Tuesday, May 08, 2007

இந்திய பங்கு சந்தை இன்னும் உயருமா?

இந்திய நிறுவனங்களுக்கு இது ஒரு பொற்காலம். மற்றுமொரு லாபகரமான குவார்ட்டரை முடித்து விட்டு பார்ட்டிகள் நடக்கின்றன. நிறுவன உயர் அதிகாரிகளின் net worth வானம் நோக்கி போவதால், அளவு கடந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

கடந்த இரண்டு வருடங்களில் இந்திய sensex இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது. இந்திய பங்கு சந்தை இதற்கு மேல் ஏறுவது கடினம் என்று பங்கு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

உயரும் வட்டி விகிதம், வலுவான ரூபாய் இவை இரண்டும் இந்திய நிறுவனங்களின் லாபத்தில் கை வைக்கும் என்று பலர் கருத்து சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

Bombay Stock Exchangeஇந்திய பொருளாதாரம் கடந்த மூன்று வருடங்களில் ஆண்டுக்கு 8 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அடுத்த 6 மாதங்களுக்கு இந்திய பங்கு சந்தையில் அதிக மாற்றம் ஏற்படாது என்று பங்கு வல்லுனர்கள் கூறுகின்றனர். ஆறு மாதங்களுக்கு பிறகு நிறுவனங்களின் லாப கணக்குகளை பொறுத்து பங்கு சந்தை சரியக்கூடும்.

ஒரு டாலருக்கு 44 ரூபாய் இருந்த காலம் போய், ரூபாய் 40.60 தான் இப்போது கிடைக்கிறது. இன்போசிஸ், விப்ரோ, டி.சி.எஸ் போன்ற நிறுவனங்களை இது பாதிக்கும்.

இந்தியாவில் வட்டி விகிதம் தற்போது 7.75 சதவிகிதமாக இருக்கிறது. பெரும்பாலான வங்கிகள் டெபாசிட்டுகளுக்கு 9 சதவிகித வட்டி கொடுப்பதால் இந்திய முதலீட்டாளர்கள் ரிஸ்க் இல்லாமல் 9 சதவிகிதம் சம்பாதிக்கலாம். (அமெரிக்க பரஸ்பர நிதிகளில் பாதிக்கு மேல் 9 சதவிகித லாபம் கூட கொடுப்பதில்லை!) அதனால் இந்திய பங்கு சந்தையிலிருந்து பணம் வெளியேறி வங்கிகளில் டெபாசிட்டாக மாற வாய்ப்பிருக்கிறது.

இந்திய மற்றும் சீன பங்கு சந்தைகள் இன்னும் 12 மாதங்களில் சரியும் என்ற பரவலான எண்ணம் பல வங்கி அதிகாரிகளிடம் உள்ளது. அமெரிக்க பொருளாதார வளர்ச்சி குறைந்தால் இந்திய மற்றும் சீன பங்கு சந்தைகளில் வெளி நாட்டினர் முதலீடு குறையும். அப்படி நடந்தால் பங்கு சந்தைகள் மேலும் சரியும்.

இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தால் இந்திய வட்டி விகிதம், ரூபாயின் மதிப்பு, அமெரிக்க பொருளாதாரம் இவற்றில் ஒரு கண் வைத்திருங்கள். இவை அனைத்திற்கும் உங்கள் பங்கு சந்தை லாபத்தை மாற்றக்கூடிய சக்தி உள்ளது.

4 comments:

ச.சங்கர் said...

உபயோகமான தகவலுக்கு நன்றி பாரதி

Bharathi said...

Thanks for the feedback!

மங்களூர் சிவா said...

"இந்திய பங்கு சந்தை இன்னும் உயருமா?"
மே மாதம் நீங்கள் எழுதிய பதிவு

இன்றுதான் இந்த தளம் படிக்க கிடைத்தது செப்டம்பர் 21,2007.

அதுவும் நல்லதுக்கே.

உங்களுக்கு நான் சொல்லத்தேவை இல்லை இன்றைய சென்செக்ஸ் புள்ளிகள் எவ்வளவு என்று.

மீடியாக்கள் சொல்வது வேத வாக்கு அல்ல. பங்கு சந்தை நிபுணர்களும் சோதிடர்கள் அல்லர்.

இன்றைய 16300 சென்செக்ஸ் புள்ளிகளிலும் சென்செக்ஸ் 10000 இருந்தபோது இருந்த விலையைவிட குறைந்த விலைக்கு தரமான பங்குகள் கிடைக்கிறது. செய்ய வேண்டியது எல்லாம் கொஞ்சம் home work , research, involvement.

உதாரணம் இன்போசிஸ், ஆட்டோ அன்சில்லரி செக்டார் பங்குகள்.

டிரெண்டை நம்பாமல் பங்குகளின் தரத்தை நம்பி விலை குறையும் சமயத்தை பயன்படுத்தி வாங்கி பொருமை காத்தால் நட்டம் வர வாய்ப்பே இல்லை.

Bharathi said...

"நட்டம் வர வாய்ப்பேயில்லை"?!

நீங்கள் excite ஆகியிருக்கிறீர்கள். அவ்வளவு தான். இன்னும் சில வருடங்கள் பங்கு சந்தையில் அனுபவம் கிடைத்தால் உங்கள் கண்ணோட்டம் மாறலாம்.

BTW, பங்கு சந்தை சரியுமா, உயருமா என்று யாருக்கும் தெரியாது. இந்திய பங்கு சந்தைகளில் முதலீடு செய்திருப்பவர்கள் ஜாக்கிரதையாக தங்கள் முதலீட்டுக்களை மானிட்டர் செய்ய வேண்டும், that's what I said.

Related Posts Plugin for WordPress, Blogger...