, payday advance என்ற பெயரில் அதிக வட்டிக்கு பணம் விட்டு சம்பாதிக்கிறார்கள்.

ஐரோப்பிய நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு வங்கி வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகளுக்கு உத்திரவாதம் கொடுக்கின்றது. மக்களிடம் பரவும் பயத்தை கட்டுப்படுத்துவது மிக முக்கியமாகி விட்டது. பல நாட்டு மத்திய வங்கிகள் இன்று வட்டி விகிதத்தை குறைத்தால் பங்கு சந்தைகள் மீண்டும் உயரும். ஆனாலும் அது ஒரு தற்காலிக band-aid தான்.

வங்கிகளின் மீதும் அரசாங்கத்தின் மீதும் மக்களுக்கு முழு நம்பிக்கை வரும் வரை இந்த ரோலர் கோஸ்டர் பயணம் தொடரும்.

Related Links:

பொருளாதார சரிவு – 2008

செப்டம்பர் 15, 2008

Monday, October 06, 2008

ஹிந்தி சினிமாவும் அமெரிக்க பொருளாதார சரிவும்

அமெரிக்காவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டால், அது பாலிவுட் படத்தயாரிப்பாளர்களையும் பாதிக்கின்றது. இது பற்றிய விபரங்கள் இங்கே.

Devadas Movie

இது படிக்க வேடிக்கையாக தெரிந்தாலும் உண்மை. ஒரு காலத்தில் அரபு நாட்டினர் பாலிவுட் படங்களுக்கு பண உதவி செய்தனர். இப்போதும் அவர்கள் நிழல் மனிதர்களாக செயல் படுகின்றார்கள். ஆனால் சட்ட ரீதியாக, சினிமாவை ஒரு தொழில்துறையாக பாவித்து அதில் லண்டன்/அமெரிக்கா முதலீட்டாளர்கள் பல கோடிகளை முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள். இப்போது அதிலும் அடி.

Tuesday, September 30, 2008

இனி என்ன செய்யலாம்?

சுருக்கமாக சொல்வதென்றால், Just hang in there! நேற்று நடந்தது உலகின் இறுதி கிடையாது. இன்று நடப்பது புது அத்தியாயமும் கிடையாது. இந்த கலாட்டா இன்னும் பல வாரங்களுக்கு நீடிக்கும். தினமும் பங்கு விலைகளை பார்த்து டென்ஷனாகாமால் இருப்பது நல்லது. நீண்ட கால முதலீடு மட்டும் தான் நிம்மதியையும் நிதியையும் தரும்.

நேற்று ஏற்பட்ட மகாமக நெருக்கடியில் ஆப்பிள் பங்குகளை வாங்கினேன். இன்னும் விலை குறைந்தால் CSCO, MSFT, GOOG போன்ற பங்குகளை வாங்குவதாக இருக்கிறேன். நல்ல பங்குகள் எதுவும் நல்ல விலைக்கு கிடைக்காமல் இருந்தால், cash is king என்ற தாரக மந்திரத்தை ஞாபகம் வைத்துக் கொண்டு எதுவும் செய்யாமல் இருப்பதும் நல்லது.

அதே சமயம், என் போர்ட்போலியோவில் இருந்து கழட்டி விட வேண்டிய பங்குகளின் விலை சிறிது உயர்ந்தவுடன் விற்று விட் போகிறேன்.

அமெரிக்காவில் வீட்டு விலைகள் இன்னும் குறையலாம்.

401k மறுபடியும் 101k-ஆக மாறலாம். உங்களின் 401k கணக்கில் உள்ள பரஸ்பர நிதிகளை மறுபரிசீலனை செய்வது நல்லது. உங்களின் பல நிதிகள் emerging markets போன்ற ஏரியாவில் இருந்தால், அவற்றில் சில நிதிகளை விற்று விடலாம். இந்தியா, பிரேசில் பங்கு சந்தைகள் இன்னும் விழலாம்.

இந்திய ரியல் எஸ்டேட் இன்னும் அசரவில்லை. உலகில் எந்த பகுதியில் என்ன நடந்தாலென்ன, நம் ஊரில வீட்டு விலை அதிகமாக குறையாது என்ற பலத்த நம்பிக்கை இருக்கிறது. கணிணி நிறுவனங்கள் பரவலாக layoff செய்ய ஆரம்பித்தால் இந்த நிலைமை ஒரே வாரத்தில் மாறும். அமெரிக்க நிறுவனங்களை மட்டும் நம்பி இந்திய IT நிறுவனங்கள் கிடையாது. ஆனாலும், அமெரிக்க பொருளாதார பாதிப்பு ஐரோப்பாவிலும் பிரதிபலிக்கின்றது. அந்த பாதிப்பு ரஷ்ய பங்கு சந்தையை மூட வைக்கின்றது. அமெரிக்காவில் பொருளாதாரம் இன்னும் மோசமடைந்தால் இந்திய கணிணி நிறுவனங்களை அது நேரடியாக பாதிக்கும். அவற்றின் billing rate குறைவதற்கு சாத்தியங்கள் அதிகம்.

