Thursday, October 04, 2007

வெற்றிகரமான வலைப்பதிவுகளை எழுதுவது எப்படி?

இந்த மாதிரி தடாலடியாக தலைப்பு கொடுப்பது ஒரு வழி. தலைப்பு மட்டும் கொடுத்தால் போதாது, உள்ளே விஷயமும் வேண்டுமே…!

இது போன்ற ப்ளாக் போஸ்ட்டை எழுதுவதற்கு எனக்கு தகுதி இருக்கின்றதா என்று தெரியவில்லை, இருந்தாலும் என்னுடைய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தமிழ்நிதியில் எனக்கு பெர்சனலாக பிடித்த பல பதிவுகளை எழுதியுள்ளேன், அவற்றுக்கெல்லாம் கிடைக்காத ஹிட்ஸ் சினிமா இசையமைப்பாளர் ரஹ்மானைப் பற்றி எழுதிய போது கிடைத்தது.

Rule # 1: சினிமா சம்பந்தப்பட்ட சுவையான செய்திகளை எழுதுங்கள்!

எனது ஆங்கில வலைப்பதிவில் இது வரை அதிக ஹிட்ஸ் கிடைத்தது சர்க்கரை நோய் பற்றிய e-book சம்பந்தமாக நான் எழுதிய பதிவிற்கு. கூகிளில் “Mark Anastasi” என்று தேடுங்கள். முதல் பக்கத்தில் ஏழாவது லிங்க் என் வலைப்பதிவிற்கு வழி காட்டும்.

Rule # 2: எல்லோருக்கும் பயன்படக்கூடிய, முடிந்தால் controversy உள்ள விஷயத்தை தேர்ந்தெடுத்து அதை பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி செய்து எழுதுங்கள். மற்ற செய்திகளிலிருந்து கட் & பேஸ்ட் செய்தால் சரி வராது.

இவை தவிர சில பொதுவான விதிகள்:

Rule # 3: பெரும்பாலான விசிட்டர்கள் ஒவ்வொரு வார்த்தையையும் படிப்பதில்லை. பொதுவாக skim செய்து அடுத்த பாராவுக்கு போய் விடுவார்கள். சொல்ல வந்த விஷயத்தை “நச்” என்று சொல்லி விட்டால், படிப்பவர்களுக்கு பிடிக்கும்.

Rule # 4: உங்கள் வலைப்பதிவை படிக்கும் அனைவருக்கும் பயன்படும்படியாக எழுதுங்கள்.


ஹிட்ஸ் வரலாம், ஆனால் அது பணமாக மாறுமா?! என்னுடைய அனுபவம் சொல்லும் பதில் – “இல்லை”!

வலைப்பதிவில் அறிமுகமான சில நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ளும் போது கேட்கும் கேள்வி “பிளாக்குகளால் நிறைய பணம் சம்பாதிக்க முடியுமா?”.

நான் தமிழ்நிதி எழுத ஆரம்பித்த போது பணத்தை பற்றி யோசிக்கவே இல்லை. தமிழ் மீது உள்ள ஆர்வத்தால் எழுத ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகி விட்டது… நண்பர்கள் மூலமாக தமிழில் பிளாக் எழுதுவது பற்றி கேள்விப்பட்டு அஞ்சல் மென்பொருளில் “தமிழ்” என்று அச்சடித்த போது த்ரில்லிங்காக இருந்தது.

மாதா மாதம் adsense-ல் கிடைக்கும் பணம் அவ்வளவு த்ரில்லிங்காக இல்லை! இரண்டு டாலரிலிருந்து மூன்று டாலர் வரை கூகிள் புண்ணியவான்கள் கொடுக்கிறார்கள், அந்த காசில் Starbucks காப்பி கூட கிடைக்காது.

தமிழ்நாட்டில் இன்னும் பல லட்சம் பேருக்கு இன்டர்நெட் வசதி கிடைக்கும் போது இந்த நிலைமை மாறலாம். மேலை நாடுகளில் சிலர் பிளாக் எழுதுவதை முழு நேர வேலையாக வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல வருமானமும் கிடைக்கிறது.

சிறந்த உதாரணம்: மைக்கேல் ஆரிங்டன்

இந்தியாவில் சிறந்த உதாரணம்: அமித் அகர்வால்

கூகிள் போன்ற விளம்பர நிறுவனங்கள் தமிழ் பதிவுகளை புரிந்து கொண்டு அதற்கேற்றபடி விளம்பரங்கள் கொடுப்பதில்லை. பங்கு சந்தை பற்றி நான் எழுதினால் “Food for the brain” என்று விளம்பரம் கொடுக்கிறார்கள். அந்த விளம்பரத்தை யார் கிளிக் செய்வார்கள்?!

நீங்கள் வலைப்பதிவாளராக இருந்தால், உங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் பின்னூட்டத்தில் எழுதுங்கள்.

12 comments:

OSAI Chella said...

நச்!

மங்களூர் சிவா said...

தமிழ் நிதிங்கிற வலைப்பூ பேரை வெற்றிகரமான் வலைபதிவு அப்படின்னு மாத்திடுங்க

மங்களூர் சிவா said...

