Monday, August 20, 2007

வங்கிகளின் பேராசை

கடந்த இரண்டு வாரங்களாக அடி மேல் அடி வாங்கிய பங்கு சந்தைகளை பார்த்த அமெரிக்க மத்திய வங்கியின் தலைமை அதிகாரி பென் பெர்னாங்க் வெறுத்துப் போய் வங்கிகளுக்கு கொடுக்கும் கடன் வட்டியை (discount rate) 0.5% குறைத்து விட்டார்.

வீட்டு கடன் கொடுக்கும் நிறுவனங்களில் ஒன்றான Countrywide திவாலாக போகிறது என்று வதந்தி பரவி, கலிபோர்னியாவில் அந்த வங்கிகளின் கிளைகளில் பெரிய க்யூவில் மக்கள் நின்றார்கள் – தங்கள் பணத்தை இப்போதே எடுக்காவிட்டால், இனிமேல் எப்போதுமே கிடைக்காது என்ற பயத்தில்.

Countrywide brochure for affordable mortgages

ஆடி தள்ளுபடிக்காக தி.நகரில் தென்படும் அளவிற்கு கூட்டம் இந்த வங்கியின் கிளைகளில் அலை மோதியது.

Subprime என்பதே “வழக்கமாக வழங்கப்படும் கடனை விட ஒரு படி கீழே” என்று தான் அர்த்தம். இருந்தாலும், அமெரிக்க ரியல் எஸ்டேட் boom இன்னும் பல வருடங்களுக்கு நீடிக்கும் என்று தப்புக்கணக்கு போட்டு, Countrywide போன்ற வங்கிகள் பல பில்லியன் டாலர்களை இழந்து விட்டன.

Countrywide

அமெரிக்காவில் கிரடிட் ரேட்டிங் முறை இருப்பதால், வாடிக்கையாளர்களில் யார் prime, யார் subprime என்று ஓரளவுக்காவது தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் அப்படிப்பட்ட கிரடிட் ரேட்டிங் முறை இல்லை.

இருந்தாலும், இந்தியாவில் பல வங்கிகளும் NBFC லோன் நிறுவனங்களும் லோன்களை அள்ளிக் கொடுக்கின்றன. வீடு விலைகள் கிடுகிடுவென்று உயர்ந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் கடன்களை அள்ளி வழங்குகின்றன.

கடந்த இரண்டு மாதங்களில் சென்னையில் வீட்டு விலை 20% குறைந்திருக்கிறது. இந்திய ரியல் எஸ்டேட் இன்னும் கீழே விழுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடக்கும் போது, தாங்கள் கொடுத்த கடன்கள் திரும்ப வராமல் போனால் இந்திய வங்கிகள் எப்படி சமாளிக்கும்?

அமெரிக்காவில் subprime-ல் கடன் வாங்கிய சில வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டு சாவியை வங்கிகளிடம் கொடுத்து விட்டு ஊரை காலி செய்கிறார்கள். தாங்கள் வாங்கிய விலையை விட வீட்டின் மதிப்பு பல மடங்கு குறைந்து விட்டதால், foreclosure செய்வதை கூட வித்தியாசமாக இப்படி செய்கிறார்கள்!

உலக சந்தைகளில் இந்திய ரியல் எஸ்டேட் சந்தை மட்டும் வித்தியாசமானது என்று பலர் என்னிடம் கூறினர். அமெரிக்காவில் நடப்பது போல இங்கே நடக்காது என்று விவாதம் செய்கின்றனர். அது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை.

எல்லாவற்றையும் தீர்மானிப்பது “Law of supply and demand”. இந்தியாவாக இருந்தாலும் சரி, இலங்கையாக இருந்தாலும் சரி அல்லது அமெரிக்காவாக இருந்தாலும் சரி. அதனால் இந்தியாவில் மட்டும் ரியல் எஸ்டேட் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் மற்ற நாடுகளை விட மாறுபட்டு இருக்கும் என்ற விவாதத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பல ஆயிரம் கோடிகளை கடனாக கொடுத்த வங்கிகளுக்கு, சில ஆயிரம் கோடிகள் திரும்ப வராமல் போனாலே அது மிக பெரிய பிரச்னை.

