Saturday, July 07, 2007

கறுப்பு பணத்தை அழிக்கும் “சிவாஜி”

சிவாஜி படத்தின் அமோக வசூலை பற்றி உலகெங்கும் பேச்சு. “அமெரிக்காவில் சிவாஜி படத்தால் டிராபிக் ஜாம் ஆச்சாமே?” என்று போன் போட்டு கேட்கிறார்கள். இலங்கையில் ஒரு நாளைக்கு 8 காட்சிகள் காட்டினார்கள் என்று தகவல், 24 மணி நேரத்தில் 8 காட்சிகள் எப்படி காட்ட முடியும்?! காலை நான்கு மணிக்கு கூட ஒரு ஷோ போட்டிருப்பார்கள் போலிருக்கிறது.

நான் இன்னும் இந்த படத்தை பார்க்கவில்லை. ஆனாலும் படத்தின் கதை பற்றி கேள்விப்பட்டேன். கறுப்பு பணத்தை கதாநாயகன் அழிக்கிறார்.

ஆங்கிலத்தில் irony என்று சொல்வார்கள். தமிழில் வேடிக்கை என்று சொல்லலாமா? கறுப்பு பணத்தை அழிப்பதாக கதை உள்ள படத்தால் தமிழ்நாட்டில் கறுப்பு பணம் அதிகமாகி விட்டதாக ஒரு தகவல்.

சினிமா துறையில் உள்ள ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொன்ன தகவல்களை கீழே கொடுத்துள்ளேன். “நீ நேரே இருந்து பார்த்தாயா?” என்று விவகாரமான கேள்வியெல்லாம் கேட்க கூடாது!

சிவாஜி படம் எடுத்த ஏ.வி.எம். நிறுவனம் படத்துக்காக கடன் வாங்கிய தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் பணமாக வாங்கப்பட்டது. அந்த பணம் கறுப்பு பணம். (மீதம் கடன் செக் மூலம் வழங்கப்பட்டது)

படம் வெளியான முதல் வாரத்தில் தியேட்டர் உரிமையாளர்களே டிக்கெட்டுகளை அமோக விலைக்கு பிளாக்கில் விற்றார்கள். ஒரு டிக்கட் 1500 ரூபாய்க்கு கூட விற்றது. ஹிந்து பத்திரிகையிலும் இது பற்றி செய்தி வந்தது. இப்படி கிடைத்த வருமானம் அனைத்தும் கறுப்பு.

படம் வெளியான இரண்டாவது வாரத்திலேயே தியேட்டர் அதிபர்களுக்கு போட்ட முதல் திரும்ப கிடைத்து விட்டது. கறுப்பில் கிடைத்த பணத்தை கேஷாகவே படத்தயாரிப்பாளருக்கு கொடுத்து விடுகிறார்கள். தயாரிப்பாளரும் தான் கேஷாக வாங்கிய கடனுக்கு இந்த கறுப்பு பணத்தை வட்டியுடன் கொடுத்து விடுகிறார்.

படத்தின் வசூல் அதிகமாக அதிகமாக அதில் கறுப்பு பணத்தின் பங்கும், தொகையும் அதிகமாகி கொண்டே இருக்கிறது.

சினிமாவில் லாஜிக் பார்க்கக்கூடாது. Just enjoy it. சினிமாவுக்கு வெளியேயும் லாஜிக் பார்க்கக்கூடாது போலிருக்கிறது!

17 comments:

Anonymous said...

உங்க வலைப்பக்கத்திற்கு இதுதான் என் முதல் விசிட்...

சிவபாலன் said...

I agree with your view!

ஜீவி said...

திரையரங்குகளில் மக்களுக்கு கொடுக்கும் டிக்கட்டுகளில் commercial tax office முத்திரை இருக்கும்.
அதன் மூலம் எத்தனை டிக்கட் விற்றார்கள் என்ற கணக்கு தெரிந்து விடும். அந்த விற்பனைக்கு வருமான வரி கணக்கும் காட்ட வேண்டும். அந்த முத்திரை இல்லாத சீட்டுகளை மக்களுக்கு அளித்தால் சட்டப்படி commercial tax office திரை அரங்குகளின் மேல் நடவடிக்கை எடுக்கலாம்.
நீங்கள் சொல்லுவதுபடி பார்த்தால் அத்தனை அரசாங்க இலாகா ஒத்துழைப்புடன் தான் தவறு நடந்ததாக ஆகிறது.
இது சாத்தியமா என்று தெரியவில்லை. சாத்தியமில்லா பட்சத்தில் டிக்கட் விற்பனை பணத்திற்கும், சிவாஜி கறுப்பு பணக் குவியலுக்கும் சம்பந்தம் இல்லை.

Bharathi said...

ஜான்: வணக்கம். அடிக்கடி விசிட் செய்யுங்கள்!