//
சினிமா சம்பந்தப்பட்ட சுவையான செய்திகளை எழுதுங்கள்!
//
கொலை வெறியோடு தலைப்பு வைக்கலாம் உதாரணத்துக்கு நான் ஒரு பதிவுக்கு சம்பந்தமே இல்லாமல் வைத்த தலைப்பு

"தாரா தாரா நயந்தாரா"

மங்களூர் சிவா said...

//
Rule # 2: எல்லோருக்கும் பயன்படக்கூடிய, முடிந்தால் controversy உள்ள விஷயத்தை தேர்ந்தெடுத்து அதை பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி செய்து எழுதுங்கள்
//

ஆண்கள் எல்லாம் கலாச்சாரம் சீரழிந்து விட்டது எனவும்

பெண்களாக இருந்தால் பெண்ணீயம் எழுதினால் போதும்

இல்லாட்டி இருக்கவே இருக்கு நம்ம குஷ்பு சொன்ன 'கற்பு' மேட்டர்

மங்களூர் சிவா said...

//
இரண்டு டாலரிலிருந்து மூன்று டாலர் வரை கூகிள் புண்ணியவான்கள் கொடுக்கிறார்கள், அந்த காசில் Starbucks காப்பி கூட கிடைக்காது.
//
உங்க ப்ளாக்ல ஒரு ஆட் கூட நான் பாத்ததில்லையே???

மங்களூர் சிவா said...

//
பங்கு சந்தை பற்றி நான் எழுதினால் “Food for the brain” என்று விளம்பரம் கொடுக்கிறார்கள். அந்த விளம்பரத்தை யார் கிளிக் செய்வார்கள்?!
//
வாங்க ப்ராபிட் ஷேரிங் அக்ரிமென்ட் போட்டுக்குவோம் வேற வேற IP ல இருந்து நான் க்ளிக் பண்ணறேன்

:-)))))))))))))

Bharathi said...

சிவா: வலைப்பதிவின் இடது பக்கத்தில் advt இருக்கின்றது. சில மாதங்களுக்கு முன்னால் header + footer-லும் google ad இருந்தது. வெறுத்துப் போய் அவற்றை எடுத்து விட்டு சில affiliate விளம்பரங்களை கொடுக்கிறேன்.

>>>>"வாங்க ப்ராபிட் ஷேரிங் அக்ரிமென்ட் போட்டுக்குவோம் வேற வேற IP ல இருந்து நான் க்ளிக் பண்ணறேன்

:-)))))))))))))<<<<"

ஏன், நான் நல்லாயிருக்கிறது, உங்களுக்கு பிடிக்கலையா?!

>>>>>"கொலை வெறியோடு தலைப்பு வைக்கலாம் உதாரணத்துக்கு நான் ஒரு பதிவுக்கு சம்பந்தமே இல்லாமல் வைத்த தலைப்பு

"தாரா தாரா நயந்தாரா"<<<<<<

Nice!!

cheena (சீனா) said...

நானும் ஒரு வலைப்பூவில் எழுதுகிறேன். ஆரம்பிக்கும் போது மனத் திருப்திக்காகவே ஆரம்பித்தேன். பின் ஆசை யாரை விட்டது. பின்னூட்டங்களுக்காக ஏங்கினேன். இடும் பின்னூட்டங்களில் முகவரி கொடுத்து வலைப்பூவிற்கு அழைப்பு விடுத்தேன். வெற்றி பெற வில்லை.

சரி சரி வேற வழி - கும்மி அடிச்சு கலாய்க்க வேண்டியது தான்

Bharathi said...

வணக்கம். தொடர்ந்து எழுதுங்கள். வெற்றி பெற்ற பெரும்பாலான வலைப்பதிவாளர்கள் ஒரு வருடம் கழித்து தான் வெற்றிக்கனியை ருசித்திருக்கிறார்கள்.

வசந்தம் ரவி said...

நான் எனது வலைப்பூவை (http://vasanthamravi.blogspot.com) இரண்டு வாரங்கள் இருக்கும் .....எனது இரண்டு பதிவுகள் சக்கை போடு போட்டு இருக்கின்றன

விஜய் டிவி "லாவண்யா"வுக்கு வசந்தம் ரவியின் கேள்விகள்+வீடியோ

சாப்டுவேர் இஞ்சினியர்களின் ஆடம்பரம்-சமூக சீரழிவு

இந்த இரண்டு பதிவுகளுக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் வந்தன.
ஆனால் என்னை யாரென்று பெரிதாக யாருக்கும் தெரியாததால் மூத்த வலைப்பதிவர்கள் என்னை பெரிதாக ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. நீங்கள் சொல்வது போல் ஒரு வருடம் ஆகலாம். நானும் கத்துகுட்டிதானே

R.John Christy said...

Dear Bharathi,
I suggest you to try http://publisher.ads-click.com/
I think it would get you more clicks.
With regards,
R. John Christy

Bharathi said...

Hi John, I will give it a try. Thanks...

Related Posts Plugin for WordPress, Blogger...