அமெரிக்காவில் வங்கிகள் விழுந்தது போல இந்தியாவிலும் வங்கிகள் மறைந்து போகலாம். அப்படி விழும் வங்கிகளில் ICICI வங்கி முதலாக இருக்கலாம். பேராசையை விட பயம் அதிக சக்தி வாய்ந்தது. பங்கு சந்தையில் பயம் பரவ ஆரம்பித்தால் அமெரிக்க ஜனாதிபதியால் கூட அதை நிறுத்த முடியாது.

Wednesday, September 24, 2008

இலவச கிரடிட் மானிட்டரிங் சேவை (Free credit monitoring service)

நீங்கள் அமெரிக்காவில் வசிப்பவராக இருந்தால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Credit monitoring service உங்களுக்கு இலவசமாக வேண்டுமா? இன்றே கடைசி நாள்! Transunion கம்பெனி மீது தொடுக்கப்பட்ட lawsuit-ன் பிரதிபலிப்பாக அந்த கம்பெனி கிரடிட் மானிட்டரிங் சேவையை ஒன்பது மாதங்களுக்கு இலவசமாக கொடுக்கின்றது.

மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக்கவும்.

Thursday, September 18, 2008

என்ன கொடுமை சார் இது?

அனைத்து MBA கல்லூரிகளிலும் campus placement-ல் Lehman Brothers-ல் வேலை கிடைத்தால் பெரிய விருந்து கொடுத்த காலம் இருந்தது, சில மாதங்கள் முன்பு வரை.இன்று அந்த நிறுவனத்தின் பங்கு Pink Sheet (over the counter) நிலைமைக்கு போய் விட்டது. வாழ்க்கை நமக்கு கொடுக்கும் பாடங்கள், சில நேரங்களில் மிக பிரமிப்பாக இருக்கிறது.

Monday, September 15, 2008

செப்டம்பர் 15, 2008

இந்த நாளைப்பற்றி வருங்கால சந்ததிகள் பேசும். கல்லூரிகளில் இந்த நாளில் நடந்த சம்பவங்கள் case study-ஆக விவாதிக்கப்படும்.

வியாபாரம் செய்பவர்களுக்கு அமெரிக்கா ஒரு சொர்க்க பூமி. ஊழல், லஞ்சம், தேவையில்லா தடங்கல்கள், அரசியல்வாதிகள் தலையீடு போன்ற எந்த தொந்தரவும் இல்லாமல் வியாபாரத்தில் மட்டும் கவனம் செலுத்தலாம். அரசாங்கம் கொடுக்கும் பூரண சுதந்திரத்தை சிலர் தவறாக பயன்படுத்தியதால், அமெரிக்க பங்குச் சந்தைகளில் இன்று மீண்டும் ரத்த ஆறு.இது இன்றோடு முடிய போவதில்லை. இன்னும் பல மாதங்கள் தொடரும். இன்னும் சில மாதங்களில் Wachovia, சிட்டி பேங்க் போன்ற வங்கிகள் கவிழலாம். மெரில் லிஞ்ச் போன்ற மிகப் பெரிய நிறுவனத்தை சொற்ப விலைக்கு வாங்கியதால் பேங்க் ஆப் அமெரிக்கா இன்று பூரித்துப்போய் இருக்கிறது. இந்த மெர்ஜர் ஒரு வகையில் நல்லது தான். ஆனாலும் பேங்க் ஆப் அமெரிக்கா போன்ற ரீடெய்ல் வங்கிகள் மெரில் லிஞ்ச் ஊழியர்களை கையாள முடியுமா என்பது கேள்விக்குறி.

சில மாதங்களுக்கு முன்னால் countrywide நிறுவனத்தை பேங்க் ஆப் அமெரிக்கா சொற்ப விலைக்கு வாங்கியது. அப்போது புத்திச்சாலித்தனமாக தெரிந்த மெர்ஜர் இன்று அவ்வளவு புத்திச்சாலித்தனமாக தெரியவில்லை. மெரில் லிஞ்ச் நிறுவனத்தின் internal politics மற்றும் அதீத கடன்களை பேங்க் ஆப் அமெரிக்கா எப்படி சமாளிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த கலாட்டாவில் பேங்க் ஆப் அமெரிக்கா வங்கியும் lehman brothers போல திவாலானால் கூட ஆச்சரியப்பட மாட்டேன்.

