Saturday, March 31, 2007

பல வருடங்களாக லாபம் சம்பாதிக்கும் பரஸ்பர நிதிகள்

அமெரிக்க சந்தையில் பங்குகளை ட்ரேட் செய்வதை விட பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வது பாதுகாப்பாக இருக்கிறது. அமெரிக்காவில் 9,000க்கும் மேற்பட்ட பரஸ்பர நிதிகள் உள்ளன. இவற்றில் எதில் முதலீடு செய்வது?

பல வருடங்களாக தொடர்ந்து லாபம் சம்பாதிக்கும் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வது நல்லது. அப்படிப்பட்ட சில நிதிகள்:

FBR Small cap (FBRVX) -- 21.8%, 18%, 17.9%
Janus Overseas (JAOSX) -- 20.5%, 14.2%, 15.3%
CGM Realty (CGMRX) -- 35.8%, 20.3%, 20.5%
Baron Growth (BGRFX) -- 13.5%, 13.7%, 17.8%

இந்த பதிவில் MS Word-ல் உள்ள டேபிளை ஒட்ட முடியவில்லை. மேலே உள்ள லாப சதவிகிதங்களில் முதலாவது கடந்த 5 வருடத்துக்கான சராசரி வருட லாபத்தை குறிக்கிறது. இரண்டாவது 10 வருடத்துக்கான சராசரி வருட லாபம். மூன்றாவது நிதி ஆரம்பித்ததிலிருந்து கிடைத்த சராசரி வருட லாபம்.

9 comments:

"அனல்" அக்னி said...

Hello and Hai.
This is Sunder from Sacramento. I just moved to USA and intrested to do some investments with my savings, and I came thru your blogs. regarding the last post பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வது பாதுகாப்பாக இருக்கிறது. (USA-Investment) are those shares or Bonds? can you explain more how to buy those? Thanks in advance

"அனல்" அக்னி said...

I forgot to add my e-mail my Id is sundara.gandam@gmail.com

Thamizhan said...

நிதிகள் நல்லதுதான்.
குறைந்தது ஓராண்டவது போடவேண்டும்.
ஒரே நிதியில் போடாமல் உலகநிதிகள்,தங்கம்,பெரிய சிறிய என்று பகுத்துப் போடலாம்.
கடந்த ஆண்டை மட்டும் பார்க்காமல் கட்ந்த 3,5 ஆண்டுகள் பார்க்க வேண்டும்.
Vanguard,Fidelity செல்வில் குறைந்தவை.
அனைவரும் இவற்றைப் பற்றி தெரிந்து கொள்வது நல்லது.உங்கள் பணியை வரவேற்கின்றேன்,நன்றி.

Bharathi said...

தமிழன்: நன்றி.

சுந்தருக்கு விளக்கமான மின்னஞ்சல் அனுப்பி விட்டேன். பரஸ்பர நிதிகள் பங்குகளும் பாண்டுகளும் கலந்தது, ஒவ்வொரு நிதிக்கும் அந்த கலவை வேறுபடும்.

தென்றல் said...

பங்காளியின்
/http://panguvaniham.wordpress.com/
மூலம் இங்கு வந்தேன்.

பயனுள்ள தகவல், பாரதி!
தமிழனுக்கும் நன்றி

/சுந்தருக்கு விளக்கமான மின்னஞ்சல் அனுப்பி விட்டேன். /
அந்த விவரங்களை தெரிந்து கொள்ளலாமா? மீண்டும் நன்றி, பாரதி!

Bharathi said...

தென்றலுக்கு நன்றி! சுந்தருக்கு அனுப்பிய மின்னஞ்சல் விபரம்:

"You can buy the mutual funds in any brokerage that offers these funds. Try Fidelity.com or Etrade.com;

These are not shares or bonds. Mutual fund is the collection of shares and bonds. "

தென்றல் said...

இந்தியாவில் போலதானா! முதலில் நான் வாங்கப்போவது, CGM Realty நிதிதான்;)
நன்றி, பாரதி!

இன்னொரு கேள்வி...
NRI (குறிப்பாக அமெரிக்கா)கள் இந்திய பங்குகளை வாங்க முடியுமா? (thru' icicidirect.com etc.,)

Bharathi said...

நிச்சயமாக முடியும். எல்லா வங்கிகளுமே உங்களை கரம் கூப்பி வரவேற்கும்.

NRI என்று சொன்னால், கூடுதலான சில விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டியதிருக்கும், RBI-ன் சட்ட திட்டங்களுக்காக.

ICICIdirect, Geojit, Sharekhan அனைத்து தளங்களிலும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்காக தனி பிரிவே ஒதுக்கியிருக்கிறார்கள்.

NRI கணக்கில் நீங்கள் சம்பாதிக்கும் லாபத்தை திரும்பவும் டாலராக மாற்றுவது சுலபமில்லை. சில விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் ரூபாய் லாபத்தை டாலராக மாற்ற முடியும். வங்கிகளின் வலைத்தளங்களில் இது பற்றிய விபரங்கள் இருக்கும்.

தென்றல் said...

நன்றி, பாரதி!

அமெரிக்கா NRIகள், தற்சமயம் ICICIdirect மூலமாக invest பண்ண முடியாது என்று நினைக்கிறேன். ICICI வங்கியில் பணிபுரியும் நண்பர்களிடம் இருந்து பதில் வந்தால், தெரிவிக்கிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...