Sunday, May 20, 2007

அமெரிக்காவில் நல்ல டாக்டர்களை கண்டு பிடிப்பது எப்படி?

நீங்கள் குடும்பஸ்தராக இருந்து அமெரிக்காவுக்கு முதல் முறையாக வந்தாலோ அல்லது வேலை நிமித்தமாக வேறு மாநிலத்துக்கு மாறினாலோ, வழக்கம் போல பல வேலைகள் இருக்கும் – வீடு வாடகைக்கு பிடிப்பதிலிருந்து கார் வாங்குவது வரை. உங்கள் குடும்ப டாக்டரை தேர்ந்தெடுக்க நேரமும் இருக்காது, அது ஒரு பெரிய விஷயமாகவும் தெரியாது.

அவசரமாக டாக்டரிடம் போக வேண்டிய நிலை வரும் போது “Yellow pages”-ஐ கிழித்துக்கொண்டிருக்காமல் அருகிலுள்ள டாக்டர்கள் பற்றிய விபரங்களை முன்கூட்டியே தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.

நீங்கள் போகும் ஊரில் உங்கள் நண்பர்கள் இருந்தால், அவர்களிடம் டாக்டர்கள் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லாத புது இடத்தில் யாரை கேட்பது?

அமெரிக்க உடல் நல துறை மருத்துவமனைகளை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக ஒரு வலைத்தளத்தை நடத்தி வருகிறது. இந்த தளம் இலவசம். உங்கள் வீட்டுக்கு பக்கத்திலுள்ள பல மருத்துவமனைகளை தரம் பார்த்து படத்துடன் ரிப்போர்ட் கொடுக்கிறது. ஒரு சில குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டும் ரிப்போர்ட் கிடைத்தாலும், மருத்துவமனையின் பொதுவான தரத்தை அறிந்து கொள்ள இந்த தளம் உதவும்.

லீப் பிராக் தொண்டு நிறுவனமும் இதே போன்ற சேவையை நடத்துகிறது.

ஒரு குறிப்பிட்ட மருத்துவரைப் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள docinfo, healthgrades, Consumers’ checkbook போன்ற தளங்கள் உதவும். இந்த தளங்கள் அனைத்தும் இலவசம் இல்லை. 10 டாலரிலிருந்து 25 டாலர் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இவை தவிர மெடிக்கல் போர்டு நடத்தும் இலவச வலைத்தளத்தில் உங்களின் மருத்துவர் உண்மையிலியே மருத்துவர் தானா, ஏதாவது தப்பு தண்டா செய்திருக்கிறாரா என்ற விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் இது போன்ற வலைத்தளங்கள் இருந்தால், தயவு செய்து பின்னூட்டத்தில் எழுதுங்கள். இந்த பதிவில் சேர்த்து விடுகிறேன்.

10 comments:

delphine said...

very useful information. Thank you. I dont think we have such websites. I will definitely look up. Thanks.

வடுவூர் குமார் said...

இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் இது போன்ற வலைத்தளங்கள் இருந்தால், தயவு செய்து பின்னூட்டத்தில் எழுதுங்கள். இந்த பதிவில் சேர்த்து விடுகிறேன்.
இதனா வேண்டாம் என்கிறது.இதெல்லாம் நம்மூரில் சொ.சூ. வைத்துக்கொள்வதற்கு ஈடாகும்.:-))
எனக்கு தெரிந்து இல்லை,இன்னும் சில வருடங்கள் ஆகலாம்.

Bharathi said...

delphine, குமார்: நன்றி.

குமார்: சொ.சூ. என்பதன் அர்த்தம் புரியவில்லை, அதனால் உங்கள் ஜோக்கை முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை.

சிறில் அலெக்ஸ் said...

நன்றி நன்றி நன்றி.
:)

Ananth said...

சொ.சூ. - means Sontha selavil Sooniyam!

தென்றல் said...

பயனுள்ள தகவல். நன்றி, Bharathi!

வடுவூர் குமார் said...

சொந்தத்தில் சூடு/ஆப்பு.

Anonymous said...

1. First search your medical Insurance website for doctors and facilities. Otherwise the doctor/Facility may be out-of-network. If OFN then you have to partial pay from out-of-pocket.

2. Almost all the reputed medical insurance companies has information about the doctors as much as they can. Take the name of the doctor/facility name and use Vaduvoor Kumar mentioned websites find more information.

3. Most of the consulting companies has PPO plan so we can choose any doctor. There may be few companies does DMO so you have to go with preferred list of doctors in their network.

4. Always check your medical Card and Prescription Cards for validity atleast carry the group id/Insurance company names.

5. SInce you are paying all the money for medical insurance (willing or not willing) gohead for yearly checkup to avoid any complications in the stressfull life. Also check your dental and vision once a year. Just 2 days a your goto doctor.

6.Medical insurance cards may give discounts on health clubs. Check before signon.

Sengappan.

Bharathi said...

புரிகிறது! நன்றி.

அலெக்ஸ், ஆனந்த், தென்றல்: நன்றி!

சேதுக்கரசி said...

அமெரிக்காவில் பெரும்பாலான மருத்துவமனைகள் physician referral line என்றொரு தொலைபேசி எண் வைத்திருப்பார்கள். அவர்களை அழைத்தால் மருத்துவர் எங்கே படித்தார், என்ன படித்தார், வயதென்ன, எங்கே எத்தனை ஆண்டு அனுபவம், அவருடைய specialization, interests போன்ற தகவல்களும் கிடைக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...