இந்த financial chaos-ல் அதிக அடி படாமல் Goldman Sachs போன்ற நிறுவனங்கள் தான் மீண்டு வரும்.
தொடர்புள்ள இணைப்பு:

வங்கிகளுக்கு புதுவிதமான தலைவலி

Sunday, September 14, 2008

பங்கு சந்தை முதலீடு

பங்குச்சந்தை முதலீட்டைப் பற்றி சமீபத்தில் நான் பார்த்த விளம்பரம். A picture is worth more than thousand words!

ஹோம் ஸ்கூலிங்

Home schooling என்பதை பல பெற்றோர்கள் விரும்புகிறார்கள். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் தான் அவர்களுக்கு social skills கிடைக்கும் என்பது என் கட்சி. ஆனாலும், சில அமெரிக்க பள்ளிகளில் நடக்கும் வன்முறைகளை பார்த்து பயந்து போய் வீட்டிலிருந்து படிப்பதே சிறந்தது என்று பல பெற்றோர்கள் நினைக்கிறார்கள்.வாஷிங்க்டன் மாநிலத்தில் வசிக்கும், ஹோம் ஸ்கூலிங்கை விரும்பும் பெற்றோர்களுக்கு வாஷிங்டன் விர்ச்சுவல் அகாடமி பயனுள்ளதாக இருக்கும். அமெரிக்க பொது பள்ளிகளில் உள்ளதை போலவே கட்டணம் எதுவும் கிடையாது.


தொடர்புள்ள இணைப்புகள்:

http://www.homeschool.com/articles/Texas_Tech/default.asp
http://www.depts.ttu.edu/ode/
http://homeschooling.gomilpitas.com/

Monday, September 01, 2008

வங்கிகளுக்கு புதுவிதமான தலைவலி

நியூயார்க் நகரத்து வீதிகளில் நடந்து போகும் போது வானளாவிய வங்கி கட்டிடங்களை பார்த்து மலைத்து போயிருப்பீர்கள். “இவர்களிடம் இவ்வளவு பணமா!” என்று வியந்து போயிருக்கலாம். எல்லா பணமும் OPM (Other people’s money) தான். இந்த வங்கிகளில் பெரும்பாலானவை இப்போது வாடிக்கையாளர்களிடம் வாங்கிய பணத்தை எப்படி திரும்ப கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கின்றன.

Lehman Brothers Building, 745 7th Ave

Sub-prime crisis கிட்டத்தட்ட Chaos theory போல கதை மாறிக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் சில வங்கிகள் புத்திசாலித்தனமாக செயல்படுவதாக நினைத்துக் கொண்டு, கடன்களை வாரி இறைத்தன. 2003-04 வருடங்களில் வீட்டு கடனுக்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களிடம் சில வங்கிகள் சம்பள ஆதாரங்களை கூட கேட்டதில்லை. “வீட்டு விலை இனிமேல் குறையவே குறையாது” என்ற ஞானோதயம் வந்ததனால் பல வங்கிகள் கண்களை மூடிக்கொண்டு கடன் கொடுத்தார்கள். அது சப்-பிரைம் பூதமாக உருமாறி பல வங்கிகள் திவாலாகி விட்டன. Lehman brothers போன்ற ஜாம்பவான்கள் கூட கவிழ்ந்து விட்டார்கள்.

இதன் தொடர்ச்சியாக ஒரு புதுவிதமான கடன் பிரச்னையை எப்படி சமாளிப்பது என்று பல வங்கிகள் யோசித்துக் கொண்டிருக்கின்றன. பல வாடிக்கையாளர்களிடம் டெபாசிட் வாங்கி சில வாடிக்கையாளர்களிடம் கடன் கொடுத்து வட்டி வாங்குவது தான் வங்கிகளின் ஆதாரம். 2006-ல் floating rate notes என்ற பெயரில் வங்கிகள் வாங்கிய டெபாசிட்டுகள் இன்னும் சில மாதங்களில் mature ஆகின்றன. வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும். ஆனால் வங்கிகளிடம் போதுமான அளவுக்கு பணம் இல்லை.

இந்த மாதத்தில் மட்டுமே சில வங்கிகள் 95 பில்லியன் டாலர் floating rate notes-களுக்கான பணத்தை வாடிக்கையாளர்களிடம் திரும்ப கொடுக்க வேண்டும். 2009 கடைசிக்குள் கிட்டத்தட்ட 787 பில்லியன் டாலர்களை floating rate notes சம்பந்தமாக வங்கிகள் திரும்ப கொடுக்க வேண்டும். பானையில் இருந்தால் தானே சாதத்தை கொடுக்க முடியும். பானையின் கீழே பெரிதாக ஓட்டை போட்டவர்களே இன்று பானையில் ஒன்றுமில்லையென்று அமெரிக்க மத்திய வங்கி அதிகாரிகளை திட்டுகிறார்கள்.

