Saturday, March 10, 2007

பறக்கும் அரண்மனை

ஒரு பக்கம் அடுத்த வேலை சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் மக்கள். இன்னொரு பக்கம் தனது விமானத்தில் என்னென்ன வசதிகள் இருந்தால் கௌரவம் என்று பட்டியல் போடும் சிலர்…

அமெரிக்காவில் 10,000 தனியார் விமானங்கள் உள்ளன. இவை அனைத்தும் நல்ல வசதிகளுடனும் பாதுகாப்புடனும் செய்யப்பட்டவை. இந்த விமானங்களில் 10 – 20 பேர் பயணம் செய்யலாம். இந்த வசதிகள் போதாதென்று சிலர் பெரிய விமானங்களை ஆர்டர் செய்திருக்கிறார்கள்.

தனியாருக்கான பெரிய விமானங்களை செய்வதற்காக போயிங் நிறுவனம் இது வரை 11 ஆர்டர்களை எடுத்திருக்கிறது. ஒரு விமானத்தின் விலை உத்தேசமாக 660 கோடி ரூபாய்! விமானத்தின் உட்புறம் செய்யும் அலங்கார வேலைகளை (Interior decoration) சேர்த்தால் 700 கோடியை தாண்டும்.

660 கோடி விமானத்தின் சினிமா தியேட்டர்
1936 கோடி விமானத்தின் டைனிங் ஏரியா

இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல சமீபத்தில் அரபு நாட்டிலிருந்து ஒருவர் ஏர்-பஸ் நிறுவனத்திற்கு 1936 கோடி ரூபாய்க்கு விமானம் செய்வதற்காக (Just ஒரு விமானம் தான்) ஆர்டர் கொடுத்திருக்கிறார். இந்த விமானத்திற்கு “Flying palace” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த விமானத்தில் இரண்டு டைனிங் ஏரியா, 600 சதுர அடி படுக்கையறை, அராபிய பாலைவனம் போன்ற lounge, ஹாட் டப் மற்றும் Missile defence systems இருக்கும்.

இந்த விமானத்தை ஆர்டர் செய்த புண்ணியவானின் பெயரை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். ஒரு அரபு நாட்டின் அதிபதி என்று பேச்சு அடிபடுகிறது.

கொடுத்து வைச்ச மகராசா!

2 comments:

சிறில் அலெக்ஸ் said...

ஏ அப்பா.. இந்தியா ப்ஓறதுக்கு ஒரு டிக்கட் கிடைக்குமா?
:)

Bharathi said...

டிக்கட்டுக்கு பணம் கொடுக்கவில்லையென்றால், அராபிய நாட்டு பாலைவனத்தில் விட்டு விட்டு போய் விடுவார்கள்!

தங்கள் வருகைக்கு நன்றி, அடிக்கடி வாருங்கள். பறக்கும் அரண்மனையில் பறக்காவிட்டாலும், கனவிலாவது பறப்போம்!

Related Posts Plugin for WordPress, Blogger...