Sunday, June 10, 2007

சென்னை ரியல் எஸ்டேட்

என் நண்பர்கள் சிலர் சென்னையில் ரியல் எஸ்டேட் துறையில் இருக்கிறார்கள். ஒருவர் பில்டர் - சாதாரண ஆளாக இருந்தவர், எங்கேயோ போய் விட்டார். வருடத்துக்கு பல கோடிகள் வருமானம்.

நண்பர்களுடன் பேசும் போது தவறாமல் நான் விவாதிக்கும் விஷயம் – ரியல் எஸ்டேட், குறிப்பாக தமிழ் நாடு ரியல் எஸ்டேட். நான் “bubble” என்ற வார்த்தையை சொன்னாலே என்னை கிண்டல் செய்வார்கள். சமீபத்தில் அவர்களே சென்னை ரியல் எஸ்டேட் நிதானத்துக்கு வந்திருப்பதாக ஒப்புக் கொள்கிறார்கள்.

விற்பனைக்கு இருக்கும் வீடுகளுக்கு டிமான்ட் குறைந்திருக்கிறது. வீடு/அபார்ட்மென்ட் விற்பனைகளும் குறைந்திருக்கிறது. வீடு விலைகள் குறையவில்லை, ஆனாலும் வீடு வாங்க ஆசைப்படுவர்களுக்கு உள்ள சாய்ஸ் கூடியிருக்கிறது.

இன்னும் சில மாதங்களில் வீடு விலை குறைவதற்கான அறிகுறிகள் இவை. அப்படியே குறைந்தாலும், ஒரு கோடிக்கு விற்கப்படும் வீட்டின் விலை ஐம்பது லட்சமாக குறையப் போவதில்லை. ஓரளவு குறைய வாய்ப்புள்ளது.

இந்தியாவின் I.T.Boom-ல் கம்ப்யூட்டர் துறையில் இருப்பவர்களை விட “மிக அதிக” அளவில் லாபம் அடைந்தவர்கள் ரியல் எஸ்டேட் துறையை சார்ந்தவர்கள் தான். Fortune இதழ் சமீபத்தில் வெளியிட்ட பெரும் பணக்காரர்கள் பட்டியலில் உள்ள பெரும்பாலான புது பில்லியனர்கள் ரியல் எஸ்டேட் துறையில் உள்ளனர்.

இந்திய ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும் வெளி நாட்டு நிறுவனங்கள் பணத்தை அள்ளிக் கொட்டும் வரை இந்திய ரியல் எஸ்டேட் சரிய போவதில்லை. ஆனாலும் பிரச்னை என்று வரும் போது இந்த வெளி நாட்டு நிறுவனங்கள் தான் முதலில் தன் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விடுவார்கள்.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் பல கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து ரியல் எஸ்டேட் நிபுணர்களை வேலைக்கு வைத்திருக்கிறது. இந்தியாவில் ரியல் எஸ்டேட்டில் இனி மேல் பெரிய லாபம் கிடையாது என்று இவர்கள் தீர்மானித்தால், கிடைக்கும் விலைக்கு தன்னிடம் உள்ளவற்றை விற்று விற்று விட்டு அடுத்த நாட்டிற்கு தாவி விடுவார்கள்.

“இந்தியாவில் வீடு விலை குறைந்ததாக சரித்திரமே இல்லை” என்று வசனம் பேசி ஒரு கிரவுண்டு நிலத்தை 3 கோடிக்கு வாங்குபவர்களின் கதி?

சமீபத்தில் வெளியான ஒரு ரிப்போர்ட்டின் படி அமெரிக்காவில் ஒரு ஏக்கர் விளை நிலத்தின் சராசரி விலை $1,900 (Rs. 76,000) மட்டுமே! சென்னை OMR-ல் ஒரு ஏக்கர் விளை நிலத்தின் விலை 50 லட்சம்! (அந்த நிலத்தின் சொந்தக்காரருக்கு கிடைப்பது 30 லட்சம் தான், மீதம் 20 லட்சத்தை இடைத்தரகர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்)

இந்திய ரியல் எஸ்டேட் சாதாரண மனிதனின் affordability-ஐ விட்டு வெகு தூரம் செல்வது ஒரு பக்கம் இருக்க, இந்திய ரியல் எஸ்டேட் விலையேற்றத்தின் காரணமான I.T. Boom-ஐ அசைத்துப் பார்க்கும் ஒரு ரிப்போர்ட்டை BusinessWeek பத்திரிக்கை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது.

Outsourcing செய்வதால் தங்களுக்கு பெரிய லாபம் என்று பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் பிஸினஸ் வீக் ரிப்போர்ட்டின் படி அமெரிக்க பொருளாதாரத்துக்கு அது பெரிய நஷ்டம் என்று நிச்சயமானால், அரசியல் ரீதியாக outsourcing நிறுவனங்களுக்கு பிரச்னைகள் வரும்.

அப்படி பிரச்னைகள் வரும் போது, இந்திய நிறுவனங்களுக்கு கிடைக்கும் outsourcing ஒப்பந்தங்கள் குறையும். அதன் தாக்கம் இந்திய ரியல் எஸ்டேட்டிலும் தெரியும்.

Related Links:

இந்திய ரியல் எஸ்டேட் நீர்க்குமிழியை பற்றி ஒரு சுவாரசியமான விவாதம்

என்னுடைய பழைய பதிவு

5 comments:

சந்தோஷ் aka Santhosh said...

நல்ல செய்தி சொல்லி இருக்கிங்க, நீங்க சொல்லி இருப்பது முற்றிலும் உண்மையே.

வடுவூர் குமார் said...

யாரையும் குறைசொல்லவில்லை.
எவ்வளவு சம்பாதித்து என்ன? காலார ரோட்டில் மனிதனோடு மனிதனாக நடக்கமுடியுமா?நிம்மதியாக தூங்கத்தான் முடியுமா?
அப்படி முடிந்தால் அவர்கள் பணத்தை கட்டுக்குள் வைத்துள்ளார்கள் என்று அர்த்தம்.
என்னையும் இங்கு கூப்பிட்ட சென்னைவாசி..வியாபாரத்தில் நீ 100% வெள்ளையாகவும் வாங்க முடியாது,கருப்பாகவும் வாங்க முடியாது என்ற உண்மை நிலையை சொன்னார்.
அப்படியென்றால் பணம் பண்ணுவதற்கு தேவையில்லாமல் நாமே குழி தோண்டி, அதில் விழுகிறோம்.
ஒவ்வொருவர் நிலமை வேறு எனபதால் அதற்கு தகுந்த மாதிரி எடுத்துக்கொள்ளவேண்டும்.

Anonymous said...

சமீபத்தில் ரூபாய் மதிப்பு உயர்ந்திருப்பதால் ஏற்றுமதி
நிறுவனங்களின் லாபமும், ஊழியர்களின் சம்பளமும்
பாதிக்கப்படும். அப்பொழுது ரியல் எஸ்டேட் இன்னும்
நிதானத்துக்கு வரும்.

Bharathi said...

சந்தோஷ்: நன்றி.

குமார்: எனக்கு புரியவில்லை. இந்த பதிவுக்கும் உங்கள் பின்னூட்டத்துக்கும் தொடர்பு இல்லாதது போல தோன்றுகிறது. விளக்கி எழுதவும், நன்றி.

Anonymous said...

உண்மையை தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள்.

கோசல்ராம்

Related Posts Plugin for WordPress, Blogger...