அமெரிக்காவில் வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை இன்சூரன்ஸ் செய்யும் Federal Deposit Insurance Corp (FDIC) நிறுவனத்தின் கணிப்பின்படி 117 வங்கிகள் தாங்கள் வாங்கிய floating rate டெபாசிட்டுகளை திரும்ப கொடுக்க முடியாமல் போகலாம்.

உங்கள் வங்கி கணக்கில் $100,000க்கு மேல் பணம் இருந்தால் அதிகமாக உள்ள பணத்தை FDIC பாதுகாப்புள்ள வேறு வங்கிகளுக்கு மாற்றுங்கள். சில வங்கிகளில் ஒவ்வொரு அக்கவுண்டுக்கும் $100,000 வரை FDIC பாதுகாப்பு தரும். உதாரணமாக, நீங்கள் Wells Fargo வங்கியில் செக்கிங் அக்கவுண்ட் வைத்திருந்தால் அதற்கு $100,000 வரை FDIC பாதுகாப்பு உண்டு. அதே வங்கியில் CD அக்கவுண்டில் $100,000 வரை வைத்திருந்தால் அதற்கும் $100,000 வரை முழு பாதுகாப்பு உண்டு. மேலும் விபரங்களுக்கு FDIC வலைத்தளத்தை பார்க்கவும்.

இந்த பிரச்னை அமெரிக்காவோடு நிற்கவில்லை. ஐரோப்பிய நாடுகளிலும் இதன் தாக்கம் இருப்பதாக தகவல். இந்த வருட கடைசிக்குள் கோல்ட்மேன் சாக்ஸ், மெரில் லிஞ்ச், மார்கன் ஸ்டான்லி, வெல்ஸ் பார்கோ போன்ற பல வங்கிகள் floating rate டெபாசிட்டுக்கான பல பில்லியன் டாலர் பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும். இத்தாலியின் யுனிகிரடிட் வங்கிக்கும் இதே பிரச்னை.

Lehman brothers $60-லிருந்து $16-க்கு விழும் என்று போன வருடம் யாராவது சொல்லியிருந்தால் அவரை ஏளனமாக பார்த்திருப்பார்கள். அப்படிப்பட்ட super-duper நிறுவனமே இன்று தள்ளாடுகின்றது. நம் பணத்தை நாம் கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.

Wednesday, August 06, 2008

அமெரிக்க ரியல் எஸ்டேட்

அமெரிக்க ரியல் எஸ்டேட் மார்க்கெட்டுக்கு 2009 கடைசி வரை கெட்ட காலம் தான் என்று Stern school of business பேராசிரியர் அடித்து சொல்கிறார், அதன் பிறகு கூட அமெரிக்காவில் வீட்டு விலை அதிகமாக ஏறாது என்றும் சொல்கிறார்.நீங்கள் முதலீட்டுக்காக வீடுகளை வாங்குபவராக இருந்தால் பேராசிரியர் லாரன்ஸின் கருத்துக்களை கவனத்தில் கொள்வது நல்லது. நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. இருந்தாலும் Stern கல்லூரியின் பேராசிரியர் சொல்லும் போது அதை அலட்சியப்படுத்த முடியவில்லை.

Sunday, July 20, 2008

அதிகமான மில்லியனர்களை உருவாக்கிய நாடு…

…இந்தியா!

2006-07ல் அதிகமான மில்லியனர்களை இந்தியா உருவாக்கியுள்ளது. இதில் பெரும்பாலானோர் ரியல் எஸ்டேட்டில் பணத்தை அள்ளியிருப்பார்கள்.

Indian Millionaires

Monday, July 14, 2008

தலைமை அதிகாரிகளுக்கும் வேட்டு

அமெரிக்க சப்-பிரைம் கடன் பிரச்னை யாரையும் விட்டு வைக்கவில்லை. தலைமை அதிகாரிகள், பொருளாதார நிபுணர்கள், கன்ட்ரோலர்கள் பலரும் வேலையை இழந்து விட்டார்கள். நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள் மட்டுமல்லாது, நடுத்தட்டு மேலாளர்கள் பலர் வேலை இழந்து விட்டார்கள். நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இன்னும் என்ன நடக்குமோ என்ற பீதி இருக்கிறது.

