Sunday, October 21, 2007

பாபி ஜிந்தால்

கேட்கவே மனதுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பாபி ஜிந்தால் லூசியானா மாநிலத்தின் கவர்னராகி விட்டார்.

இந்திய அமெரிக்கர் ஒருவர் அமெரிக்க கவர்னராவது இது தான் முதல் முறை. அதுவும் 36 வயதில்! Just Great!

இந்த செய்தியை கேட்கும் பெரும்பாலான இந்தியர்கள் ஆச்சரியப்படுவார்கள், சந்தோஷப்படுவார்கள், பெருமைப்படுவார்கள்.

இந்த வெற்றியை அடைவதற்கு பாபி ஜிந்தால் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்று அமெரிக்காவில் வாழும்/வாழ்ந்த இந்தியர்களுக்கு நன்றாக புரியும். அமெரிக்காவில் மட்டுமல்ல, எந்த ஒரு நாட்டிலும் வெளிநாட்டு வம்சாவளியினர் அரசியலில் உயர் பதவிக்கு வருவது மிக பெரிய சாதனை.

பிற்காலத்தில் பாபி ஜிந்தால் அமெரிக்க ஜனாதிபதியானால் கூட ஆச்சரியப்பட மாட்டேன். அந்த அளவுக்கு அமெரிக்க மக்களின் மனப்பக்குவம் மாறியிருக்குமா என்று தெரியாது.

மனதில் பலம் இருந்தால் எதையும் நடத்தி காட்டலாம். திரு. ஜிந்தாலுக்கு அது நிறையவே இருக்கிறது!

தொடர்புள்ள தளங்கள்:

பாபி ஜிந்தால்.காம்

பாபி ஜிந்தாலின் வலைப்பதிவு

பாபி ஜிந்தால் நல்லவர்!

பாபி ஜிந்தால் கெட்டவர்!

2 comments:

ராதாகிருஷ்ணன் said...

இந்த செய்தி கண்டிப்பாக வெளிநாட்டு வாழ் நண்பர்களுக்கு பெரிய ஊக்கமாக அமையும் என நம்புகிறேன்.

Bharathi said...

நிச்சயமாக! தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...