Monday, June 04, 2007

அமெரிக்கர்களின் சேமிப்பு - Follow up

என் பக்கம் வீசிய தென்றலின் பின்னூட்டத்திற்காக இந்த பதிவு.

சேமிப்பதற்கு நிறைய வழிகள் உள்ளன. சுய கட்டுப்பாடு இருந்தால் குறைவாக சம்பளம் வாங்கினாலும் சேமிக்கலாம். இந்த பிளாக்கில் “சேமிப்பு” என்ற லேபிளில் பல பதிவுகள் உள்ளன. அவை உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

நீங்கள் அமெரிக்காவில் வசிப்பவராக இருந்தால், DSP (Direct stock purchase) மற்றும் DRP (Dividend reinvestment plans) திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் சேமிக்கலாம். இந்த திட்டங்களின் கீழ் டார்கெட், காஸ்ட்கோ போன்ற நிறுவனங்களின் பங்குகளை அவர்களிடமிருந்தே நேரடியாக வாங்கலாம். உதாரணமாக, நீங்கள் டார்கெட் நிறுவனத்தின் பங்குகளை வாங்க விரும்பினால், இந்த இணைப்பில் நேரடியாக வாங்கலாம்.

பல நிறுவனங்கள் தங்கள் வலைத்தளத்தில் “Investors” என்ற பிரிவில் DSP பற்றிய விபரங்களை கொடுத்திருப்பார்கள். நேரடியாக பங்குகளை வாங்குவதற்கு பெரும்பாலான நிறுவனங்கள் எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. புரோக்கர்களிடம் கொடுக்க வேண்டிய கமிஷன் மிச்சமாகும். ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கியிலிருந்து நேரடியாக DSP-ல் முதலீடு செய்யவும் வசதி உள்ளது.

மெலான் முதலீட்டாளர் நிறுவனத்தின் மூலமாகவும் நிறுவனங்களின் பங்குகளை நேரடியாக வாங்கலாம். எந்த நிறுவனங்களில் DSP வசதி உள்ளது என்பதை இந்த இணைப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

DSP திட்டத்தை போல DRP என்ற திட்டமும் உள்ளது. DRP முதலீட்டில் கிடைக்கும் டிவிடென்ட்டுகள் திரும்பவும் பங்குகளில் முதலீடு செய்யப்படும். டிவிடென்ட் தொகை ஆரம்பத்தில் சிறியதாக தோன்றினாலும், 20 வருடங்கள் கழித்து பார்க்கும் போது பெரிய தொகையாக வளர்ந்திருக்கும்.

Sharebuilder, buyandhold போன்ற தளங்களில் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட சேமிப்பை முதலீடு செய்யலாம். உங்கள் சேமிப்பு 500 டாலரை எட்டும்போது நல்ல பங்குகள் சிலவற்றை குறைந்த கமிஷனில் வாங்கலாம். உங்கள் சேமிப்பை வைத்து ட்ரேட் செய்யாமல், நல்ல பங்குகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். விற்பதை பற்றி 10 வருடங்கள் கழித்து யோசிக்கலாம்.

Sharebuilder போன்ற தளங்களில் ETF போன்ற பங்குகளையும் வாங்கலாம். ETF என்பது “கிட்டத்தட்ட” பரஸ்பர நிதியை போன்றது, ஆனால் அதிக செலவில்லாதது. ETF பற்றி விளக்குவதற்கு ஒரு தனி பதிவு போட வேண்டும்.

உங்கள் பரஸ்பர நிதிகள் அனுமதித்தால், மாதா மாதம் உங்கள் வங்கி கணக்கிலிருந்து $100லிருந்து $500 வரை முதலீடு செய்யுங்கள். $500 முதலீட்டை ஐந்தாக பிரித்து ஐந்து நிதிகளில் முதலீடு செய்வது நல்லது. பணம் உங்கள் கைக்கு வராமல் முதலீடாக மாறுவது உங்களுக்கும் உங்கள் போர்ட்போலியோவுக்கும் சுய கட்டுப்பாட்டை கொடுக்கும். ஒளிமயமான எதிர்காலத்தையும் கொடுக்கும்.

8 comments:

தென்றல் said...

பாரதி!

/இந்த பிளாக்கில் “சேமிப்பு” என்ற லேபிளில் பல பதிவுகள் உள்ளன./

நிதானமாக படிக்க வேண்டியவைகள்!


உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

Venkat said...

Thanks Bharthi,
This website is useful for me and I am getting more information from your blogs. We came to US only couple of months back. Right from the begining we are reading your blogs.
We are interested in investing in US in various safe options. We don't have Stock Investment experiance in INDIA. So we want to learn more from you on investing here in US. Please do continue writing on STOCK INVESTMENT related blogs.
My wife says, we are very lucky to have a BLOG FRIEND like you!!
Thanks & Regards,
Venkat.

Anonymous said...

Hi

I read your blogs with interest(!) just to keep me updated on investmetn scene. Your blogs are quite informative.

I live in Middle East. Is it possible for Indians living in ME to invest in American Stocks / mutual funds? What are legal implications / requirements? Could you please write a seperate blog on this. Many thanks in advance!

Senthil

Bharathi said...

தென்றல், வெங்கட் & family, செந்தில்: உங்கள் அனைவருக்கும் நன்றி. அடிக்கடி விசிட் செய்யுங்கள்!

செந்தில்: அரபு நாட்டிலிருந்து பலர் அமெரிக்க பங்கு சந்தையில் முதலீடு செய்கிறார்கள். அரபு நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இங்கு முதலீடு செய்ய தடை ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. இதை பற்றி விசாரித்து பிறகு எழுதுகிறேன்.

மங்களூர் சிவா said...

ஆஹா ஒரு அருமையான பதிவை இவ்ளோ நாள் miss பண்ணிட்டேன்.

மெதுவாக உங்கள் பழைய பதிவுகளை படிக்கிறேன்.

முகமூடி said...

ப்ரோக்கரேஜ் கமிஷனுக்காக மட்டுமே DSPயை தேர்ந்தெடுப்பதாக இருந்தால் இனி அந்த கவலை வேண்டாம். www.zecco.com ப்ரோக்கரேஜ் தளத்தில் இலவசமாக (நாளைக்கு 10, மாதம் 40 லிமிட்) வர்த்தகம் செய்யலாம். இதனால் DSP அசௌகரியங்கள் தவிர்க்கலாம்.

Bharathi said...

சிவா: நன்றி! அடிக்கடி வாருங்கள்...

முகமூடி: உங்கள் தகவலுக்கு நன்றி!

அட, பேரா முக்கியம்? said...

/** www.zecco.com ப்ரோக்கரேஜ் தளத்தில் இலவசமாக (நாளைக்கு 10, மாதம் 40 லிமிட்) வர்த்தகம் செய்யலாம். **/

மாஸ்க்கு, zecco-லெ மினிமம் $2500/மாதம் வண்டி ஓட்டனுமாம்ப்பா... அது எல்லோருக்கும் ஒத்து வருமான்னு தெரியல. இல்லாங்காட்டி, $4.50. அது ஓகேன்னு நினைக்கிறேன்


அது கிடக்கட்டும்,
பாரதி, நீங்க ETF பத்தி எழுதியிருந்தா கொஞ்சம் அதுக்கு தொடுப்பு தர்ரீங்களா?

ரொம்ப நன்றிங்கோவ்.

Related Posts Plugin for WordPress, Blogger...