Sunday, April 15, 2007

பறக்க விடப்பட்ட பதினைந்து மில்லியன் டாலர்கள்!

மிமி மோனிகா வாங் ஹாங்காங் HSBC வங்கியில் உயர்ந்த பதவியில் உள்ளவர். இந்த வங்கியின் பிரைவேட் பேங்க் பிரிவின் தலைமை அதிகாரி.

மோனிகாவுக்கு ரம்பாவின் மேல் அளவு கடந்த நாட்டம் உண்டு. ரம்பா இல்லையென்றால் தன் வாழ்வே இல்லை என்ற அளவுக்கு ஒரு obsession.

Rambha

மோனிகாவின் அபிமான ரம்பா இவரில்லை!

Rumba Dance

மோனிகாவுக்கு ரொம்ப பிடித்தது ரம்பா நடனம்.

ரம்பா என்ற லட்டீன் நடனத்தின் மேல் மோனிகாவுக்கு அளவு கடந்த காதல். அதை முறைப்படி கற்றுக் கொள்வதற்காக தன் குருவுக்கு அவர் கொடுத்த கட்டணம் US$15.4 மில்லியன்!

மோனிகாவின் குரு கேய்னர் பேர்வெதர். கேய்னர் ரம்பா நடன சேம்பியன். உலக அளவில் நடந்த லட்டீன் நடன போட்டிகளில் 15 முறை வென்றவர். அவரும் அவர் கணவர் மிர்கோவும் மோனிகாவுக்கு நடனம் சொல்லிக் கொடுத்தார்கள்.

நடனம் கற்றுக் கொள்வதற்காக 2004-ல் மோனிகா தன் குருவிடம் எட்டு வருட ஒப்பந்தம் போட்டுக் கொண்டார். எட்டு வருட வகுப்புகளுக்கு 15.4 மில்லியன் டாலர்கள் கொடுப்பதாக ஒப்பந்தம்! முன் பணமாக 8 மில்லியன் டாலர் மோனிகா கொடுத்து விட்டார்.

ஒப்பந்தம் போட்ட சில மாதங்களிலேயே ஒப்பந்தத்துக்கு சோதனை வந்து விட்டது. மோனிகா சில அசைவுகளை சரியாக செய்யாததால் அவரை “சோம்பேறி பசு மாடு” என்று மிர்கோ திட்டியிருக்கிறார். 15 மில்லியன் பணத்தையும் கொடுத்து இவனிடம் பசு மாடு என்று திட்டு வாங்க வேண்டியிருக்கிறதே என்று வெறுத்துப் போய் மோனிகா தன் வகுப்புகளை ரத்து செய்து விட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்ய சொல்லியிருக்கிறார்.

கேய்னரும் மிர்கோவும் அதற்கு சம்மதிக்காததால் மோனிகா கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். கேய்னர் பதிலுக்கு இன்னொரு வழக்கு தொடுத்து மீதமுள்ள 7.4 மில்லியன் டாலரும் ஒப்பந்தப்படி மோனிகா தர வேண்டும் என்று தகராறு செய்ய ஹாங்காங் பத்திரிகைகளுக்கு நல்ல தீனி கிடைத்தது.

செப்டம்பர் 2006-ல் ஹாங்காங் கோர்ட் மோனிகாவிற்கு சாதகமாக தீர்ப்பு கூறியது. கேய்னர் தான் வாங்கிய 8 மில்லியன் டாலரும் அதற்கான வட்டியும் சேர்த்து மோனிகாவுக்கு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

மோனிகா HSBC வங்கியில் தொடர்ந்து வேலை செய்து வருகிறார். தன் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை எப்படி சேமிப்பது அல்லது முதலீடு செய்வது என்று ஆலோசனை சொல்கிறார்! பிறருக்கு அறிவுரை சொல்வது சுலபம், அதை தான் பின்பற்றுவது தான் கடினம்!

ரம்பாவின் மேல் உள்ள காதல் இன்னும் போகவில்லை. மோனிகா தன் புது ஆசிரியருக்கு மாதம் US$21,000 கொடுக்கிறார்.

2 comments:

செந்தழல் ரவி said...

எனக்கு சம்பான்னு ஒரு டேன்ஸ் தெரியும். அந்த அக்காவோட இ.மெயில் தாங்க. கத்துக்க வராங்களான்னு பார்ப்போம்...

Bharathi said...

உங்களுக்காக மோனிகாவின் இ-மெயில் அட்ரஸ் தேடினேன், கிடைக்கவில்லை. http://www.hsbcnet.com/hsbc/solutions/contact-us/asia சென்று ஒரு query அனுப்புங்கள்! ;-)

இ-மெயில் தேடும் போது அவர் படம் கிடைத்தது -> http://pictopia.com/perl/gal?provider_id=352&photo_name=ptl%3Aafp%3Axt-mt-afp-orig_name_SGE.KRZ45.060906124508.photo00

Related Posts Plugin for WordPress, Blogger...