Derivatives என்பது ரிஸ்க்கை குறைப்பதற்காக உருவாக்கப் பட்ட நிதி சாதனங்கள். ஆப்ஷன்களும் Derivatives வகையை சேர்ந்தது தான்.
Credit derivatives என்பது கடன் கொடுத்தவர்கள் தங்கள் கடனின் ரிஸ்க்கை குறைப்பதற்காக உருவாக்கப்பட்டது. கடந்த பல வருடங்களாக உலக சந்தைகளில் மிக வேகமாக வளர்ந்து வரும் நிதி சாதனம் (financial instrument) இது.
Credit derivatives வகையில் பல சாதனங்கள் இருந்தாலும், Credit default swap என்ற derivative அதிக பாப்புலராகி விட்டது. வங்கிகள் தங்கள் கடன்களில் உள்ள ரிஸ்க்கை மற்றவர்களுக்கு விற்று விட இது உதவும்.
Credit default swap என்பது ஒரு இன்சூரன்ஸ் போல தான். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா DLF ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு 10,000 கோடி கடன் கொடுத்ததாக வைத்துக் கொள்வோம். இந்திய ரியல் எஸ்டேட் கீழே விழுந்து DLF நிறுவனத்துக்கு பெருத்த அடி ஏற்பட்டால், அந்த நிறுவனம் கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் போய் விடும்.
அந்த ரிஸ்க்கை தவிர்ப்பதற்காக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மெரில் லிஞ்ச் (Merrill Lynch) போன்ற நிறுவனத்துடன் Credit default swap செய்து கொள்ளலாம். தன் கடனை பாதுகாப்பதற்காக ஸ்டேட் பேங்க், மெரில் லிஞ்ச் நிறுவனத்திடம் இன்சூரன்ஸை வாங்கிக் கொள்கிறது.
இதில் மெரில் லிஞ்ச் நிறுவனத்திற்கு என்ன லாபம்? இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உங்களிடம் பிரீமியம் தொகையை வாங்குவது போல் மெரில் லிஞ்ச் நிறுவனமும் ஸ்டேட் பேங்கிடம் பிரீமியம் வாங்கும்.
10,000 கோடி கடனை பாதுகாப்பதற்கு மெரில் லிஞ்ச் 10 கோடி பிரீமியம் வாங்கும். (இதை பிரீமியம் என்று நடைமுறையில் குறிப்பிடுவதில்லை, சுலபமாக விளக்குவதற்காக இப்படி எழுதுகிறேன்) DLF நிறுவனம் அதிக ரிஸ்க் உள்ளதாக இருந்தால், இந்த பிரீமியம் இன்னும் உயரலாம்.
துரதிர்ஷ்டவசமாக DLF நிறுவனம் திவாலாகி விட்டால், ஸ்டேட் பேங்கிற்கு வர வேண்டிய 10,000 கோடி கடனையும் மெரில் லிஞ்ச் கொடுத்து விடும். இது போல நடப்பதற்கு probability அதிகம் கிடையாது. மெரில் லிஞ்ச் போன்ற நிறுவனங்கள், கடன் வாங்கிய DLF போன்ற நிறுவனங்களை தீர ஆராய்ந்த பிறகு தான் ஸ்டேட் பேங்க் போன்ற வங்கிகளுடன் credit default swap ஒப்பந்தம் போடுகிறார்கள்.
மெரில் லிஞ்ச் நிறுவனத்தின் கணிப்பு சரியாக இருந்து DLF நிறுவனம் நல்ல பிள்ளையாக கடனை திரும்ப கொடுத்து விட்டால், மெரில் லிஞ்ச் நிறுவனத்துக்கு 10 கோடி பிரீமியமும் லாபம்.
இது வரை பார்த்தது வெறும் கற்பனை தான். நம் நாட்டில் credit derivatives இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இன்னும் சில மாதங்களில் வரலாம்.
இந்திய வங்கிகள் கொடுத்த கடன்கள் கடந்த ஒரு வருடத்தில் 27% உயர்ந்திருக்கின்றது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் கடன்களை தாராளமாக கொடுக்கின்றன. இந்த கடன்களில் வெறும் 25 சதவிகிதம் வங்கிகளுக்கு திரும்ப கிடைக்காமல் போனாலே அது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும்.
நம் நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கு credit derivatives அவசியம் வேண்டும். மின்னல் வேகத்தில் கடன் கொடுக்கும் வங்கிகளின் ரிஸ்க்கை கட்டுப்படுத்த credit default swap உதவும்.
வளர்ந்த நாடுகளில் credit default swap சாதனத்தை பங்குகள் போல வாங்கி விற்கிறார்கள். மேலே கண்ட உதாரணத்தில் மெரில் லிஞ்ச் தன்னிடமுள்ள swap-ஐ கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்திற்கு லாபத்திற்கு விற்று விடலாம்.
அமெரிக்காவில் வீட்டு கடன்களை பல வங்கிகள் இப்படி தான் வாங்கி விற்று அதில் லாபம் சம்பாதித்தார்கள் – subprime பிரச்னையில் மாட்டிக் கொள்ளும் வரை.
Credit default swap என்பது பெரிய பிஸினஸ். 2006ம் வருட கடைசியில் உலகம் முழுவதும் இருந்த மொத்த credit default swaps-ன் மதிப்பு $34.423 டிரிலியன் டாலர்கள்!
Related Links: ISDA, வங்கிகளின் பேராசை
Wednesday, August 29, 2007
கடனை பாதுகாக்கும் நிதி சாதனங்கள் (Credit Derivatives)
Subscribe to:
Post Comments (Atom)

6 comments:
பாரதி,
அருமையான பதிவு. வளர்ந்து வரும் ஒரு புதிய நிதிச் சாதனம் பற்றி தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள். நம்மூரில்கூட வங்கிகளில் கடன் வாங்கி பட்டை நாமம் போடுகிறவர்கள் ஏராளம். நாணயம் தவறிய கடன்காரர்கள் என்கிற பெயரில் கடன் வாங்கியவர்களின் போட்டோவோடு செய்தித்தாள்களில் வெளியிட்டும் எந்தப் பயனும் இல்லை. நீங்கள் சொல்கிறபடி ஒரு முறை வந்தால் வங்கிகள் பாதுகாப்பாக இருக்கும்.
Nice post - informative too.
Here some of the credit cards attach an insurance fee as "Credit Shield".. Its adding even more burden for people like me.
சம்சாரி சார்: வணக்கம், நன்றி!
ஸ்ரீகாந்த்: நீங்கள் எந்த நாட்டில் வசிக்கிறீர்கள்? Credit shield பற்றி கேள்விப்பட்டதில்லை.
Bharathi,
Thanks for the service you are doing to the community.
Ganesh NJ
Hi Ganesh, Thanks for the kind feedback.
Bharathi,
In Singapore too... Citibank and few other having this CreditShield, its about 10% of card usage - onetime.
Post a Comment