Monday, July 23, 2007

குப்பையிலிருந்து ஒரு கோடீஸ்வரன்

கத்ரீனா புயலால் பாதிக்கப்பட்டவர்களில் ஜெரோம் பாய்கின்னும் ஒருவர். புயலால் தன் வீடு சேதமடைந்ததால் தன் பெற்றோர்களுடன் லூசியானாவில் தங்கியிருந்தார்.

ஒரு நாள் இரவு 12 மணிக்கு ஜெரோமின் அப்பா அவரை ஒரு ஷாப்பிங் மால் பார்க்கிங் லாட்டுக்கு கூட்டிச் சென்றார். அந்த இடத்தை சுத்தம் செய்யும் பெரிய டிரக்கை காண்பித்து “இந்த பிஸினஸ் பற்றி என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டிருக்கிறார்.

“சான்ஸே இல்லை!” என்று ஜெரோம் ஓடி விட்டாலும், அவர் அப்பா தொடர்ந்து இது பற்றி பேசியிருக்கிறார். வால் மார்ட் போன்ற ஒரு பெரிய கடையை சுத்தம் செய்தால் மாதத்துக்கு $3800 கிடைக்கும் என்று நம்பரை காண்பித்தவுடன் ஜெரோமின் தலையில் ஒரு பிரகாசமான லைட் பல்ப்!



ஒரு வால் மார்ட் கடையில் ஆரம்பித்து இன்று ஒன்பது வால் மார்ட் கடைகளின் காண்ட்ராக்ட் இவர் கையில். அவை தவிர ஹோம் டிப்போ, டார்கெட் போன்ற கடைகளின் காண்ட்ராக்டுகளும் இவர் கையில்.

இப்போது சராசரியாக மாதம் $45,000 சம்பாதிக்கிறார்!

ஜெரோம் பற்றிய முழு விபரங்களை இங்கு படியுங்கள்.

2 comments:

மாசிலா said...

படிக்கும் அனைவரையும் ஊக்குவிக்கும் உசுப்பி எழுப்பும் அருமையான பதிவு.

ஆம்!
மனது வைத்தால் மார்க்கம் உண்டு.

Bharathi said...

நன்றி மாசிலா!

Related Posts Plugin for WordPress, Blogger...