“பெரிய பெரிய ஆளெல்லாம் வீட்டுக்கு போய் விட்டார்கள், நமக்கு இன்னும் எத்தனை நாள் வேலையோ” என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. முக்கியமாக வங்கிகள் மற்றும் நிதி சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களிடம். Techcareers தளத்தில் இது பற்றி நன்றாக எழுதியிருக்கிறார்கள். நீங்கள் நிதித்துறையில் பணிபுரிவராக இருந்தால் அவசியம் படிக்கவும்.

நீங்கள் வங்கி பங்குகளில் முதலீடு செய்திருந்தால் இன்னும் சில மாதங்களுக்கு roller coaster ride-ல் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.

RKH Chart

credit crisisதொடர்புள்ள பதிவு: Finance officers brace for worst of credit crunch

Monday, June 30, 2008

சூப்பர் மார்க்கெட்டுகளில் பணத்தை சேமிப்பது எப்படி?

சுலபமான வழி கூப்பன்களை உபயோகிப்பது தான். அமெரிக்க கடைகளில் பல விதமான தள்ளுபடிகளை கொடுக்கிறார்கள். ஆனால் எந்த கடையில் என்ன தள்ளுபடி என்பதை தெரிந்து கொள்ள பல விளம்பரங்களை படிப்பதை விட சிறந்த வழி கூப்பன்களுக்கான வலைத்தளங்களை பார்ப்பது தான்.

Coupons.com:

அதிக ட்ராபிக் உள்ள வலைத்தளம். உங்கள் zipcode-ஐ கொடுத்தால் உங்கள் ஏரியாவில் இன்று எந்த கடையில் என்ன தள்ளுபடி என்று தெரிந்து கொள்ளலாம்.

CouponMountain.com:

Safeway போன்ற கடைகள் மட்டுமல்லாது கம்ப்யூட்டர் கடைகளின் கூப்பன்களும் கிடைக்கின்றது.

Save using Coupons

Couponmom.com, Smartsource.com மற்றும் mygrocerydeals.com போன்ற தளங்களிலும் உபயோகமான தகவல்கள் உள்ளன.

இந்தியாவில் கூப்பன்களை மார்க்கெட்டிங் உத்தியாக பல கடைகள் பயன்படுத்துவதில்லை. அந்த நிலைமை கொஞ்சமாக மாறி வருகின்றது. அதை பணமாக்குவதற்காக கூப்பன்.காம் போன்ற வலைத்தளங்கள் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் கூப்பன்.காம் போல இலவச சேவை கொடுக்காமல் moneysaver.in போன்ற தளங்கள் 399 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றன. மணிசேவர் வலைத்தளம் தற்போது வட இந்திய நகரங்களுக்கு மட்டுமே.

மேலே குறிப்பிட்ட தளங்களை போல வேறு வலைத்தளங்கள் இருந்தால் தயவு செய்து பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளவும்.

Monday, June 23, 2008

முதலீட்டாளர்களை கவர்வது எப்படி?

புதிதாக வியாபாரம் தொடங்குபவர்களுக்கு முதலீடு ஒரு பெரிய தடை. சூப்பரான ஐடியா மனதை உறுத்திக் கொண்டிருக்கும், ஆனால் அதை நடைமுறைப்படுத்த நல்ல முதலீட்டாளர்கள் (investors) கிடைக்காததால் பல ஐடியாக்கள் சூரிய வெளிச்சத்தை பார்க்காமலே மண்ணுக்குள் புதைந்திருக்கின்றன.

சிறந்த முதலீட்டாளர்களை எப்படி கவர்வது, நல்ல விதமாக முதலீடு கிடைக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி சில நல்ல வீடியோ படங்கள் vator.tv தளத்தில் உள்ளன. முதலீடு தேடுபவர்களுக்கு இது உபயோகமாக இருக்கும்.Tuesday, June 10, 2008

துபாய் மெட்ரோ

துபாய் மெட்ரோ சமீபத்தில் ஒரு விளம்பரம் கொடுத்திருந்தது. பெரிய நிறுவனங்கள் தங்களின் பெயரை துபாய் மெட்ரோ ஸ்டேஷனுக்கு வைக்கலாம்… பல மில்லியன் டாலர்களை கொடுத்துவிட்டு.இது ஒரு நல்ல ஐடியா. சென்னை மாநகரத்தில் மெட்ரோ ரயில்கள் விடப்படும் என்று பல வருடங்களாக பல அரசியல்வாதிகள் காதில் பூ சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு ஐடியாவை உபயோகித்து சென்னையில் உள்ள பெரிய நிறுவனங்களின் பெயரை ஸ்டேஷன்களுக்கு வைத்து மெட்ரோவை ஓட விடலாம். பட்ஜெட் பிரச்னை தீர்வதற்கு இது ஒரு நல்ல வழி.