சிவபாலன்: நன்றி!

ஜீவி: இதன் விபரங்கள் எனக்கு தெரியவில்லை. நம் ஊரில் நடக்கும் அத்தனை தில்லுமுல்லுகளும் அரசாங்க அதிகாரிகளின் உதவியாலும் ஆலோசனையாலும் தான் நடக்கிறது. I don't see any exceptions in this issue.

மாயன் said...

அரசாங்கத்தின் அனுமதி பெற்ற டிக்கெட்டுகளை அரசாங்கத்தின் முத்திரை உள்ள 40 ரூபாய் டிக்கட்டை.. 1500 ரூபாய்க்கு விற்றாலும்.. 2000 ரூபாய்க்கு விற்றாலும்.. அரசாங்கத்துக்கு 40 ரூபாய்க்கான வரி தான் கிடைக்கும்... மிச்சம் எல்லாம் கறுப்பு தான்..அரசாங்கமே நினைத்தாலும் இதை ஓரளவுக்கு தான் கட்டுப்படுத்த முடியும்..

தனி மனித ஒழுக்கத்தின் மூலம் மட்டுமே சாத்தியப்பட கூடியவை இவ்வகை விதிமுறை மீறல்களை ஒழிக்க முடியும்... 2000 ரூபாய் டிக்கட்டை வாங்க ஆளில்லை என்றால் விற்க முடியாது அல்லவா?

புகழேந்தி said...

//திரையரங்குகளில் மக்களுக்கு கொடுக்கும் டிக்கட்டுகளில் commercial tax office முத்திரை இருக்கும்.
அதன் மூலம் எத்தனை டிக்கட் விற்றார்கள் என்ற கணக்கு தெரிந்து விடும். அந்த விற்பனைக்கு வருமான வரி கணக்கும் காட்ட வேண்டும். அந்த முத்திரை இல்லாத சீட்டுகளை மக்களுக்கு அளித்தால்........//

அதெல்லாம் சரிதான்,
விற்பனை கணக்கு காட்டத்தான் செய்கிறார்கள். 100ரூபாய்க்கு டிக்கெட் விற்றுவிட்டு 08ரூபாய்க்கு விற்றதாக..

Bharathi said...

மாயன்: (உங்க கமெண்ட்) சும்மா அதிருதில்லை!

சரியாக சொன்னீர்கள். வாங்குபவர்கள் இருப்பதால் தான் விற்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது.

சம்சாரி said...

கறுப்புப் பணத்தை ஒழிக்கிறேன் பேர்வழி என்றெல்லாம் கதை பண்ணி கடைசியில் அவர்களும் அதே கறுப்புப் பணத்தைத்தான் உருவாக்குகிறார்கள். மொட்டை சிவாஜி அவர் தாத்தா வந்தால்கூட கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியாது. அந்த அளவுக்கு அது ஊடுருவி இருக்கிறது. ஒரே இடத்தில் பணம் சேருவது, ஒரே நபரே அனைத்து பெயரையும் தட்டிக் கொண்டு போவது மாதிரியான விஷயங்கள் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. அந்த ஒரு காரணத்திற்காகவே அந்தப் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. நிச்சயமாக பார்க்கப் போவதும் இல்லை.

Anonymous said...

i cant beleive that behind sivaji this much things happened. anyway in tn blockmoney increased.

Bharathi said...

சம்சாரி: வணக்கம் சார்! ரொம்ப நாளாச்சு. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Anonymous: If you remove black money from India, our country will be really a super power. We can only dream...

வவ்வால் said...

சினிமா புள்ளிகளிடம் கருப்பு பணம் இருக்கிறது என்பது 100 சதவீதம் உண்மை, ஆனால் சினிமா உலகில் வட்டிக்கு பணம் வாங்காமல் சொந்த பணத்தி தயாரிக்கும் பட நிறுவனங்கள் விரல் விட்டு எண்ணும் அளவே உள்ளன அதில் ஒன்று தான் ஏ.வி.எம் அவர்களும் வட்டிக்கு கருப்பு பணம் வாங்கினார்கள் என்றும் யாரோ சொன்னதாகவும் சொல்லியுள்ளது தான் நம்ப தகுந்தது இல்லை.(உங்களை போலத்தான் நானும் அருகில் இருந்து பார்க்கவில்லை)

பிளாக் டிக்கெட் காசு எல்லாம் தயாரிப்பளருக்கு போகாது ... சில்லரையாக இடைப்பட்ட மனிதர்கள் ,லஞ்சமாக காவல்துறைக்கும் போய்விடும்!

மற்ற எந்த படத்தயாரிப்பாளரை விட சிவாஜி படத்தYஆரிப்பாளர்கள் தான் அதிக வரி கட்ட வேண்டி இருக்கும் ஏன் எனில் அதன் தயரிப்பு செலவு, விற்பனை , வசூல் என அனைத்தையும் மீடியா வெளியிட்டு விட்டது.

