Sunday, August 12, 2007

பாடாய் படுத்தும் பங்கு சந்தைகள்

கடந்த இரண்டு வாரங்களில் பெரும்பாலான உலக சந்தைகள் சாமியாட்டம் ஆடி விட்டன. எங்கு திரும்பினாலும் களேபரம் ஆகி விட்டது.

Wall Street

அமெரிக்க சந்தை 400 புள்ளிகள் சரிகிறது. இந்திய சந்தை 500 புள்ளிகள் விழுகிறது. நிலைமை உண்மையிலேயே அவ்வளவு மோசமா?

இல்லை.

Subprime lending பிரச்னை பல மாதங்களாக இருந்து வருகிறது. ஒரு சில வங்கிகள் மட்டும் இந்த வம்பில் மாட்டியதாக முதலீட்டாளர்கள் நினைத்திருந்தனர். இப்போது ஆளாளுக்கு confession செய்து கொண்டிருக்கிறார்கள். பிரான்ஸ் நாட்டு வங்கிக்கும் அமெரிக்க subprime கடனுக்கும் என்ன சம்பந்தம்?! எல்லாம் ஆசை தான்.

கோல்ட்மென் போன்ற சூப்பர் ஸ்டார் வங்கிகளும் சப்-பிரைம் வம்பில் மாட்டிக் கொண்டதாக சில நாட்கள் முன்னால் வதந்தி வந்தது.

Bear Sterns, Goldman போன்ற பிரபல வங்கிகளின் ஹெட்ஜ் நிதிகள் (Hedge Funds) சப்-பிரைம் பிரச்னையால் பெரும் நஷ்டம் அடைந்துள்ளன. இவர்கள் நஷ்டத்தால் பங்கு சந்தைகள் மூழ்கப் போவதில்லை.

இருந்தாலும், முதலீட்டாளர்கள் “fear of unknown” உபாதையால் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடுகிறார்கள்.

பங்குகளும் பரஸ்பர நிதிகளும் வாங்குவதற்கு இது சரியான சந்தர்ப்பம். பங்கு சந்தை இன்னும் சரிந்தால் நன்றாக இருக்கும், நல்ல விலைக்கு பங்குகளை வாங்கலாம்.

போன வாரம் பங்கு சந்தைகள் சரியும் போது FAIRX நிதியை 401K கணக்கில் வாங்கினேன். Short-term ட்ரேடிங் செய்பவர்கள் சில வாரங்கள் பங்கு சந்தைக்கு உள்ளே வராமல் இருப்பது நல்லது. நான் இப்போது வாங்கும் பங்குகள்/நிதிகள் அனைத்தும் அடுத்த சில வருடங்களாவது என் கணக்கில் இருக்கும்.

கடந்த இரண்டு வாரங்களில் சில புத்திசாலித்தனமான Quant-fund நிறுவனங்களும் நஷ்டமடைந்துள்ளன. இந்த வகை நிதிகள் ஒரு விதமான கணித முறையை பின்பற்றி நடத்தப் படுகிறது. பங்குகளை வாங்குவது/விற்பது அனைத்தும் கம்ப்யூட்டர் புரோகிராமினால் நிச்சயிக்கப் படுகிறது. மனிதர்களின் வேலை கம்ப்யூட்டருக்கு அல்காரிதம் கொடுக்க வேண்டியது தான்.

அனைத்து குவான்ட் நிதிகளும் (quant funds) நாளொன்றுக்கு பல மில்லியன் டாலர்களை சந்தையில் ட்ரேடு செய்கின்றன. ட்ரேடுகள் அனைத்தும் கம்ப்யூட்டர்கள் மூலம் செய்யப் படுகின்றன. இந்த கம்ப்யூட்டர் புரோகிராமின் அல்காரிதத்தை வடிவு செய்ய Ph.D. முடித்த பல கணித வல்லுனர்கள் இருக்கின்றனர்.

ஸ்டான்போர்டு போன்ற புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்தவர்களுக்கு கூட இந்த quant நிதி நிறுவனங்களில் வேலை கிடைப்பது கஷ்டம்.

சிறந்த கணித மேதைகள் இருந்தும் கூட பெரும்பாலான குவான்ட் நிதிகள் கடந்த இரண்டு வாரங்களில் நஷ்டமடைந்து விட்டன.

“10,000 வருடத்துக்கு ஒரு முறை தான் இப்படி நடக்க சாத்தியம் (probability) என்று எங்கள் குவான்ட் மாடல் சொல்கிறது. ஆனாலும் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு எங்கள் மாடலால் கணிக்க முடியாத அளவுக்கு சந்தை எங்களுக்கு தண்ணீர் காட்டி விட்டது” என்று சொல்கிறார் ஒரு குவான்ட் நிதியின் உயர் அதிகாரி.

பங்கு சந்தை கீழே விழுவதும் மேலே உயர்வதும் சகஜம். நல்ல நிறுவனங்களின் பங்குகளையும், பரஸ்பர நிதிகளையும் வாங்குவதற்கு இது தான் நல்ல நேரம்.

3 comments:

பொருள் said...

/* FAIRX நிதியை 401K கணக்கில் வாங்கினேன்.*/
புதியவர்கள் (beginners) முதலீடு செய்வதற்க்கு ஏற்ற நிதிகள் பற்றி இன்னும் கொஞ்சம் கோடி காட்டுங்களேன். மிகவும் பயனடைவோம். நன்றி.

Bharathi said...

நான் குறிப்பிடும் அனைத்து பரஸ்பர நிதிகளுமே புதியவர்களுக்கு ஏற்றது.

இந்த பதிவின் கடைசியில் உள்ள "Label: பங்கு சந்தை" என்ற லிங்கை கிளிக்குங்கள். இது வரை நான் குறிப்பிட்ட அனைத்து பரஸ்பர நிதிகளின் விபரங்களும் உங்களுக்கு கிடைக்கும்.

நான் குறிப்பிடும் அனைத்து பரஸ்பர நிதிகளின் ஆரம்ப முதலீடு -- ஆயிரம் டாலரிலிருந்து $2,500 வரை. இதனால் பங்கு சந்தைக்கு புதியவர்களும் தைரியமாக முதலீடு செய்யலாம்.

crsathish said...

Nalla Suggestion Sir

Related Posts Plugin for WordPress, Blogger...