Friday, June 06, 2008

வலைப்பதிவுகளின் வருமானம் 2000 கோடி ரூபாய்!

2006 வருடத்தில் மட்டுமே பிரபலமான வலைப்பதிவுகளின் விளம்பர வருமானம் 500 மில்லியன் டாலர்கள் (2000 கோடி ரூபாய்)! டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு அறிக்கை கூறும் விஷயம் இது.

பிரபலமான வலைப்பதிவுகளில் டாப் 15 சதவிகித வலைப்பதிவுகள் 500 மில்லியன் டாலரில் 90 சதவிகிதத்தை ($450 மில்லியன்) அள்ளியிருக்கின்றன.

வலைப்பதிவாளர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி. தமிழ் வலைப்பதிவுகளை படிப்பவர்கள் இன்னும் அதிகமானால், தமிழ் வலைப்பதிவாளர்களும் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்புகள் இருக்கின்றது. இந்தியாவில் வலைப்பதிவுகளை படிப்பவர்கள் இன்னும் குறைவாகவே உள்ளனர். இந்தியாவில் இன்டர்நெட்டை பயன்படுத்துபவர்களில் 40 சதவிகிதம் இன்டர்நெட் கஃபேயை நம்பியிருக்கிறார்கள். மேலை நாடுகளில் உள்ளது போல எல்லோரும் வீட்டிலிருந்தே இன்டர்நெட்டை உபயோகித்தால் தமிழ் வலைப்பதிவுகளை இன்னும் பல லட்சம் பேர் படிக்க வாய்ப்புள்ளது. அப்படி ஒரு நிலைமை வரும் போது உங்கள் வலைப்பதிவு பிரபலமாக இருந்தால், உங்கள் காட்டில் மழை தான்!

அப்படி ஒரு நிலைமை வரும் என்று எதிர்பார்த்து தான் ஆனந்த விகடன் வலைத்தளத்தில் வாசகர்கள் பின்னூட்டங்களை அதிகமாக எழுதுவதற்கு உற்சாகம் கொடுக்கிறார்கள். வெறுமனே படித்து விட்டு போவதை விட வாசகர்களின் interaction இருந்தால், வலைத்தளங்களுக்கு stickiness கிடைக்கும். அதன் கூடவே நிறைய பணமும் கிடைக்கும்.

தொடர்புள்ள இணைப்பு: டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு அறிக்கை (PDF)

Saturday, May 10, 2008

விவசாய தானியங்களில் முதலீடு

பங்குகள், பாண்டுகள், எண்ணெய் மற்றும் தங்கத்தை விட தானியங்களில் (agricultural commodity) முதலீடு செய்வது தற்போது அதிக லாபத்தை தருகிறது! இந்திய, சீனா மற்றும் வளரும் நாடுகளில் உணவு தேவை அதிகமாகி வருவதால், விவசாய தானியங்களின் விலை உயர்ந்து வருகிறது.

பொட்டாஷ்
(Potash Corp) நிறுவனம் விவசாயிகளுக்கு தேவையான உரம் போன்ற கெமிக்கல்களை தயாரிக்கிறது. இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த வருடத்தில் மூன்று மடங்காகி விட்டது. இது போன்ற தனிப்பட்ட பங்குகளில் முதலீடு செய்வதை விட விவசாய பொருட்களுக்கான ETFகளில் முதலீடு செய்யலாம்.

PowerShares DB Agricultural Fund கடந்த வருடத்தில் 50% லாபம் கொடுத்திருக்கிறது. கோதுமை, சோளம், சோயாபீன்ஸ் மற்றும் சர்க்கரை போன்ற பல விவசாய தானியங்களின் விலையை பொறுத்து இந்த நிதியின் லாப/நஷ்ட விகிதம் மாறும். இந்த வருடத்தில் மட்டுமே 10% லாபம் கொடுத்திருக்கின்றது.

ETF தவிர ETN (Exchange Traded Notes) என்ற கடன் சாதனமும் விவசாய தானியங்களில் முதலீடு செய்ய உதவும். The Lehman Brothers Commodity Index Pure Beta Agricultural Total Return ETN என்ற ETN போன வருடம் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கின்றது.

