அமெரிக்காவில் வீடு விலைகள் சரிந்த பிறகும் உங்களால் வீடு வாங்க முடியவில்லையென்றால், கொஞ்சம் வடக்குப் பக்கமாய் தேடிப் பாருங்கள். கனடா நாட்டில் உள்ள Newfoundland மாகாணத்தில் நான்கு அறைகள் கொண்ட வீடு $20,000க்கு (8 லட்ச ரூபாய்) கிடைக்கிறதாம்!
ஒரு கார் வாங்கும் விலைக்கு ஒரு வீடா?! உண்மை தான்.
செப்டம்பர் 11, 2001-ல் நடந்த தீவிரவாத தாக்குதலினால் அமெரிக்க விமான நிலையங்கள் அன்று காலை மூடப்பட்டு விட்டன. அதனால் அமெரிக்காவுக்கு வர வேண்டிய 38 விமானங்கள் Newfoundland மாகாணத்தில் உள்ள Gander என்ற விமான நிலையத்தில் இறக்கப் பட்டன. அதில் பயணம் செய்த 7000 பயணிகள் வேறெங்கும் செல்ல முடியாமல் இந்த மாகாணத்தில் ஒரு வாரம் காத்துக் கிடந்தனர். அந்த சமயத்தில் அவர்களுக்கு இந்த மாகாண மக்கள் காட்டிய பரிவும் அன்பும் இந்த மாகாணத்தின் புகழை பரப்ப உதவியது.
இந்த மக்களின் நல்ல உள்ளங்கள் மட்டுமல்லாது இயற்கையான சூழ்நிலையும் பலரை கவர்ந்திருக்கிறது. அமெரிக்கர்கள் பலர் இங்கு வீடு வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். 
இந்த மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் வீடு விலை குறைவாகத்தான் இருக்கிறது. கடலோர பகுதிகளில் உள்ள வீடுகள் $40,000க்கு (16 லட்ச ரூபாய்) கிடைக்கிறதாம்!
ஒரு பக்கம் இது பற்றிய செய்தி படிக்கும் போது மறுபக்கம் அமெரிக்க ரியல் எஸ்டேட்டால் பாதிக்கப்பட்ட சிலரை பற்றி படிக்க நேர்ந்தது. அமெரிக்க ரியல் எஸ்டேட் கீழே விழாது என்ற குருட்டு நம்பிக்கையில் பணம், மானம் இரண்டையும் இழந்த சூதாட்டக்காரரை பற்றி படித்து ஆச்சரியப்பட்டேன். இவர்கள் மாதிரி ஆட்களுக்கு கடன் கொடுத்தால் வங்கிகள் திவாலாகாமல் என்ன செய்யும்?
வங்கிகளின் குறுக்கு புத்தியாலும், வங்கிகளை கட்டுப்படுத்த தவறிய அரசாங்க விதிமுறைகளாலும் இப்போது அமெரிக்க பொருளாதாரமே லேசாக ஆட்டம் காண்கின்றது.
தன் தகுதிக்கு மீறி வீடுகளை வாங்கியவர்களை பாதுகாப்பதற்கு எங்கள் வரிப்பணத்தை வாரி இறைக்கலாமா என்று பலர் கோபத்தில் இருக்கின்றனர். அவர்களின் கண்ணோட்டத்தை இங்கு பாருங்கள். அந்த கோபத்தில் நியாயம் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. உங்களின் கருத்துகளை பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்.
Related Link: LA Land
பின் குறிப்பு: கடந்த பல "மாதங்களாக" தமிழ் சினிமா சம்பந்தப்பட்ட ஒரு வலைதளத்தின் ஸ்பாம் தொல்லை தாங்காமல், அனானிமஸ் பின்னூட்டங்களை off செய்ய வேண்டியதாகி விட்டது. மன்னிக்கவும்.
Tuesday, September 11, 2007
இருபதாயிரம் டாலருக்கு வீடுகள்!
Posted by
Bharathi
at
6:39 AM
Labels: ரியல் எஸ்டேட்
Subscribe to:
Post Comments (Atom)


3 comments:
பேசாம ஒரு வீடு வாங்கிப் போட்டுறலாம் போல இருக்கே. வருடத்துக்கு நாலு முறை, குறைந்தது கோடையில் மட்டுமாவது விடுமுறைக்குச் சென்று வந்தால் கூட போதும் போலிருக்கே. :-)
As you have enabled comment moderation, you dont need the word verification. You could remove the word verification. It is a pain in the bottom. :-)
நிச்சயமாக! கனடா பார்டரில் வசிப்பவர்களுக்கு இன்னும் வசதி.
Bot software மூலமாக ஸ்பாம் வரலாம் என்பதால் word verification வைத்திருந்தேன். நீங்கள் சொன்னதால் அதை எடுத்து விட்டேன். இனிமேல் ஸ்பாம் வந்தால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பு! :-)
Post a Comment