இந்தியாவில் உள்ள வங்கிகள் அனைத்துமே கடன்களை கொடுப்பதில் தாராள மனதுடன் இருக்கின்றன. பெரும்பாலான வங்கிகளில் திறமை பெற்ற கிரடிட் அனலிஸ்ட்டுகள் உள்ளனர். அவர்கள் கொடுக்கும் எச்சரிக்கையையும் மீறி, பல வங்கிகள் 90% லோன் கொடுக்கின்றன. கேட்பவர்களுக்கெல்லாம் கிரடிட் கார்டுகளை கொடுக்கின்றனர்.

ரியல் எஸ்டேட் மார்க்கெட் சரிந்து தன் கடன் தொகையை விட வீட்டின் மதிப்பு குறைந்து விட்டால், பலர் கடனை அடைக்கப் போவதில்லை. அப்போது இந்திய வங்கிகள் பலவற்றுக்கு Countrywide வங்கியின் தற்போதைய நிலைமை வரலாம்.

வளர்ந்த நாடுகளில் இருப்பது போல “Credit derivatives” முறை நம் நாட்டில் இல்லை. விரைவில் இந்த முறையை அமுல்படுத்த போவதாக இரண்டு மாதங்களுக்கு முன்னால் RBI வங்கி ஒரு draft-ஐ வெளியிட்டது. இதே போல ஒரு draft மூன்று வருடங்களுக்கு முன்னாலும் வெளியிடப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.

Credit derivatives பற்றி விரிவாக அடுத்த பதிவில் பார்க்கலாம். சுருக்கமாக சொல்லப் போனால், கடன் நஷ்டத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வங்கிகளுக்கு இது உதவும். தற்போதைய இந்திய சூழ்நிலைக்கு இது மிக அவசியம். நாம் பங்குகள் வாங்கினால் அதை “Put” ஆப்ஷன்கள் மூலம் பாதுகாப்பது போல வங்கிகளுக்கு credit derivatives ஹெட்ஜாக இருக்கும்.

நீங்கள் இந்திய வங்கிகளின் பங்குகளில் முதலீடு செய்திருந்தால், இந்திய ரியல் எஸ்டேட் மார்க்கெட்டின் மேல் ஒரு கண் வைத்திருங்கள். வங்கிகளின் பங்குகள் சரிவதற்கு முன் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

6 comments:

மாசிலா said...

ஆவிகள் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கும் இந்தியர்கள் இதன் மீதும் ஒரு அலாதியான நம்பிக்கை வைத்திருப்பது பெரிய வேடிக்கைதான். உலகமே ஒரு சிறு கிராமம் என்கிற அளவில் போய்விட்டிருக்கிறபோது, நேற்று அமெரிக்காவிற்கு வந்த விணை இன்றோ நாளையோ இந்தியாவிற்கு கட்டாயம் வந்தே தீரும்.

இதிலும் மூட நம்பிக்கையா!

நல்ல பதிவு. நல்ல விளக்கம். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

kavi said...

நல்லதொரு விவரமான கட்டுரை. இந்தியாவிலும் இந்த நிலை விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கலாம்.

நன்றி.

மஞ்சூர் ராசா said...

நல்லதொரு விவரமான பதிவு. இந்தியாவிலும் இந்நிலை விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கலாம்.

நன்றி.

அரை பிளேடு said...

நல்ல பதிவு

நன்றி.

N Senthil Kumar said...

நீங்கள் அருமையாக எழுதியருக்கிறீர்கள். இந்தியாவிலும் CIBIL என்ற அமைப்பு கடன் பாக்கி வைத்திருப்பவர்களின் பட்டியல் வெளியிடுகிறது. அனைத்து இந்திய வங்கிகளும் அதன் அங்கத்தினர்கள். இது புது கடன்களை கொடுக்கும் போது உதவுகிறது. இந்திய போன்ற வளர்ச்சி பெரும் நாடுகளில் ரேட்டிங் முறையை அமல் படுத்துவதில் சில சிக்கல்களும் உள்ளது. இன்னும் பல மக்கள் அமைப்புசார கடன் வசதிகளையே பயன்படுத்தி வருகிறார்கள். அவர்கள் பின்னாளில் அமைப்பு சார்ந்த கடன் வசதிக்கு அணுகும்போது பெரிதும் பாதிககப்படுவார்கள்.

Bharathi said...

மாசிலா, கவி, ராசா, அரை பிளேடு, செந்தில் குமார்: உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.

Related Posts Plugin for WordPress, Blogger...