விவசாய தானியங்களின் விலை உயர்வது விவசாயிகளுக்கு நல்லது. ஆனாலும், விலை உயர்வு ஒரு அளவை தாண்டி விட்டால், பல நாடுகளில் உள்நாட்டு கலவரம் வாய்ப்பிருக்கிறது என்று உலக வங்கி பயமுறுத்தியிருக்கிறது. அது ஒரு extreme போல தோன்றினாலும், பல நாடுகளின் நிதி அமைச்சர்கள் உணவு விலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தன் நாட்டின் உணவு விலையை கட்டுப்படுத்த தாய்லாந்து நாடு அரிசி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தி விட்டது. இதனால் தான் Costco கடைகளில் அரிசியை ரேஷன் முறையில் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்! சிலர் 200 மைல் பயணம் செய்து சான்பிரான்சிஸ்கோ வந்து Costco கடையில் தாய்லாந்து ஜாஸ்மின் அரிசியை வாங்கி செல்வதாக BusinessWeekல் ரிப்போர்ட் வந்திருக்கின்றது.

Tuesday, April 22, 2008

எங்கே போனது மனித நேயம்?

தேர்தலில் தான் அடைந்த தோல்விக்கு பழி வாங்குவதற்காக, இளந்தளிர்களை ஒரு சூனியக்கிழவி சூறையாடியிருக்கிறாள். இது போன்ற மனிதர்களை நடுத்தெருவில் வைத்து சுட்டு தள்ள வேண்டும்.

இந்த கொடுமையை பற்றிய சில விபரங்கள் இங்கே. அரசியல், கொலை பாதகம், வஞ்சம் என்ற எதுவுமே அறியாத மொட்டுக்களின் வாழ்வை நாசம் செய்திருக்கிறார்கள். பழி வாங்கும் முயற்சியில் சில மனிதர்கள் மிருகத்தை விட கேவலமாக மாறி விடுகிறார்கள்.

Sunday, April 13, 2008

சமூக பிணைப்பு (Social Networking)

முதலில் உங்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! அரசியல்வாதிகளுக்கு தமிழ் புத்தாண்டு தை ஒன்றில் தொடங்கினாலும் பரவாயில்லை, நமக்கு இன்று தான் தமிழ் புத்தாண்டு.

சோஷியல் நெட்வொர்க்கிங் என்ற ஒரு hype இந்தியாவிலும் பரவலாகி விட்டது. Myspace, Facebook மற்றும் Friendster போன்ற தளங்களின் பல பில்லியன் டாலர்கள் மதிப்பை பார்த்து பல வலைத்தளங்கள் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Fropper தளம் எந்த வருமானமும் இல்லாமல் பல கோடி ரூபாய்களை HBO, STAR MOVIES சேனல்களில் அள்ளி வீசி விளம்பரம் செய்கின்றது. விட்ட பத்து கோடியை சில வருடங்களில் ஆயிரம் கோடியாக அள்ளி விடலாம் என்ற நம்பிக்கை தான். Bharatstudent போன்ற தளங்கள் மாணவர்களை வளைத்து போடுவதற்காக அனைத்து தந்திரங்களும் செய்கிறார்கள். ஆனால் மாணவர்கள் யாரும் orkut தளத்தை விட்டு வெளியே வருவது போல தெரியவில்லை. ibibo தளம் வெறித்தனமாக பணத்தை தண்ணீராக செலவு செய்து வருகிறது. Bigadda, Indyarocks போன்ற தளங்களும் ரேஸில் சேர்ந்து விட்டன.

இந்த தளங்கள் அனைத்துக்கும் ஒரு common thread உள்ளது -- "சினிமா, காதல், கவர்ச்சி, செக்ஸ், சினிமா இசை, சினிமா நடிகர்கள்/நடிகைகள் பற்றிய விபரங்கள்". இந்த தளங்கள் அனைத்தும் இப்படி தான் இளைஞர்களை கவர்ந்து இழுக்கின்றன. சமூக பிணைப்புக்கும் ஷாருக்கானுக்கும் என்ன சம்பந்தம்? ஷாருக்கான் படத்தை பார்க்க வாருங்கள் என்று தான் big adda விளம்பரம் கொடுக்கிறது. இந்தியாவை பொறுத்த வரை சினிமாவை வைத்து தான் மக்களை கவர்ந்திழுக்க முடியும் என்று முடிவு செய்து விட்டார்கள் போலிருக்கிறது. அமெரிக்கா ஆன்லைன் தளத்தின் இந்திய பிரிவு கூட "தமிழில் சினிமா பற்றிய சூடான செய்திகள்" என்று தான் விளம்பரம் செய்கிறார்கள்.

என்னை பொறுத்த வரைக்கும் சோஷியல் நெட்வொர்க்கிங் என்பது just hype. 14 - 24 வயதினருக்கு டைம் பாஸ். என் தெருவில் இருக்கும் ஒரு சிடுமூஞ்சி myspace மற்றும் facebook தளங்களில் நண்பர்களை தேடிப் பார்க்கிறார். ஆனால் தெருவில் இருக்கும் எல்லோருடனும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். நம்மை சுற்றியுள்ளவர்களுடன் சந்தோஷமாக வாழ்வது தான் உண்மையான சோஷியல் நெட்வொர்க்கிங்.

