Inflation என்பதை தமிழில் பணவீக்கம் என்று சொல்கிறார்கள். விலைவீக்கம் என்பதே சரியான மொழிபெயர்ப்பு.
போன வருடம் ஒரு பொருள் 10 ரூபாய்க்கு விற்று, இன்று அதன் விலை 30 ரூபாயாக இருந்தால் Inflation எகிறி விட்டது என்று அர்த்தம். இது ஒரு simple definition. இதை முழுவதுமாக தமிழில் விளக்க சில பக்கங்கள் ஆகும்.
நம் நாட்டின் பணவீக்கம் போன வாரம் 6.58%க்கு எகிறி விட்டது. கடந்த இரு வருடங்களில் காணாத சதவிகிதம். இந்த வாரம் 6.7%க்கு போய் விட்டது. இந்திய பத்திரிகைகள் அனைத்தும் இப்போது இதை பெரிது செய்து எழுதுகின்றன. கடந்த பல வருடங்களாகவே நம் நாட்டில் பணவீக்கம் ஒரு பெரிய பிரச்னை. 
பணவீக்கம் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே கவிழ்த்து விடும். பணவீக்கம் ஒரு அளவிற்கு மேல் போய் விட்டால் அதற்கு Hyperinflation என்று பெயர். அப்படிப்பட்ட சூழ்நிலையால் 1923ல் ஜெர்மன் நாட்டின் பொருளாதாரம் தலைகீழாக விழுந்தது.
ஜெர்மன் பெண்மணிகள் தங்கள் வீட்டின் அடுப்புகளில் விறகுகளை எரிப்பதற்கு பதிலாக ஜெர்மன் மார்க் நோட்டுகளை எரித்தார்கள். அவர்களின் சமையல் அப்படி தான் நடந்தது! விறகுகளின் விலை ஆகாயத்துக்கு போய் விட்டதால் விறகுகளை வாங்குவதை விட மார்க் நோட்டுகளை எரிப்பது சிக்கனமாக இருந்தது!
சென்னை, மும்பாய் போன்ற நகரங்களில் உள்ள பெரிய கடைகளில் உள்ளே போய் வெளியே வந்தால் சான் பிராசிஸ்கோவில் ஆகும் செலவாகின்றது. இன்னும் சில வருடங்களில் எப்படி இருக்குமோ, தெரியவில்லை.
சென்னை நகரத்தின் வீட்டு வாடகை நிலைமையை கேட்டால் தலை சுற்றுகிறது. என் நண்பன் தன் மென்பொருள் நிறுவனத்துக்கு இடம் தேடிக் கொண்டிருக்கிறான். அடையாறில் 720 சதுர அடி இடத்துக்கு 40,000 ரூபாய் வாடகை கேட்டிருக்கிறார்கள். மனம் நொந்து போய் அவன் எழுதிய மின்னஞ்சலைப் பற்றி ஒரு தனி பதிவே போடலாம்.
நம் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நல்ல திறமைசாலி. ஆனால் Inflation விஷயத்தில் அவர் சரியான முடிவுகள் எடுக்கவில்லையோ என்று தோன்றுகிறது. போன வாரம் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை கூட்டியது. இருந்தாலும் வீட்டு கடன்களுக்கு மட்டும் வட்டி விகிதத்தை அதிகரிக்க கூடாது என்று அனைத்து வங்கிகளுக்கும் ப. சிதம்பரம் உத்தரவிட்டார். That’s weird. அதை கண்டு கொள்ளாமல் பல வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி விட்டன. வட்டி விகிதத்தை உயர்த்துவது பணவீக்கத்தை கட்டுப்படுத்த சிறந்த வழி.
ப. சிதம்பரம் & கம்பெனி திறமையுடன் செயல்பட்டு பணவீக்கத்தை கட்டுப்படுத்தினால் தான் இந்திய பொருளாதாரம் இன்னும் சிறப்பாக இருக்கும். Super Power ஆக வேண்டும் என்ற நம் கனவும் மெய்ப்படும்.
Related Links:
http://www.usagold.com/GermanNightmare.html
http://www.uri.edu/artsci/newecn/Classes/Art/INT1/Mac/1930s/1930sAA.html
Saturday, February 17, 2007
பணவீக்கம்
Posted by
Bharathi
at
8:18 AM
Labels: பொருளாதாரம்
Subscribe to:
Post Comments (Atom)


3 comments:
Inflation என்பதை தமிழில் பணவீக்கம் என்று சொல்கிறார்கள். விலைவீக்கம் என்பதே சரியான மொழிபெயர்ப்பு.
***
பணவீக்கம் என்பது சரியான மொழிபெயர்ப்பு தான்.
Inflation என்பது பொருளின் விலையைச் சார்ந்து வந்தாலும் அது பொருளின் விலையை மட்டும் இல்லாமல், மக்களின் வாங்கும் திறன், பணத்தின் மதிப்பு ஆகியவற்றையும் குறிக்கிறது.
When Inflation raises - மக்களின் வாங்கும் திறன் குறைகிறது, பணத்தின் மதிப்பு குறைகிறது. இதனாலேயே இதனை பணவீக்கம் என்கிறார்கள்
பணவீக்கத்தை நிர்ணயம் செய்யும் அடிப்படை காரணி - விலை
வாங்க தமிழ் சசி, ரொம்ப நாளாச்சு உங்க (virtual) குரல் கேட்டு!
I look at this way:
Inflation உயரும் போது எது "வீங்குகிறது"?! பணமா, விலையா? விலை தான் வீங்குகிறது. பணம் சுருங்குகிறது. அப்படியிருக்கும் போது அதை எப்படி "பணவீக்கம்" என்று சொல்ல முடியும்?
எது வீங்கினாலும், அதற்கு வைத்தியம் பார்ப்பது தான் நல்லது, டாக்டர் ரெட்டி (RBI) நல்ல மருந்து கொடுப்பாரா என்று பார்ப்போம்! ;-)
பாரதி, பணவீக்கமோ விலைவீக்கமோ இரண்டுமே நமக்கு கெடுதல் தான் போலிருக்கிறது. :-(
Post a Comment