பல வருடங்களாக அறிமுகவானவர்களே கடனை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி விடுகிறார்கள். முன் பின் தெரியாத ஆசாமிகளுக்கு கடன் கொடுத்து அதை வட்டியுடன் திரும்பி வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையுடன் சில இணைய தளங்கள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றன.
Prosper.com தளத்தில் கடன் கொடுத்தால், 8%லிருந்து 12% வரை வட்டி கிடைக்கும் என்று அந்த தளத்தை நடத்துவர்கள் கூறுகிறார்கள். போட்ட முதலே திரும்பி வராவிட்டால்? That’s your risk!
Prosper தளத்தின் மூலமாக மட்டுமே இது வரை 60 மில்லியன் டாலர்கள் கடன் கொடுக்கப்பட்டிருக்கிறது. எத்தனை மில்லியன் டாலர்கள் கடன் திரும்பி செலுத்தப்பட்டிருக்கிறது என்ற விபரங்கள் தெரியவில்லை.
2010 வருடத்தில் ஆன்லைன் கடன் மார்க்கெட் ஒரு பில்லியன் டாலரை எட்டும் என்று ஆன்லைன் பேங்கிங் ரிப்போர்ட் சொல்கிறது.
Prosper போன்ற மற்ற இணைய தளங்கள்:
Lending Club
Zopa
இதே போன்ற இணைய தளங்களை இந்தியாவில் ஆரம்பிக்கலாமா?! அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒருவரின் கிரடிட் ரிப்போர்ட்டை பார்த்து அவர் வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பாரா என்று “ஒரளவு” தெரிந்து கொள்ளலாம். அதிலேயே பலர் ஃபிராடு செய்து பல வங்கிகளையே ஆட்டி வைக்கிறார்கள்.
இந்தியாவில் இது போன்ற தளங்களை ஆரம்பித்தால், போட்ட முதல் திரும்ப வந்தாலே அதிசயம்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Sunday, July 22, 2007
இன்ட்ர்நெட்டில் கடன்
Subscribe to:
Post Comments (Atom)


4 comments:
தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் / குறிப்பிட்ட செக்டார்களில் இருப்பவர்களுக்கு தரலாம்...ஈ.சி.எஸ் முறையில் வங்கியில் இருந்து நேரடியாக எடுத்துக்கொள்ளும்படி செய்யலாம்...
முழுமையாக விவரங்களை சரிபார்த்தபிறகு தரலாம்...
நல்ல ஐடியா...ஆனாலும், எவ்வளவு அதிக சம்பளம் வாங்கினாலும், வாங்கிய கடனை கொடுப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டால் அவர்களிடம் எப்படி வசூலிப்பது?! மாதம் 50,000 சம்பளம் வாங்கும் ஒரு நபர் மொத்தமாக எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறார் என்பதை நம் நாட்டில் தெரிந்து கொள்ள முடியாது.
மாதம் 50,000 சம்பளம் வாங்கினாலும், அவருக்கு மாத செலவு 70,000 இருந்தால், அவருக்கு கடன் கொடுப்பது ரிஸ்க்.
நம் நாட்டில் கிரடிட் ரிப்போர்ட்டிங் வசதி வந்தால் தான் ஏமாற்றுபவர்களை ஓரளவு சமாளிக்க முடியும்.
நல்ல பதிவு
மேலும் நானும் உங்களிடம் பலமுறை கேட்டு விட்டேன் பதில்
சொல்லவில்லை நீங்கள்.
மறுபடியும் கேட்கிறேன்!
தென்னிந்திய மொழி திரைப்படங்களில் முதலீடு செய்ய
ஆர்வலர்கள் உள்ளனரா?
அல்லது வங்கிகள் கடன் தருகின்றனவா?
கொஞ்சம் விளக்கவும்.
நன்றி!
தமிழ்ராஜா.
Hi Tamilraja, please see http://tamilnithi.blogspot.com/2008/09/blog-post_30.html. I answered your question there.
Banks will not give loans for making movies unless you have enough collateral.
Your only option to approach the VCs in India that specialize in media business. You can try asking the question in vccircle.com; try this link http://www.vccircle.com/askexpert/askquestion
Just make sure that you don't give full script to VCs. Many people will gladly steal your ideas.
Post a Comment