Monday, April 07, 2008

பொருளாதார சரிவு – 2008

வங்கிகள் வாங்கிய அடியால் அடியேனும் பாதிக்கப்பட்டதால் அடிக்கடி எழுத முடியவில்லை. சமீபத்தில் வலையுலக நண்பர் மின்னஞ்சல் அனுப்பி ஞாபகப்படுத்தியதால், அவருக்கு நான் அனுப்பிய பதிலையே இந்த பதிவாக எழுதியிருக்கிறேன்.

மத்திய வங்கியின் தலைவரே சொல்லிவிட்டார், பொருளாதார சரிவு வந்து விடும் என்று. சில வாரங்களுக்கு முன்னால் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை நடத்திய கருத்துக் கணிப்பில் பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் பொருளாதார சரிவு ஏற்கனவே ஆரம்பித்து விட்டது என்று கருத்து கூறியுள்ளார்கள். வேலை இழந்தவர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது நாம் தற்போது பொருளாதார சரிவின் காலத்தில் தான் இருப்பது போல தோன்றுகிறது.

இந்திய சந்தைகளும் அமெரிக்க பொருளாதார சரிவு மற்றும் அமெரிக்க வங்கி குளறுபடிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்திய சந்தைகளின் சமீப கால அபார லாபங்கள் இனி மேல் தொடராது என்ற நம்பிக்கை பரவலாக இருக்கிறது. இந்திய சந்தை மட்டுமல்ல, பொதுவாக “emerging markets” அனைத்துமே இனி மேல் பெரிதாக லாபம் கொடுக்காது என்று பல நிபுணர்கள் கணிக்கிறார்கள். நான் இந்த வலைப்பதிவை ஆரம்பிக்கும் போது என் முதல் பதிவு emerging markets பற்றியது. அக்டோபர் 2005-லிருந்து இரண்டு வருடங்களாக சக்கை போடு போட்ட emerging market பரஸ்பர நிதிகள் தற்சமயம் நிதானமாக நடை போடுகின்றன. உங்களின் கணக்கில் இப்படிப்பட்ட பரஸ்பர நிதிகள் இருந்தால் அவற்றின் விகிதங்களை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.

பிரேசிலும் ரஷ்யாவும் இன்னும் வீறு நடை போடுகின்றன. இந்திய மற்றும் சீன சந்தைகளின் முதலீட்டாளர்களுக்கு பயம் வந்திருக்கிறது. போன வருடம் வரை தங்களின் பங்குகள் கீழே விழாது என்று அதீத நம்பிக்கையில் இருந்தவர்கள் தற்சமயம் உண்மை நிலைமையை புரிந்து கொண்டிருக்கிறார்கள். தாய்லாந்து நாட்டில் புத்த மத துறவிகள் மந்திரித்து கொடுத்த தாயத்துக்களை கட்டிக் கொண்டு பங்கு சந்தையில் விளையாடினால் நஷ்டம் வராது என்று சூதாடி தாய்லாந்து நாட்டவர் பலர் இன்று கடனிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார்கள். போன வருடம் இந்த தாயத்துக்களின் மார்க்கெட் 1.5 பில்லியன் டாலர்கள் என்று தாய்லாந்து வங்கி புள்ளி விபரம் சொல்கிறது.

தாய்லாந்து நாட்டு தாயத்துக்கள்

இந்த வருடம் பொருளாதார சரிவிலிருந்து அமெரிக்க பங்கு சந்தை மீளும்போது தொழில் நுட்ப பங்குகள் நல்ல லாபம் கொடுக்கும் என்று பரவலான கருத்து இருக்கிறது. கீழ்க்கண்ட டெக் பரஸ்பர நிதிகள் கடந்த காலங்களில் நல்ல லாபம் கொடுத்திருக்கின்றன. இவற்றின் மேல் ஒரு கண் வைத்திருங்கள்.

Columbia Technology (CMTFX)
Fidelity Select Computers (FDCPX)
Matthews Asian (MATFX)
Fidelity Select Software (FSCSX)

கீழ்க்கண்ட பரஸ்பர நிதிகளும் வருங்காலத்தில் பிரகாசிக்கலாம். இவை மீது உங்களின் இன்னொரு கண்ணை வைத்திருங்கள்!

Amana Growth (AMAGX)
Fairholme (FAIRX)
USAA precious metals (USAGX)

Related Posts Plugin for WordPress, Blogger...