கருப்பு பணம் பத்தி சினிமாக்காரர்கள் பேசக்கூடாது எனில் , கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நாயகன் கம்யூனிசம் பேசுவதும் irony தான்

shiva said...

Ungal seithiya kettathum ingeyum manasu athirugirathu.........

Bharathi said...

வவ்வால்: நீங்கள் கேட்ட இதே கேள்வியை நானும் கேட்டேன். "ஏ.வி.எம் கடன் வாங்கியதா?!"

ஏ.வி.எம். பெரிய பணக்காரர்களாக இருக்கலாம். ஆனாலும் 80 கோடி ரூபாய் பணத்தை கேஷாக புரட்டுவது அவர்களுக்கும் கஷ்டம். சொத்துகளாக பல நூறு கோடிகள் இருக்கலாம். சொத்தை விற்று படம் எடுப்பதை விட குறுகிய கால கடன் வாங்குவது தான் அவர்களின் வியாபாரத்துக்கு சரி.

G.E. போன்ற பில்லியன் டாலர் நிறுவனங்களே கார்ப்பரேட் பாண்டு கொடுத்து கடன் வாங்கி தான் புது தொழிற்சாலைகளை கட்டுகின்றன. ஏ.வி.எம் கடன் வாங்குவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.

Bharathi said...

Shiva: ;-) Please keep visiting this blog.

T.V.Radhakrishnan said...

Sivaji Hero mudhalil Avar Manaivi Nadaththum Palliyil Manavargalai Ilavasamaga Serththukkollattum piragu Engineering College kattuvadhu parri yosikkalam

T.V.Radhakrishnanz

ஜீன் said...

//Sivaji Hero mudhalil Avar Manaivi Nadaththum Palliyil Manavargalai Ilavasamaga Serththukkollattum piragu Engineering College kattuvadhu parri yosikkalam //

Itha kettu Rajini family-e athiruthulla...!!!!!!!!!

K.R.அதியமான். 13230870032840655763 said...

கருப்பு பணத்தின் லீலைகள்

வருமான வரி, விற்பனை வரி மற்றும் இதர வரிகளின் சுமை மிக அதிகம். அதனால் மிகப் பெரும்பான்மையோர் வரி ஏய்ப்பு செய்கின்றனர். வரி வலையிருந்து தப்பும் பணம் கருப்பு பணமாகிறது. வரி ஏய்ப்புக்கு துணை போகும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் லஞ்சமாகப் பெறும் பணமும் இக்கருப்பு பொருளாதாரதில் சேர்கிறது.

கருப்பு பணத்தை பாதுகாக்க குறுக்கு வழிகள் உள்ளன. பிணாமி நபர்களிடம் கொடுத்தல், ரியல் எஸ்டெட், பஸ் ரூட், மற்றும் பல இடங்களில் பதுக்குவார்கள்.

காஞ்சி மடம் சீரழிந்தது கருப்பு பண நன்கொடைகளால்தான். அவ்வகையில் வரும் பணம் கணக்கில் வராததால், நிர்வாகிகளால் இஷ்டம் போல் செலவு செய்ய முடிந்தது. விளைவுகளை நாடறியும்..

தொழில் கூட்டாளிகளை, நிர்வாகதில் இருக்கும் கூட்டாளி ஏமாற்றுதல் ; காசாளர் மற்றும் நிர்வாகிகள் கடை பணத்தை திருடுதல் போன்றவை பெருக முக்கிய காரணம், பெரும்பாலும் வியாபரம் கருப்பில் நடப்பதால்.. மொத்ததில் நேர்மை குறைந்து திருட்டுதனம் நாடு முழுவதும் பரவி விட்டது.

கல்வி நிறுவனங்கள், அரசியல், சினிமா, ரியல் எஸ்டெட், பஸ் ரூட், நகை வியாபாரம், கந்து வட்டி, விபச்சாரம் போன்றவைகளில் கருப்பு பணம் விளையாடுகிறது. யாரும் கவலை படுவதுமில்லை, பயப்படுவதுமிலை.

வரி ஏய்ப்பு செய்யும் மக்கள், கொஞ்ச் கொஞ்சமாக அனைத்து சட்டங்களையும் மீற முற்படுகின்றனர். அதனால், அனைத்து துறைகளிலும் நேர்மை வெகுவாக குறைகின்றது. அனைத்து வகை வரிகளின் விகித்தை வெகுவாக குறைத்தால் மட்டுமெ நிலமையை சீராக்க முடியும். அதற்கு அரசின் வெட்டி செலவுகளை கடுமையாக குறைக்க வேண்டும். நடக்கற காரியமா ? சொல்லுங்கள் ?

http://nellikkani.blogspot.com/

Related Posts Plugin for WordPress, Blogger...