Monday, March 19, 2007

உலக சந்தைகள்

கடந்த இரண்டு வாரங்களில் உலக சந்தைகள் அனைத்தும் சரியான அடிபட்டு கொஞ்சம் கொஞ்சமாக எழுந்து வருகிறது. இது ஒரு சாதாரண correction தான், நீண்ட கால நோக்கோடு சந்தையில் முதலீடு செய்திருந்தால் கலங்க வேண்டிய அவசியமில்லை.

குறுகிய கால நோக்கோடு day-trading செய்வது அதிக ரிஸ்க்கான சமாசாரம் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. என்னுடன் வேலை பார்த்த வங்கி நண்பர் ஒரே நாளில் 10,000 டாலரை AHS பங்கில் இழந்து விட்டார். Short-term option-ல் விளையாடினார், சந்தை அவருடன் விளையாடி விட்டது.

உலக சந்தைகள் ஒன்றையொன்று சார்ந்துள்ளன. சீனாவில் கரன்சி மதிப்பு உயர்ந்தால், உலகம் முழுதும் அது பிரதிபலிக்கிறது. இந்தியாவில் தேர்தல் முடிவுகள் மாறியமைந்தால் உலக சந்தைகள் ஆட்டம் காண்கின்றது. ஜப்பானில் வட்டி விகிதம் உயர்ந்தால், அமெரிக்கர்கள் பலருக்கு வயிற்றுப்போக்கு உண்டாகிறது.

கடந்த வார சந்தை சரிவுகளுக்கு இரண்டு முக்கியமான காரணங்கள்.

நான் பலமுறை எழுதியுள்ளபடி அமெரிக்க ரியல் எஸ்டேட் சரிந்து கொண்டே போகிறது. அதிக ரிஸ்க்கான வாடிக்கையாளர்களுக்கு கண்களை மூடிக்கொண்டு கடன் கொடுத்த வங்கிகளுக்கு பல பில்லியன் டாலர்கள் நஷ்டம். அந்த வங்கிகளின் பங்குகள் தானும் சரிந்து உலக சந்தைகளையும் கவிழ்த்து விட்டது.

இரண்டாவது காரணம் Carry-trade. இது ஒரு சுவாரசியமான விஷயம்.

ஜப்பானில் பல வருடங்களாக வட்டி விகிதம் பூஜ்யமாக இருந்தது! வெறும் பூஜ்யம் தான்! பிறகு அதை கொஞ்சமாக உயர்த்தினார்கள். தற்போதைய வட்டி வெறும் 0.5 சதவிகிதம் தான்!

ஜப்பானில் வட்டி இவ்வளவு குறைவாக இருக்கும்போது அங்கிருந்து கடன் வாங்கி அமெரிக்க வங்கிகளில் 6% வட்டிக்கு டெபாசிட் போட்டால் ஒரு வருடத்துக்கு 5.5 சதவிகிதம் லாபம் கிடைக்குமே? அவ்வளவு லாபமும் எந்த முதலீடும் இல்லாமல் கிடைக்கும் பணமல்லவா?!

இந்த கேள்விகள் பல பேர் கண்களில் டாலர்களை ஊஞ்சலாட வைத்தது. பல வங்கிகள் மற்றும் hedge-funds போன்ற நிதி நிறுவனங்கள் கடந்த சில வருடங்களாக ஜப்பானில் கடன் வாங்கி அமெரிக்க, ஐரோப்பிய வங்கிகளில் அதை முதலீடு செய்து லாபம் பார்த்து வந்தன.

இப்படி செய்வது ரிஸ்க் இல்லாத விஷயம் அல்ல. ஒரு நாட்டிலிருந்து கடன் வாங்கி இன்னொரு நாட்டில் முதலீடு செய்யும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் – கரன்சிகளின் மதிப்பு.

ஜப்பானிய கரன்சியின் மதிப்பும் அமெரிக்க கரன்சியின் மதிப்பும் தினமும் மாறுகின்றது. சில நேரங்களில் ஜப்பானிய கரன்சியில் கடன் வாங்கி அமெரிக்க வங்கியின் டெபாசிட்டில் கிடைக்கும் லாபத்தை விட ஜப்பான் கரன்சியின் மதிப்பு மாறுவதால் ஏற்படும் நஷ்டம் அதிகமாக இருக்கும். சில வங்கிகள் currency-futures ஒப்பந்தங்கள் மூலமாக நஷ்டத்தை கட்டுப்படுத்துகிறார்கள். சிலர் அதீத தன்னம்பிக்கை காரணமாக முழு முதலீடையும் இழந்து விடுகிறார்கள்.

Carry-trade செய்த சில வங்கிகள் ஜப்பான் கரன்சியின் சமீபத்திய volatility-ஐ பார்த்து பயந்து போய் அவர்களிடமிருந்த அனைத்து பங்குகளையும் விற்று ஜப்பானியர்களிடம் வாங்கிய கடனை அடைத்ததால், பங்கு சந்தை கீழே விழுந்து விட்டது.

மேலே கண்ட இரண்டு காரணங்களும் இன்னும் சில மாதங்களுக்கு இருக்கத்தான் போகிறது. Subprime வீட்டுக்கடன் கொடுத்த சில வங்கிகளின் நிலைமை தான் வெளியே தெரிகிறது. இன்னும் சில வாரங்களில் மற்ற வங்கிகளின் நிலைமையும் சந்தையில் தெரியும்.

Carry-trade போன்ற சமாசாரங்களில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால், பல மில்லியன் டாலர்கள் தேவைப்படும். இருந்தாலும் நம்மை போன்ற சிறு முதலீட்டாளர்களுக்காக Deutsche வங்கி "PowerShares DB G10 Currency Harvest Fund" என்ற ETF-ஐ துவங்கியிருக்கிறது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ETF என்பதால் கவனமாக முதலீடு செய்யவும்.

7 comments:

Boston Bala said...

தெளிவான அலசல். பின்னணியை விளக்கியதற்கு நன்றி.

Bharathi said...

வணக்கம் பாலா... நன்றி!

Raj said...

Nice blog. Keep up the good work.

sarwan said...

நல்ல பதிவு

Bharathi said...

Raj, Sarwan: Thank you for the feedback.

இளந்திரையன் said...

பாரதி !

நேரம் இருக்கும் போதெல்லாம் நிறைய பங்குச் சந்தை பற்றி அலசுங்கள். என்னைப் போன்ற புதியவர்களுக்கு உதவியாயிருக்கும். நீங்கள் குறிப்பிட்ட ice இன் பங்கை வாங்காமல் பின்னர் கவலைப் பட்டேன்.
தொடர்ந்தும் உங்கள் வலைப்பூவைப் படித்து வருகின்றேன். நன்றாக இருக்கின்றது.(என்ன... எழுதுவது போதாமல் இருக்கின்றது)
அன்புடன் இளந்திரையன்

Bharathi said...

நன்றி இளந்திரையன்! நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுத முயற்சிக்கிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...